Monday, March 12, 2007

Snack Time

DSC05829

என் வீட்டு கடை வாசலில் லாலி லாலியாய் தொங்கும் மசாலா-சிப்ஸ் பொட்டலங்கள்.

அங்கிள் சிப்ஸ், ரஃபுள்ஸ் என ஆரம்பித்தது. இப்பொழுது, கடைகளில் கிடைக்கும் சிப்ஸ் பேக்கட்டுகளின் வகைகள் எண்ணிலடங்காதவையாகி விட்டன. புதிதாக மார்க்கெட்டில் என்ன வந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள, கண்ணாடி அணியாத ஸ்கூல் சிறுவனிடம் கேளுங்கள். கரெக்ட்டாக சொல்லுவான்.

சிறுவர்கள் மத்தியில் இவ்வகை சிப்ஸ் மிகப்பிரபலம். தச்சுவிடம் காரியம் ஆக வேண்டுமானால் நான் லஞ்சம் கொடுப்பது ஒரு லேஸ், அல்லது ஒரு குர்குரே. அவ்வளவுதான், சிப்ஸ் பேக் என் கையில் இருக்கும் வரை, எனக்கு ராஜ உபசாரம் தான். மசாலா, நம்கின், ச்மேக், கட்டா, மீட்டா என பல வகைகள். ஹிந்தி பேர் போட்டு சில.. பெயரை புரிந்து கொள்ள முடியாத ஆங்கிலத்தில் சில.

இவற்றின் ஹெல்த் ஹசார்ட்ஸைப் பற்றி எனக்கு கவலை இல்லை. குழந்தைகள் மத்தியில் இவை உருவாக்கும் அடிக்ஷன் பற்றி கூட கவலை இல்லை. ஆனால் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் கொள்ளளவு தான் வையிற்றெரிச்சலாக இருக்கிறது. சில சமயம் மடத்தனமாகவும் இருக்கிறது.

ஒருமுறை பணக்காரனாக இருந்தபோது (சம்பளம் வாங்க ஆரம்பிப்பதற்கு முன்) இருபது ரூபாய் லேஸ் பேக்கெட் ஒன்று வாங்கினேன். தலையணை அளவில் இருந்த பேக்கெட்டை அடைத்து வைக்க பெரிய சம்படத்தையெல்லம் ஒழித்தேன். மறுனாள் மதியம் பிரித்த போது பல்பு அடித்தது. பேக்கெட்டின் அதல பாதாளத்தில் கொஞ்சமாக இருந்தது, லேஸ். அப்பொழுதுதான் புரிந்தது, லேஸ் என்பது ஆகுபெயர் என்று. :)

ப்ரிங்கிள் என்று ஒரு சிப்ஸ் அறிமுகமான வேகத்தில் தொலைந்து போனது. விலை அதிகம். ஆனால் அட்டகாசமான டேஸ்ட். இன்ஃபாக்ட், அளவும் அதிகம். இதைத்தவிர வந்த, மற்றும் இப்பொழுது புற்றீசலாய் தினம் தினம் அறிமுகம் ஆகும் பல சிப்ஸ் பேக்கெட்டுகளில் காற்றுதான் ஜாஸ்தியாக இருக்கிறது.

ட்ராஃபிக் ராமசாமி மாதிரி யாராவது கன்ஸ்யூமர் கோர்ட்டில் இது பற்றி கேஸ் போட்டால் நன்றாக இருக்கும். முந்தைய தலைமுறை எழுதிய கவிதை போல், காற்றை பையில் அடைத்து விற்க ஆரம்பித்துவிட்டார்கள். இனிமேல் இது எதையும் வாங்கக் கூடாது என்று இன்று காலையிலிருந்து முடிவு செய்து விட்டேன்.

அசட்டு தித்திப்பும், உதட்டோரக்காரமும் இல்லாமல் வில்லிவாக்கம் செல்வம் கடையில் இருக்கும் நேந்திரம் சிப்ஸ் வாங்கி வரப்போகிறேன். தட்டு நிறைய கொட்டிப்பார்த்து மகிழலாம்.

5 comments:

Ravi said...

Romba unmai Keerthi. Infact, in the recent past, pala murai, I wanted to have normal plain chips but almost all places (incl our office canteen) have only Lays and similar brands. Somehow andha taste ennakku pidikkala.

Chakra said...

இந்த வெளி நாட்டு சிப்ஸ் எல்லாத்தையும் விட நம்மூர் நேந்திரங்காய் சிப்ஸும், கடலை மிட்டாயும் சாப்ட்டா அது தான் தேவாமிர்தம்.

Chakra said...

btw, Pringles is the #1 brand in UK. Very very tasty, but indeed a bit expensive.

Sowmya said...

The way they sell these products shows that they are not very sure about the quality of the product they make.

Intha , free nu oru sticker tharangale atha solren.Jetix channel la vara avlo rangers stickers free nu pottu thane sales oho nu nadakuthu..

Evlo nal nu pappom !

Anonymous said...

8 Rs. la 5.Rs kaththu and 3.Rs chips