Saturday, March 31, 2007

மயிரிழை

தில்லு முல்லு படத்தில் "மூக்குக்கு கீழே ! தம்மாதூண்டு... " என்று ஒரு டையலாக் வரும், மீசையை பற்றி.

நமது பல ஹீரோக்கள், மீசை எடுத்தால் கூட கெட்டப் சேஞ்ச் என்று நினைக்கிறார்கள். அந்த காலத்து எம்.ஜி.ஆர் கன்னத்தில் மச்சம் வைத்து வந்த்தால் கூட நம்பியாருக்கு அடையாளம் தெரியாது. கமல் உயரம் குறைத்து, பருமன் ஏற்றி, உடம்பு எல்லாம் ரோமம் மழித்து என்று மெனக்கெட்டு பாராட்டு வாங்குவதை விட, எம்.ஜி.ஆர் ஒரு மச்சம் மட்டும் வைத்து வாங்கி விடுவார். மைக்கெல் மதன காம ராஜன் படத்தின் ஒரு காட்சியில், பிரபலமான மீசை உள்ளவர்களின் படங்களை ராஜு வீட்டில் காமித்திருப்பார். சார்லி சாப்ளின் படமும் அதில் இருக்கும் என ஞாபகம்.

பக்கத்தில் நீங்கள் பார்ப்பது சார்லி சாப்ளின் படம் என்றால் நம்ப முடிகிறதா ? அது சரி. இதில் ஒன்றும் ஸ்வாரஸ்யம் இல்லை தான். மொமென்டரி ப்ளெஷர். அவ்வளவே..

விகிபீடியாவை புறட்டிக்கொண்டிருக்கும் போது, காலில் இடறியது இந்த படம். அரை டவுசர் காலத்தில் தூர்தர்ஷன் உபயத்தில் லாரெல் ஹார்டி, சார்லி சாப்ளின் பார்த்து கெக்கெ பெக்கெ என்று மகிழ்ந்ததுண்டு. அதில் சில சமயம் சோகம் இழைந்தோடும். இப்பொழுது அவரது "மாடர்ன் டைம்ஸ்", "தி க்ரேட் டிக்டேட்டர்" போன்ற படங்களை பார்க்கும் போது, அவரது காலத்தில் அந்த தரம், தைரியம் மற்றும் டைமிங் சென்ஸ் இவற்றை பாராட்டாமல் இருக்க முடியாது. ஒரு "ஐகான்" (icon) போல ஆகிவிட்ட அவரது ட்ராம்ப் என்னும் பாத்திரத்துக்கான ஒப்பனையை அவர் எவ்வாறு தெரிவு செய்தார் என்பதை தனது சுயசரிதையில் எழுதி இருப்பார்.

"I wanted everything to be a contradiction: the pants baggy, the coat tight, the hat small and the shoes large. I was undecided whether to look old or young, but remembering Sennet had expected me to be a much older man, I added a small mustache, which I reasoned, would add age without hiding my expression.I had no idea of the character. But the moment I was dressed, the clothes and the makeup made me feel the person he was. I began to know him, and by the time I walked on stage he was fully born"

கீழ்காணும் யூ ட்யூப் விடியோ "தி க்ரேட் டிக்டேட்டர்" படத்தில் வரும் சாப்ளின் பேசும் காட்சி. சார்லி சாப்ளின் பேசி நடித்தது வெகு சிறு படங்களே. அதிலும் இந்தக்காட்சி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. க்ளிக் செய்து பாருங்கள். அவரது நடிப்புத்திறன் தெரியும்.





சர்வாதிகாரத்தை எதிர்த்து அவர் அத்தனை தைரியமாக எழுப்பிய குரல். ஹிட்லரை நேருக்கு நேராக சாடியது அந்தப்படம். 1940ல் அமெரிக்காவில் இருந்த அந்த தைரியம் இன்னும் தமிழகம் வராதது மடமை. இந்தியாவில் மீடியா இன்னும் முதுகெலும்பில்லாமல் தான் இருக்கிறது. அதிலும் இனியும் இந்தியாவில் சினிமாவை கலை என்று யாராலும் சொல்ல முடியாது. ஹ்ம்ம். புலம்பி புலம்பி வாய் தான் வலிக்கிறது.


அதுசரி ! தமிழக முதல்வரே "நேற்றைய பந்த், முழு வெற்றி" என்று சந்தோஷப்படுவது பற்றி நாம் பெருமைப்பட வேண்டுமா ? அல்லது வேதனைப்பட வேண்டுமா ? முழு வெற்றி என்றால் என்ன அர்த்தம். அடப்போங்கப்பா ! சார்லி சாப்ளினாவது அமெரிக்கவில் இருந்த்து கொண்டுதான் ஜெர்மனியை எள்ளி நகையாடினார். மெட்ராஸில் இருந்துகொண்டே நான் கேட்டால், அடுத்த போஸ்ட் எழுத நான் இருக்க மாட்டேன்.. ! நல்ல வேளை ! என் ப்ளாகை மூனு நாலு பேருக்கு மேல் யாரும் சீரியசாக படிப்பதில்லை...

5 comments:

Chakra said...

>> நல்ல வேளை ! என் ப்ளாகை மூனு நாலு பேருக்கு மேல் யாரும் சீரியசாக படிப்பதில்லை...

- Andha 3, 4 perla thamizhaga mudhalvarum oruvar.

Robin said...

>> நல்ல வேளை ! என் ப்ளாகை மூனு நாலு பேருக்கு மேல் யாரும் சீரியசாக படிப்பதில்லை...

- Andha 3, 4 perla 2 வது....

Nice way of linking Charlie Chaplin to TN's politics...

Also how many of us can identify the celebrities at their young age??. .. Here too, Charlie Chaplin is at a very young age.. So it is not a mark of his make-up.. But rather the hero using make-up to hide himself shows how there is no creativity in the Kollywood..

Unknown said...

3 , 4 peru 103447 times visit pannittangala...2.5 years lla...sooper... :)

SHAILENDRA said...

"Bandh was a grand success"- what a statement to make, by the head of the state!

Arunram said...

I am one of the direct victims of the Bandh, having travelled "standing" from Bangalore to Salem. Reached Salem at Midnight and the firstpage of Dinakaran read "தமிழகம் புதுவை ஸ்தம்பித்தது". Adappaavigala!!