Wednesday, January 03, 2007

மட்டமான கற்பனை !

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை.

அதெல்லாம் ஒரு காலம் ! பெண்களை மென்மையானவர்களாக காட்டிய காலம்.

நிற்க.
எனக்கு பழைய காலத்தைக் காட்டி புலம்பும் பெரியவர்களைக் கண்டால் பிடிக்காது. அவர்கள் இன்னும் வளராதவர்களாகவே எனக்குத் தோன்றும். நான் அப்படி இருக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். ஆனால், நேற்று கம்பெனி பஸ்ஸில் இல்லம் திரும்பிக்கொண்டிருக்கையில் மனதிற்குள் புலம்ப ஆரம்பித்து விட்டேன். திடீர் ப்ரவாகமாகப் பெருகி நிறம்பி வழியும் பல பண்பலை வரிசைகளில் ஏதோ ஒரு பண்பில்லாத வரிசை ஒலிபரப்பிய பாடலின் ஒரு வரி, என்னை இவ்வாறு புலம்ப வைத்துள்ளது.

"கலவரமாய் நான் இருக்கேன்... கல்லடிக்க நீ வாரியா ?" என்று ஒரு பெண் பாடும் பாடல் அது.

இந்த வரி வந்தவுடன், சுற்றும் முற்றும் பார்த்தேன். கண்ணில் தெரிந்தவர் அனைவரும் காதுகளை iPODடிடம் பாடல் மேயவிட்டிருந்தனர். எனக்கு காதுகளில் earphones வைப்பது பிடிக்காது. டிரைவரும் நானும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தோம் போலும்.

சரி விஷயத்திற்கு வருவோம். உவமை, உருவகம் - இரண்டும் தமிழ் கவிதைகளின் உயிர் நாடி. ஆங்கிலத்தில் Metaphor என்று சொல்லுவார்கள். இவை கவிஞர்களின் கற்பனைத் திறத்திற்கேற்ப வெளிப்படும்.

"பச்சைமாமலை போல் மேனி ! பவளவாய்க் கமலச் செங்கண் !" - என்ன ஒரு அருமையான உவமைகள்.

இப்பொழுதுள்ள கவிஞர்களின் கற்பனை வறண்டு விட்டதாகவே கருதவேண்டியதுள்ளது. "வாடி ! வாடி ! வாடி ! கைப்படாத சீ.டி. " இதில் உருவகம் உள்ளது. உருவகம் செய்வதால் உணர்த்த வருவதை எளிதாக சொல்ல முடியும. ஆனால் பொறுத்தமான உருவகமா ? இதற்கு என்ன அர்த்தம். ஏதோ ! பயன்படுத்தவேண்டுமே என்பதற்காக இதை எழுதியுள்ளனர்.

"அழகான ராட்சசியே !"
"காதல் கிறுக்கா !"
"அழகிய அசுரா"
"காதல் பிசாசே! "

முதலில் கேட்டபோது முற்போக்கான கற்பனையாகத் தெரிந்தது.. ஆனால் போகப் போக அலுப்பு தட்டிவிட்டது. போதும் நிறுத்துங்கப்பா ! நீங்களும் உங்கள் கற்பனையும். (எனது பரிந்த்துரை வரிகள் - "அசிங்கமான தேவதையே !", "அழுக்கான வெண்ணிலவே!")

ஹ்ம்ம்ம் ! எல்லாம் மாறிப் போச்சு !
இன்ஃபாக்ட், நேற்றைய கவிதைகள்கூட நலமாக இருந்தன. "சிறு பறவை நீயானால்.. உன் வானம் நானே !"... "நீ காற்று !நான் மரம் ! என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்".

இனிமேல் இதெல்லாம கூட அரிதாகிவிடும்.

13 comments:

Anonymous said...

hmmmm...enna porutha varikkum.."ichhi tha ichhi tha..Kannathula ichhi thaa...
kanangala pichhu thaa.." idhu oru paataa? Kevalam illaingala ?

Anonymous said...

Tamizhil padithen. mikka mahizchi!

Venkatrangan said...

Kavalai Vendam Keerthi,

Nichayam nalla paadalgal varum.....Neengal virumbum varigal kuda idam perum....Ellam oru vattam thaan.....Sutri Sutri Meendum Kilambiya thisai noki vaandhu serum....

