Sunday, July 16, 2006

Pudhu Pazhakkam

ஒன்னரை மாதமாய் ஒரு புது பழக்கம். சர்க்குலேஷன் லைப்ரரி.
நேற்று.
"என்ன புக் தேடறீங்க ?"
"சாண்டில்யன் - யவன ராணி !"
ஒரு மாதிரி சிரித்தார். அது அவரது இயல்பான சிரிப்பு அல்ல என்று தோன்றியது.
"இப்பொல்லம் யாரு சார் அந்த மாதிரி படிக்கறாங்க ? இதோ ... புரியுதோ புரியலையோ.. இந்த புக்கை எல்லாரும் வாங்கிட்டு போறாங்க..."
அவர் கை காட்டிய இடத்தில் "த டா வின்சி கோட்" இருந்த்தது.
நான் நிறைய புஸ்தகம் படிப்பவனில்லை. இருந்த்தாலும், இதற்குள்ளும் இளையராஜா-ஏ.ஆர்.ரகுமான் சண்டை இருப்பதாகத் தோன்றியது. அவரிடம் ஒரு அசட்டுத்தனமான சிரிப்பை உதிர்த்துவிட்டு அடுத்த ரேக்குக்கு சென்று தேடலைத் தொடர்ந்த்தேன். மறுபடியும் புலம்புவார் என நினைத்தேன்.
"இப்பொல்லாம் சார் ....!" என்று நான் நினைத்தது போலவே ஆரம்பித்து என் பார்வைக்காக Pause விட்டார்.
பார்த்தேன்.
"ஆரம்பிச்ச புதுசுல நிறைய்ய மெம்பர்ஸ்.. ஆன இந்த காலத்தில் யாரும் படிக்கறதே இல்ல. பொழுது போக வசதி இல்லதவங்க மட்டும்தான் லைப்ரரி வராங்க.. வசதி இருக்கரவங்க டிவிடில பொழுதை ஓட்டறாங்க. சில பேர், பெருமைக்காக Landmark போய் புஸ்தகம் வாங்கி ஷோ-கேஸ்ல வெச்சுக்கறாங்க.. ! ஹ்ம்ம்.. என்னமோ.. எல்லாம் மாறிப்போச்சு !"
ஆஹா ! தவறான வேளையில் இவரிடம் மாட்டிக்கொண்டோமே என்று வடிவேலு கணக்காய் மனம் சொன்னது. அவசரமவரசமாய்.. ரிச்சார்ட் பாச் "Running from Safety"யும் பாலகுமாரனின் "அப்பம் வடை தயிர்சாதம்"மும் அகப்பட்டன.
பாலகுமாரனைப் பார்த்து "ரொம்ப ந்ல்ல புக் !" என்றார்.
அடுத்து அவர் ஏதாவது சொல்வதற்கு முன் வெளியேறினேன். வீட்டில் அமர்ந்து யோசித்தேன்.
பல பேர், புஸ்த்தகம் படிப்பதை ஒரு மகோன்னதமான காரியமாக கருதுகிறார்கள். படிப்பவற்கள், படிக்காதவற்கள் அந்த இன்பத்தை இழப்பதாக எண்ணுகிறார்கள். படிப்பவற்களுக்குள்ளே, தி.ஜானகிராமன் ஜாதியினர் ராஜேஷ்குமார் ஜாதியை வெறுக்கின்றனர். "என்னடா ராணிமுத்து மாதிரி படிச்சுண்டிருக்கே ? ரா. கி. ரங்கராஜன் படிச்சிருக்கியோ ? அருமையா இருக்கும்". நான் என்ன ஜாதி என்று யோசித்தேன். போன வாரம் சுஜாதா. அதற்கு முன் ஜான் க்ரிஷாம். அதற்கு முன் அகிலன்.
"போறான் பாருங்க ! படிக்கறானா இல்லையான்னு தெரியலை... ஆனா வாரா வாரம் ரெண்டு புக் எடுத்திட்டு போறான். கொண்டு போய் வெச்சுக்கிட்டு, யார் கிட்டவாவது படம் காமிச்சிட்டு இருப்பான்.. இந்த காலத்து பசங்க எங்கே சார் படிக்கறாங்க !!" என்று என்னைப்பற்றி யாரிடமாவது சொல்லிக்கொண்டுதான் இருப்பார். அவர்.

4 comments:

Anonymous said...

Beautiful story !

//படிப்பவற்களுக்குள்ளே, தி.ஜானகிராமன் ஜாதியினர் ராஜேஷ்குமார் ஜாதியை வெறுக்கின்றனர்//
Are you serious about this statement?Havent heard of such!

Btw,the last tamil story i read was from my 10+2 std,Tamil 2nd paper..:-(

Anonymous said...

Couple of suggestions:
1.Why not send your short story collections to any magazines ?
2.get registered at Tamizh manam and post your creations there !

Goodluck !

Anonymous said...

பிழையை சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும். ஆனால் இது typo error மாதிரி தெரியாததால் தங்களுக்கு சுட்டி காட்டுகிறேன்

//படிப்பவற்கள், படிக்காதவற்கள்// should be படிப்பவர்கள் படிக்காதவர்கள்...

Anonymous said...

wow..i really liked this one...
u really write short stories very well..this one was so different....