Monday, March 05, 2007

Coffee with Avyukta..



மன்னிக்கவும். கெளதமி நடத்தும் "அன்புடன்..." நிகழ்ச்சியின் ஃபோட்டோ கிடைக்கவில்லை. கெளதமி சன் டிவியில் ஆரம்பித்துள்ள நிகழ்ச்சியின் துவக்க விருந்தினராக கமல் வந்திருந்தார். எப்பொழுதும் போல சுவாரஸ்யமாகவும் ஹாஸ்யமாகவும் பேசினார்.

ஆனால் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட ஃபிலிம் காமிக்கிறார்கள். லேப்டாப்பில் படம் காமிக்கிறார்கள். கையை பதித்து ஃப்ரேம் போட்டு வைக்கிறார்கள். என்னெனமோ செய்கிறார்கள். புதுமையாகத்தான் இருக்கிறது. ஆனால் பாராட்ட முடியவில்லை.

நான் டி.வி. பார்ப்பது அரிது (சின்ன "ரி" கரெக்ட் தானே ?). இரண்டரை வருடங்களாக டி.வி. பார்ப்பதை நிறுத்தி வைத்துள்ளேன். ஆனாலும் பணிமுடித்து வந்து காலணி கழற்றும்போது ஓடும் இந்த காஃப்பி வித் அனு போன்ற நிகழ்ச்சிகளை முதல் விளம்பரம் வரும் வரை பார்த்திருக்கிறேன்.

எல்லா டி.வி. நிகழ்ச்சிகள் போல், இதிலும் அபத்தங்கள் ஏராளம். கேள்வி கேட்பது என்பது கலை. அதிலும் இது போன்ற நிகழ்ச்சிகளில், ஸ்வாரஸ்யமான பதில் வரவழைக்கக் கூடிய கேள்விகள் கேட்க வேண்டும். அனுஹாசனும், சுச்சீயும் சில நல்ல கேள்விகள் கேட்பார்கள் என நண்பர்கள் சொன்னார்கள்.

ஆனால் வணக்கம் தமிழகம் (சன் டி.வி), காலை மலர் (ஜெயா டி.வி.) போன்ற நிகழ்ச்சிகளில் சில பல ப்ரபலங்களை அழைத்து, அரைவேக்காட்டுத்தனமான கேள்விகள் கேட்பார்கள். ".. இதப்பற்றி நீங்கள் என்ன நினைக்கறீங்க... ?" என்று முடியும் கேள்விகள் எனக்கு சில கெட்ட வார்த்தைகளை ஞாபகப்படுத்தும்.

ஒரு பிரபலத்தை, அவர் பிரபலம் ஆன காரணம் தாண்டி அலசுவது எனக்குப் பிடிக்காது. கமலுக்கு எத்தனை பெண்துணைகள் இருந்த்தால் எனக்கென்ன ? இளையராஜாவுக்கு எண்ணிலடங்கா ஈகோ இருந்தால் எனக்கென்ன... நல்ல படமும், நல்ல இசையும் நான் காசு கொடுக்கும் போது கிடைக்க வேண்டும். அவ்வளவே..

"நீங்க சின்ன வயசுல ஓனான் பிடிச்சீங்களாமே ? அதைப்பற்றி நம்ம நேயர்களிடம் கொஞ்சம் சொல்லுங்க..."

ஹ்ம்ம்ம்...

இந்த நிகழ்ச்சிகள் மறைமுகமாக சில நன்மைகள் செய்கின்றன... என்ன சொல்லுங்க பார்க்கலாம்..

1 comment:

Anonymous said...

tv-addiction koraiyum....mega-serial-kku these are better...rendu dhaan nanmainnu thonudhu...neengale sollidunga