Tuesday, January 30, 2007

Bombay Jayashree Ramnath

"முதலாளி ! மோட்டார் சரியா வேலை செய்ய மாட்டேங்குது !!"

முதலாளி கொஞ்சம் கூட யோசிக்காமல்... "ப்ளம்பர் பொன்னுவேலை நான் வரச்சொன்னேன்னு சொல்லு ! போ !!" என்பார்.

-----------------------------

"சார் ! திருப்பி திருப்பி கணக்கு பண்ணி பார்த்துட்டேன். மூவாயிரத்தி ஐநூறு இடிக்குது !!"

மேனேஜர் அவரை நிமிர்ந்த்து கூட பார்க்காமல், "நம்ம பாஷ்யம் ஐயங்கார்கிட்டே லெட்ஜரை குடு ! எல்லாம் டேலி ஆயிடும் !!!"

-----------------------------

"ஹாரிஸ் !! நம்ம படத்துல செம ஃபீலிங்கான பாட்டு ஒன்னு வருது !! அது எப்படி இருக்கனும்னா.,..."

ஹாரிஸ் ஜெயராஜ் இடைமறித்து... டெலிஃபோனை இயக்குகிறார். "ஹலோ ! பாம்பே ஜெயஸ்ரீ மேடமா ? நான் ம்யூசிக் டைரக்ட்டர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசறன். கொஞ்சம் ஸ்டுடியோ வர முடியுமா ?"

-----------------------------

மின்னலே படத்தில் ஆரம்பித்து கடைசியாக பச்சைக்கிளி முத்துச்சரம் வரைக்கும், திகட்ட திகட்ட பாம்பே ஜெயஸ்ரீயின் குரலைப் பயன்படுத்தியிருக்கிறார், இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். லேசாக போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. பாடல்களும் a little Unimaginative ரகமாகவே உள்ளது.

பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் சந்தேகமே இல்லாமல் பாடலுக்குப் பாடல் சொக்குகிறது. அவர் ஒரே வரி பாடிய "எங்கேயோ உன் முகம் ! நான் பார்த்த ஞாபகம் !" (தொட்டி ஜெயா) கூட எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று.

"பாண்டினாடனைக் கண்டு என் மனம் பசலை கொண்டதென்ன" - இருவர் படத்தில் தான் இவரது முதல் சினிமா பாடல் ஒலித்தது (ஆமாம் தானே ?). அப்புறம் "வசீகரா !" மூலம் மூலை முடுக்கு, இண்டு இடுக்கு, சந்து சாவடி என எல்லா இடத்திலும் ப்ராகாசமாய் ப்ரபலம் ஆகிவிட்டார்.

ஆனால் படத்துக்குப் படம் வெர்ஸடாலிடி இல்லாமல் ஒரே மாதிரி, மயங்கிய நிலையில் இருக்கும் ஹீரோயின் மப்பில் பாடுவது போலவே இருக்கிறது. இந்த தமிழ் சினிமா செண்டிமென்டுக்கு பாம்பே மேடமும் பலிகடா ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். சீக்கிரம் தொலைந்த்து போகாமல் இருக்க ஒரே வழி, கொஞ்சம் Genere மாற்றிப் பாடுவது. யேசுதாஸ் பாடிய "தண்ணி தொட்டி தேடிவந்த்த கன்னுகுட்டி நான் !" அவரது ரெப்யுடேஷனை பாதிக்கவில்லை.

பாம்பே ஜெயஸ்ரீ சமிபமாக ஒரு புஸ்தகம் வெளியிட்டிருக்கிரார். "Voices WITHIN" என்ற அப்புத்தகத்தில் கர்னாடக சங்கீதத்தின் வேர்களை ஃபாஸில் ஸ்டடி செய்து இருக்கிறார். மேலும் தகவல்கள் இங்கே.

சொன்னால் நம்பமாட்டீர்கள். தினமும் இவரது "ஜோ ! ஜோ ! ஜோ ! ராமா !" (வாத்ஸல்யம்) கேட்டபின் தான் தூங்குவேன். அவ்வளவு இனிமையான குரல். இசையில் அவ்வளவு நேர்த்தி. இவரது கர்னாடக சங்கீத அறிவை அலச எனக்கு யோக்யதை இல்லை. அதனால் சுப்புடு இவரைப்பற்றி சொன்னதை இங்கே இடைச்சொறுகுகிறேன்.
" Bombay Jayashri is the Steffi Graf of Carnatic Music. There is a striking resemblance in their deportment, concentration and professionalism when at work. More importantly, they both have been preceded by a number of great ladies in their respective professions, they shall both bestow on them a higher stature with their achievements…"
Subbudu, The Statesman. Nov 13,'95
குட் லக் மேடம்.

பச்சைக்கிளி முத்துச்சரம் - நல்ல பேர். சில பாடல்கள் சுமார் ரகம். பாக்கி பாடல்கள் ரீசைக்கிள்ட் சரக்கு. பொதுவாக கெளதம் மேனனின் படங்கள் வெற்றி அடைய பாடல்கள் முக்கிய காரணம் வகிக்கும். இந்த முறை பாடல்கள் அவ்வளவு சிறப்பாக இல்லையாதலால், படம் பூரணமாக இருந்தாலே ஒழிய தேறுவது துர்லபம்.

ஆனால் தமிழ் மக்களை க்ரகிக்க முடியாது.பார்ப்போம்.

7 comments:

Anonymous said...

கண்டிப்பாக ஹாரிஸ் தன் பாடல்கலின் இசை முரையை மாற்ற வேண்டியது அவசியம். பச்சை கிளி முத்து சரம், உன்னாலே உன்னாலே, இரண்டிலும் ஒரே மாதிரியாண இசை தான் கேட்கிறது

Senthil Kumar said...

Keerthi,

You have spoken my mind. And, the first part of the post is too good.

Anonymous said...

Her first song was for Illayaraja. She had sung KAI VEENAYAI YENDUM KALAIVAANIYEE from Vietnam Colony much before Iruvar

Anonymous said...

Parzaniavum thappu. Her first song was for MSV. Dont remember the song or the movie, though. I think it was a bharathiyar song

Anonymous said...

from your blog i guess you are an pessimistic person.grow up keerthi.

try to chamge your attitude.

KRTY said...

Shrikanth, oh ! .. I havent heard Unnale Unnale.

Simply Senthil, hence the title "Welcome to your senses"

parzania, oh !! or is it ?

anon#1, Let me research on it.

anon#2, cant do !!:)

Ananya Mahadevan said...

ரொம்ப வித்தியாசமா இருக்கு உங்கள் கண்ணோட்டம். :) ஹாரிஸ் பத்தின ஜோக்கை ரசித்தேன். எங்களுக்கெல்லாம் பாம்பே ஜெயஸ்ரீ எப்படி பாடினாலும் பிடிக்கும்!