( thayai koorndhu...indha "word verification" cancel seyyavum)

Anonymous said...

Abasamana padal varigal pala aandugalagavey irukirathu. Ithai 80 kalil prabala
paduthiyar Ilayaraja than.
Aathadi pavadai kathada
Abcd ungappan thadi
Ponmeni oruguthey
Nila kayuthu
Mattrum pala mukkal mungal padalkalin thanthai avar than. Intha Parimanathin adutha padi than nengal koorum padalgal. Rajavin horny sounds ulla padal kalai vida ennai kettal Kai padatha CD satru kuraivana abasamaga karuthuven.

Anonymous said...

oru Alosanai, Neengal padalgal ezhudhungalen. Tamizhukku seyyum sevaiyaga irukkum. Ungalal mudiyum ena oru nambikkai.En Naame irnagi sakadaiyai suththa paduththa kudadhu ?

Narayanan Venkitu said...

என்னது எண்ணங்கள்:

காலப் போக்கில் இவை எல்லாம் எல்லாத் துறைகளிலும் நடப்பது தான்.

ஆனால்....

இவைகளுக்கெல்லம் ஒரு எல்லை இருக்கணும். அதை தாண்டும் பொழுது தான்...அருவருப்பாக
இருக்கு!

KRTY said...

Sree, :) Idhellam paravaa illai. "Aan Aasi Naan ! Pen Aasai Nee ! Aasaigal Per aasaidhaan !" - Enge Porul SOllunga Paarpom !

soJourner, Nandri.

Venkatrangan, Unmai. I know we are getting back to a cycle. But all im talking about is the lack of imagination.

anon #1, aah ! A different "Freakanomics" perspective !

anon #2, Suththam ! I tried posting in tamil after quite a long time. Enakku Urainadaye varaadhu ! Approm Kavidhai nadai eppadi varum.

Venkittu Sir, Unmai dhaan neengal solvadhu ! Tamil songs have crossed limits. They are becoming punjent and untolerable.

Me too said...

Guess, everyone gets to that polambal(andha kaalathule..!) sometime!!

Are those lines from that disgusting Simbu-Nayan-Reema Song? I don't know which is more appalling, the song, the picturisation or that a huge team works behind the making of such songs!!

மு.கார்த்திகேயன் said...

நானும் இதைப் பற்றி பல தடவை எண்ணி பார்த்து வேதனை பட்டதுண்டு கீர்த்தி.. என்ன செய்வது..

ஏன்யா இப்படி எழுதுறீங்கன்னு கேட்டா மக்கள் இதைத்தானே ரசிக்கிறாங்க அப்படின்னு சொல்றாங்க..

ஆனா தாமரையோட வரிகள் கொஞ்சம் புதுமையாக உள்ளது.. முழுவதும் அப்பழுக்கற்ற தமிழாகவே உள்ளது.. வேட்டையாடு விளையாடு மற்றும் காக்க காக்க பாடல்கள் மிகவும் வெற்றி பெற்றதே.. அதுவும் வி.வி யில் ஒரு காவல்துறை அதிகாரி பற்றி, தூய தமிழிலில் எழுதியது மிகவும் அருமை.

எல்லோரும் இது போல எழுதினால் நமக்கு கசக்கவா போகிறது கீர்த்தி..

வெங்கட் word verification பற்றி சொன்னதை நான் வழிமொழிகிறேன் கீர்த்தி..

Anonymous said...

melum tamizhil ezhuthuveergal endru nambukiren, ethirpaarkiren.

KRTY said...

Aparna, Im sure we got at this pretty earlier than what our elders used to. :) Andha Kaalathil ellam ivvlalavu seekiram pulamba maattaanga (recursive pulambal).. :D

Karthikeyan, Thaamarai is certainly a good mention here. She is splendid.
Word verification is a good shield. I dont want to moderate comments.. but i dont want spam either. Thats why !!

soourner, :) Will do !

tt_giant said...

vithyaasamaa seyyanum, ezhudanum nu yosichchaa sila vaati indha maadhiri abaththam kooda varum.

you write well in tamil keerthi.

CVR said...

நிறைய நல்ல பாட்டுகளும் வந்துகொண்டு தான் இருக்கிறது!!

வித்தியாசமாய் செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எதாவது எக்குதப்பாய் சில பேர் எழுதுவார்கள். அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுங்கள்!! :)