Monday, May 21, 2007
யானைக்கும் கால் வலிக்கும்
திருக்கடையூர் அம்ருதகடேசர் ஆலயத்தில் ஒரு நாளைக்குள் சர்வ சாதாரணமாக முப்பது சஷ்டியப்தபூர்த்தியோ சதாபிஷேகமோ நடந்துவிடும். இந்த ஸ்தலத்தில் அறுபது எழுபது எண்பதாம் கல்யாணம் செய்து கொள்வது மிக விஷேசம். ஏன் என்று ஆஃபீஸ் இல்லாத ஒரு ஆக்ஸிஜன் நாளில் சாவகாசமாக எழுதுகிறேன்.
இந்தப்படத்தில் நீங்கள் பார்ப்பது திருக்கடையூர் கோயில் யானையின் களைத்துப் போன கால்கள். இந்த யானையின் கடமை என்னவென்றால், கல்யாணம் செய்து கொள்ளும் வயதான தம்பதிகளை வாசலிலிருந்து கொடி மரம் வரை அழைத்துச் சென்று விட வேண்டும். பின்னர் அந்த யானைக்குப் பூஜை செய்வார்கள் - அதை ஏற்றுக்கொண்டு பின்னர் க்ளைமேக்ஸில் துதிக்கையால் ஆசிர்வாதம் செய்யவேண்டும். (யாராவது வாழைப்பழம் கொடுத்தால் அலட்சியமாக வாங்கி பாகனிடம் கொடுத்துவிடும்... டையட்டில் இருக்கிறது போலும்). எல்லாம் முடிந்தவுடன் மீண்டும் வாசல் வரை சென்று அடுத்த தம்பதியை அழைத்துவர செல்ல வேண்டும். அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த யானை நின்று கொண்டிருந்த விதம் தான் நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது. இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை காலை மாற்றி நின்றது.
யானைக்கும் கால் வலிக்கும்.
தமிழில் யானைக்கு இன்னும் இரண்டு பெயர்கள் உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
UPDATE :
ரவிவர்மன் நான்கு பெயர்கள் சொல்லியிருக்கிறார்.
1. வேழம்
2. களிறு
3. படி
4. நாகம்
இதில் களிறு என்றால் ஆண் யானை. படி என்றால் பெண் யானை. நன்றி ரவிவர்மன்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
1. வேழம்
2. களிறு (Gender : Male)
3. படி (Gender : Female)
4. நாகம் (Common to Elephant and Snake)
--- Avvalvudhan enakku theriyum
I know of களிறு, but whats the other one?
Keerthi,
Adhu enna "oxygen" naal? Just curious! Kovilagala yaanai oda paadu - romba paavam dhaan.
Ravi varman, that was some info! Never knew these before... Thanks!
ravi varman, arumai ! thanks.
indian voter, have a look at Ravi Varman's comment. there are 4.
ravi, Oxygen Naal are the days when you get time to breathe :)
Keerthi!
It's actually பிடி & not படி.
(http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88)
(நாங்களெல்லாம் குற்றம் கண்டுபிடிச்சே பேர் வாங்கற பரம்பரை ஆச்சே!)
Anyway your post made me to rethink about the tradition of celebrating 60th B'day in Thirukkadaiyur!
Regards
Venkatramanan[at]gmail[dot]com
Keerthi,
Venkatraman sonna madhiri adhu Pidi. not padi. Sorry Typo. Please change it asap
-------
Ravi
Ravivarman and Venkataraman, I've got a few more names. Will publish soon.
Post a Comment