Wednesday, January 31, 2007

உல்லத்தை நான் சொல்லவா ! - Updated

என்னதான் பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல்கள் சுமாராக இருந்த்தாலும், மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். காரணம், வேறு புதிய பாடல்கள் எதுவும் பிரமாதமாக சோபிக்கவில்லை.

அதில் "உனக்குள் நானே உருகும் இரவில்" எனத்துவங்கும் பாடல், இரண்டு Versions கொண்டது. ஒன்று பாம்பே ஜெயஸ்ரீ பாடியது. மற்றொன்று மதுஸ்ரீ பாடியது. ஒரு உபயேகம் இல்லாத உதாரணம் - இருண்ட பாதையில் சென்று கொண்டிருக்க்கும் போது வெளிடச்சத்துடன் ஒரு வண்டி நம்மைக் கடந்து சென்றபின், இருளின் தன்மை அதிகம் ஆனது போலத்தோன்றும்.

அது போல, பாம்பே ஜெயஸ்ரீ பாடலை இரண்டு மூன்று முறை கேட்டபின் மதுஸ்ரீ பாடலைக் கேட்டேன். இரண்டுக்கும் காண்ட்ராஸ்ட் செமத்தியாக இருக்கும். ஆனால் இரண்டாவது பாடலின் முதல் வரியிலேயே செவிளில் அறைந்த்தது போன்ற உணர்வு.

ஏன் ? கேளுங்கள்.


powered by ODEO

குறைந்தபட்சம் இரண்டுபேராவது இந்த "ள" "ல" பிழையால் மனம் வெறுத்திருப்பார்கள்.
ஒன்று நான். மற்றொருவர் பாடலாசிரியை தாமரை .

ஹாரிஸ் ஜெயராஜ் இதை கவனிக்கவேண்டியது அவசியம். சில கோடிபேர் கேட்கும் பாடலில் உச்சரிப்புப் பிழை இருந்தால் அது கேர்லெஸ்னசையே காட்டுகிறது. ஏ. ஆர். ரகுமான் முதற்கொண்டு மும்பைக் குரல்களைத் தமிழ் பாடல்களுக்கு உபயோகப்படுத்தும் அனைத்து இசையமைப்பாளர்களும் உச்சரிப்புப்பிழையை வடிகட்டவேண்டும். நாக்கு மடித்து "ய ர ள வ ழ ல" என்று கணீறென்று உச்சரிக்கத்தெரிந்த பாடகர்கள் போதும் நமக்கு. உதித் நாராயனன் மலலை மொலியில் பாடுவது சிலருக்குப்பிடிக்கலாம். ஆனால் எனக்கு கோபம்தான் வருகிறது. இராமதாஸ், திருமாவளவன் சேர்ந்து "தூய தமிழ் வரிகள் உள்ள பாடல் உள்ள படத்திற்கு வரிக்கு வரி - வரி ரத்து" என்று அறிவித்தால், தமிழ் கொஞ்சமாகச் செழிக்கும். (அதுசரி, சிபி சத்யராஜ் நடிக்கும் 'லீ" என்ற படப்பெயர் தமிழா ?)

தாமரை இதுவரை எழுதி, நான் கேட்ட பாடல்கள் அனைத்திலும் தமிழ் விளையாடும். சில மிகக்கடினமான வார்த்தைகளை பயன் படுத்துவார். அத்தனை நேரம் கொஞ்சு தமிழ் பேசிய ஜோதிகா "கலாபக் காதலா !" என்று பாடுவது நெருடத்தான் செய்யும். இருக்கட்டும் பரவாயில்லை. இப்படியாவது தமிழில் பாடல்கள் வரட்டும்.

9 comments:

Ravi said...

Ahaa Keerthi, idhai kaetkaradhukku romba sandhoshama irukku. I thought I was the only one polambufying against these Bombay singers but looks like I have company. Yes, I hate people killing Tamil, all in the name of style. Another blogger Vinesh (vineshks.blogspot.com) had expressed similar views sometime back. Unless people start expressing strong disapproval, it is going to continue [Btw, Tamil pesura, padikara makkalukke, La and la vidyasapaduthi pesuraangala-nu theriyala]

Anonymous said...

http://xs.to/xs.php?h=xs512&d=07063&f=vaali.JPG

Anonymous said...

http://xs.to/xs.php?h=xs512&d=07063&f=vaali.JPG

Found this on a forward .. poor spelling. good laugh

Anonymous said...

Hi,

I dont think music directors are careless. All these mistakes are just Intentional. Not only Harris, also yuvan Shankar Raja makes sure that every song of his has at least few words pronouced wrongly. Manmadhan, Vallavan etc...ella padangalilum indha pizhaigal undu.

RK

Kaps said...

i also found this to be disgusting. also listen to solli tharava and pidikkum songs in Aalwar. they are equally bad. Muhammad Salamad is worser than Udit Narayan and Sukhwinder. Madhusree is bad as usual.

sugan said...

Hey..I'm with u on the pronounciation front..but...the song was by Actress Rohini & not thamarai..( no wonder interesting words like kalabha kadalan, padagai..werent there..anyways Rohini as such has given a decent debut)

Anonymous said...

I've been noticing this too.

It's a shame that there is a lot of nit picking up North about the S.I singers for their Accents, while these things are going to deaf ears in Kollywood.

There is another theory that... as long as the voice is sweet ( Shreya Goshal) it's ok. But, no..no.not for me. The MD's should make the singers sing and pronounce the right way.

Anonymous said...

can't say more than agreeing with you...diction is one of the main aspects that music directors should look into...in my opinion, in the current MDs, Ramesh Vinayagam is the one, in who's music, i haven't observed any such mistakes...btw, Lee-yoda title-la 'Leedhaaran' engira apdingaradha font size 2-la pottu, Lee apdingaradha font size 100-la potrukkaanga....enga endha rules vechaalum, adhula ottaiya kandupidippaan, nammaalu ;-))

drashkum said...

what u have said is 1000% true