Monday, February 26, 2007

A Very Few Senior Citizens of India

அறுபது தான்டி ஓய்வில் இருக்கும் முதியவர்களில் சிலர் இப்பொழுதுதான் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

பால் கார்ட் ரென்யூ செய்வது, ஈ.பீ. பில் கட்டுவது, பாங்கில் பணம் போடுவது, ரிட்டையர் ஆகப்போகும் ஷட்டகர் வீட்டுக்குச் சென்று வரப்போகும் பணத்தை எதில் போடலாம் என்று அறிவுரை செய்வது, லோக்கல் அசோசியேஷன் மீட்டிங்கில் எழுந்து நின்று கம்ப்ளெய்ன் பண்ணுவது, பப்புவை ஸ்கூலுக்கு கொண்டு சென்று அழைத்து வருதல் என்று பல்வேறு காரியங்களில் ஈடுபட்டு ஓய்வு வாழ்க்கையை பிஸியாக வைத்திருப்பர். அல்லது இவையெல்லாம் அவர்மீது திணிக்கப்பட்ட வேலைகளாகக் கூட இருக்கலாம். வீட்டில் அடக்க ஒடுக்கமாய் பெரியவர்களுக்கான மரியாதையுடன் இருக்கும் இவர்கள், வெளியே ஜபர்தஸ்த்தாக சில செயல்கள் செய்வார்கள். நீங்கள் கவனித்ததுண்டா ?

குரியர் கொடுக்கவரும் பசங்களிடம் ID கார்ட் கேட்டு மிரட்டுவது, பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் வரும் போலீஸ் கான்ஸ்டபிளிடம் இங்கிலீஷில் பீட்டர் விட்டு லஞ்சம் கொடுக்க முடியாது என்று அதட்டுவது, தான் நிற்காத க்யூவாக இருந்தாலும் கூட க்யூவை மீறும் நபரை அரைமணி நேரம் திட்டித் தீர்ப்பது... இப்படி பல பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இவர்களில் பெரும்பான்மையானோர் அந்த காலத்து பி.யு.சி. படித்து ஓரளவு ஆங்கில அறிவு பெற்றவர்களாக இருப்பர். ஜிப்பா வேஷ்டி சகிதம் விபுதி இட்டுக்கொண்டு இவர்கள் பாங்குக்கு கிளம்பிவிட்டார்கள் என்றாலே மேனேஜர் கவனமாக இருப்பது நல்லது.

"ஐ வான்ட் டு மேக் எ கம்ப்ளெய்ன்ட் டு யுவர் ஹையர் ஒஃபிசர். வாட் இஸ் யுவர் நேம்..." என்று கண்டிப்பாக ஒரு டையலாக் உண்டு.

நான் இதை யார் மனமும் புண்படும் எண்ணத்தில் எழுதவில்லை. ஆனால் நான் பார்த்த மிகச்சில Senior Citizens இப்படித்தான் இருக்கிறார்கள். அது நல்லதும் கூட. ஆனால் அவர்களுக்கு இந்தக் கோபமும் உத்வேகமும் ரிட்டையர் ஆவதற்கு முன்னால் இருந்திருக்குமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுதுதான், நின்று சண்டை போடுவதற்கான நேரம் இவர்களுக்கு கிடைக்கிறது போலும்.

நேற்று நான் வேலைக்கு மட்டம் அடித்து விட்டு பாங்கிற்கு சென்றேன். அங்கே தனது த்ராணியையெல்லாம் திரட்டி ஒரு பெரியவர் யுத்தம் செய்து கொண்டிருந்தார். விஷயம் மிக சிம்பிளானது. அவரது மருமகன் பாங்கில் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. காரணம் "சிக்னேச்சர் டீவியேஷன்" என்றார்கள். அதை ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும் ? இவர் தனது ட்ரேட்மார்க் டையலாக்கை எடுத்து எறிந்தார்.

"திஸ் இஸ் அட்ராஷியஸ் ! தீஸ் ப்ரைவேட் பாங்க்ஸ் ஆர் ட்ரீட்டிங் தி கஸ்டமர்ஸ் வெரி பாட்லி ! ஐ வாண்ட் எ லெட்டர், தட் தி செக் ஹாஸ் பவுன்ஸ்ட் ! ஐ ஆல்சோ வாண்ட் டு மேக் எ கம்ப்ளெய்ண்ட் டு யுவர் சுபீரியர் ஓஃபிசர் ! வாட் இஸ் யுவர் நேம் ?".

இதற்கெல்லாம் அசராத அந்தப் பெண், "சித்ரா சார் ! மை மேனேஜர் சிட்ஸ் இன் தட் ரூம் ! நெக்ஸ்ட் டோக்கண் யாரு ?" என்று அடுத்த நபரை கவனிக்கத்துவங்கி விட்டார்.

மேனேஜர் ரூமை நோக்கி தள்ளாடியபடியே செல்லும் அப்பெரியவரை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இவர்களுக்கு எல்லாம் தான் செய்வதில் சில செயல்கள் தவறு என்று புரிய வைப்பது கடினம் என்று தோன்றியது.

நிற்க. ! எல்லா பெரியவர்களையும் நான் சிட்டிக்காட்டவில்லை. சிலர் கேள்வி கேட்பதில் நியாயம் இருக்கவே செய்யும். ஆனால் சில பெரியவர்கள் உப்பு-பெறாத விஷயத்திற்கெல்லாம் ஆர்க்யூ செய்வது, சண்டை போடுவது அவர்கள் மீது உண்டான மரியாதையை குறைக்கும்.

இப்படி சில பெரியவர்கள் இருக்க, சிலர் வீட்டைவிட்டே வெளியேவராத ஆசிர்வாதம் வழங்கும் மெஷினாய் முடங்கிக் கிடக்கிறார்கள். வெகு சிலர் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சில சமயம் "செகண்ட் சைல்டிஷ்னஸ்"தான் வாழ்க்கையின் கொடுமையான பருவமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

4 comments:

Chakra said...

Agree with your last stmt, Keerthi. A good post.

Me too said...

IMO, it is the insecurity that they are useless/powerless. Atleast in their prime they would've 'veratified' a peon/subbordinate!

Instead of second childhood, I would rather say it is second adolescence(rendungettaan stage) and !

Anonymous said...

Reminds me of my thatha, who is no more. He retired as an Executive Engr from Southn Railways. Probably he thought he still had the power and everyone he confronted was his subordinate in Railways.

Vetirmagal said...

Nice blog. Thanks. But I could not read the Tamizh words clearly. Could not figure out the Font.