Friday, February 02, 2007

கலக்கிட்டடா நண்பா !

ப்ளாக் ஆரம்பிச்சுக் குடுத்தோமே ! என்னதான் செய்கிறான் என்று கண்டறிய இன்றுகாலை ஸ்ரீகாந்தின் வலைப்பதிவிற்கு விசிட் அடித்தேன். மஹாராஜபுரம் ஸந்தானத்தையும், ஏ. ஆர். ரகுமானையும் போட்டு கலக்கியிருந்த்தான்.

குறிப்பாக அவன் பாடிய "உயிரும் நீயே !" என்னுடைய ஃபேவரிட். (உன்னிகிருஷ்ணன் வந்த புதிதில் அவர் பாடிய பாடல்கள் எனக்கு மிகவும் விருப்பமானவை. இப்பொழுது வரும் உன்னி பாடல்கள் நன்றாக இருந்தாலும் பிடிப்பதில்லை. )

"உயிரும் நீயே !" பாடல் வரிகள் அட்டகாசமாக இருக்கும்.

"உன் கண்ணில் வழியும், ஒரு துளி போதும்..
கடலும் முழுகும் தாயே !
உன் காலடி மட்டும் தருவாய் தாயே !
ஸ்வர்க்கம் என்பது பொய்யே !"

இதை மிக உருக்கமாக பாடியிருப்பார் உன்னி. சப்தஸ்வரங்கள், ராகமாலிகா போன்ற இசை நிகழ்ச்சிகளில் சில அம்மாஞ்சி பாடகர்கள் இந்த பாடலையும் "கனவா ! நீ காற்றா !" (ரட்சகன்) என்ற பாடலையும் பாடக் கேட்கலாம். வெள்ளித்திரையில் ஹிட் ஆகாத பாடல்கள், சின்னத்திரையிலாவது ஹிட்டானது குறித்து மகிழ்ச்சி.

பவித்ரா படத்தில் "அழகு நிலவு" என்ற பாடல் வரும். சும்மா.. சூப்பர் பாட்டு ! ஏ. ஆர். ரகுமான் இசையில் சில பொக்கிஷங்கள் வெளியில் தெரியாமலேயே இறந்துபோனது அப்படங்களின் இயக்குனர்களின் குற்றம். நல்ல பாடல்களுக்கு உருவம் கொடுக்கத் தவறிவிடுவார்கள். "வேட்டையாடு விளையாடு - பார்த்த முதல் நாளே" போல. ஹீரோவும் ஹீரோயினும் பைக்கில் உட்கார்ந்துகொண்டு, பின்னால் ஸ்க்ரீனில் வண்டி ஒடுவதுபோல் காட்சியமைப்பது எம். ஜீ. ஆர் காலத்துடன் முடிந்தது என்றல்லவா நினைத்தோம் ?

1 comment:

Ravi said...

Keerthi, Andha "Azhagu Nilave" song, wow... I am happy atleast one person mentioned that song. Amazing, appadiye vera ulaguthukku konda poyidum. Infact the BGM of this song was used by ARR in the climax of Pudhiya Mugam. Idhe sayalil "Chinnanjiru Kiliye"-nu oru paatu from Kannukul Nilavu. Kaettu paarunga. Music is by IR and the singer again is Chithra. Again, too good.