Friday, April 13, 2007

இராமதாஸ் மிரட்டினாரோ என்னவோ தெரியவில்லை... சிவாஜி படத்தில் உதித் நாரயன் மிக அற்புதமாக பாடியிருக்கிறார்.

"விண்வெளி தலைக்கு மேல் திறந்ததோ.. அடடா !
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ..
அது என்னுடன் தேனீர் கொண்டதோ !!"

சாதாரணமான பாடல் வரிகள்தான். வறண்ட தமிழ் கேட்டவர்களுக்கு அற்புதமாகத் தோன்றலாம். ஆனால் ய,ர,ல,வ,ழ,ள உதித் அண்ணன் அதிகமாக அழகாக உச்சரித்துள்ள பாடல்.

தமிழின் அழகு இடையினம் தான். உதித் நாரயன் மீது அதைக் கொலை செய்த குற்றச்சாட்டு நீங்காது போல இருந்தது. ஆனால் இந்த தடவை கலக்கி விட்டார்.

ஒரு விஷயம். உதித் நாரயன் மீது குறை சொன்னவர்கள் (நான் உட்பட) இந்த வெண்பாவைப் படித்து தங்களது உச்சரிப்புத் திறன்களை சோதித்துப்பார்த்துக் கொள்ளலாம்.

கண்ணன் எழுதியுள்ள பாடலின் பொருள், அவர் ப்ளாகில் பார்க்கலாம். ஆனால் பொருளைவிட, இந்தப் பாடல் இடையின எழுத்துக்களால் மட்டுமே இயற்றப்பட்டதை கவனிக்கவும்.

வல்லவ ரல்லார் வளையாரா? வாயவிழ
வில்லவரே! வாயாரை வேல்விழியால் - வெல்லுவீ
ருள்ளவரில் வாழ்வுளா ரில்லவரே! யாழுளா
ரள்ளுவ ருள்ளவரை! யார்?

ஆயுத எழுத்து படத்தில், மைக்கெல் ஜெயிலில் புவியியல் பாடம் நடத்திய பின் ஒரு மாணவர் சொல்லுவார் !
"வாவ்.. சான்சே இல்லடா ! செத்தாலும் புரியாது !"....

நல்லவேளை.. அவரே பொருளுரையும் கொடுத்து இருக்கிறார்.

1 comment:

Chakra said...

Ramadoss could take this up as a full time profession and also merattify the TV comperers, instead of protesting against Reliance etc.