Friday, June 22, 2007

"மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால், மேனி சிலிர்க்குதடி"

எனக்கு ஊரார் புகழ் எல்லாம் வேண்டாம். இந்த வரியைப் படித்தாலே மேனி சிலிர்க்கும். பல தடவை "அவ்யுக்தா"விலேயே இடம் பெற்ற பாடல், பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே"வாகத்தான் இருக்கும். பாரதியார் கண்ணம்மாவைப்பற்றி எழுதினாரோ இல்லை செல்லம்மாவைப்பற்றி எழுதினாரோ என்ற 'கான்ஸ்பிரசி தியரி' எல்லாம் தேவையில்லாத விஷயம்.

"The Bonding Factor" - ஓர் உறவில் உள்ள பிணைப்பின் ஆழம், இந்தப்பாடலில் கூறியுள்ளதை விட ஆழமாக இருக்க முடியாது.

அதெல்லாம் இருக்கட்டும். இப்பாடலில் எல்லவற்றையும் தாண்டி பிரகாசிப்பது "தமிழ்". "செல்வக்களஞ்சியமே"வில் ஆரம்பித்து வரிக்கு வரி அசத்துவார் பாரதி. அடிக்கு அடி "அதெப்படி இந்த வார்த்தையை இங்கே போட்டார் !" என்று வியக்க வைப்பார்.

ஏன் இதை எழுதுகிறேன் என்றால், "வாடா வாடா வாடா வாடா ! வாட்டர் பாக்கெட்டு !.. காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு" என்ற பாடலை நேற்று கேட்க நேர்ந்தது. இந்தப்பாடலை எழுதியது யார் என்பது தெரியவில்லை.. ஆனால் பெயருக்கு முன்னால் கட்டாயம் "கவிஞர்" என்று போட்டிருப்பார். வெகுஜனங்கள் இந்தப்பாடலை விரும்பிக் கேட்கின்றனர் - தவறொன்றுமில்லை. ஆனால் இதை எழுதியவர் தம்மை தமிழ்க்கவிஞர் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுவாரா என்று கேட்க வேண்டும்.

"ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே !
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே "

இதெல்லாம் பலர் பாராட்டும் கவிதையாகிவிட்டது. இன்னும் சிறிது காலத்தில் உரை நடைக்கும் கவிதைக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதில் எனக்கொன்றும் ஆதங்கம் இல்லை, அப்ஸர்வேஷன் மட்டுமே.

நேற்றைய தமிழ் கூட நன்றாகத்தான் இருந்தது. இன்றுதான் கசக்கிறது. சினிமா பாடல்களை விட்டுத்தள்ளுங்கள். பத்திரிக்கை ஊடகங்களும் வெளியிடும் தமிழ்க்கவிதைகளில் வார்த்தைகளை புகுத்த வரிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். முரண்பாடுகளில் சுகம் காண்கிறார்கள். கடைசி வரிகளில் "ட்விஸ்ட்" இருக்கவேண்டும் என ப்ரயத்தனப்படுகிறார்கள்.

இன்றும் சிலர் சுத்தமான செய்யுள் படைக்கிறார்கள். ஆனால் வெளியே தெரிவதில்லை. ஒரு பள்ளி மாணவர் என் முன் ஸீட்டில் அமர்ந்து நோட்புக்கில் எழுதிக் கொண்டிருந்தார். ஹைக்கூவாக இருக்குமோ என்று குறைத்து மதிப்பிட்டேன். "பேருந்து நகர்ந்தது" என்று தலைப்பிட்டு அழகாகான தமிழில் எழுதியிருந்தார். வரிகள் நினைவில்லை. ஆனால் சத்தியமாக இவை உலகுக்குத் தெரியப்போவது இல்லை.

"உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னெஞ்சில் உதிரங் கொட்டுதடி !" இப்படி உருக்கமாக யாராவது எழுதுங்களேன். படித்து மகிழ என்னைப்போல் ஒரு கூட்டம் இருக்கிறது.

5 comments:

KK said...

Wow! A very thought provoking article I must say.. Though I have not learnt tamizh,I read and comprehended the piece as best as I cud. There perhaps has been a marked degradation in the literary standards of most languages.

Quoting Bharathi, I personally love "Suttum vizhi chudardhaan", where kannamma's beauty has been described splendidly! I also love the line "pecchukku idam edhadi nee penn kulatthin vetriyadi" from another song 'pacchai kuzhandhai adi'.. The way he sings of her in "kaani nilam vendum" is equally amazing. Bharathi describes the various facets of kannamma in his different compositions, as a child,mother, wife and Shakti, the omnipresent.Kannamma hence brings the picture of a complete woman in my mind.
Good job! keep writing!!

R R R said...

bharathi madhiri ezhuthu'vatha!! ivargaLa!? huh!! avar ezhuthiyathaiye thappu thappa padippargaL!

bharathi oru sagapthiyam.,pinvarum thalaimuraigaL bharathi'yin paadalgaLai padithikkonde irukkum!! antha vaarthaigaLukku azhive illai!!

rasu said...

எவ்வளவு மழை பெய்தாலும் மண்வாசனை மாறாது.

எவ்வளவு வெயில் அடித்தாலும் பூவாசனை மாறாது.

எந்த ஊரில் பிறந்தாலும் குழந்தையின் மழழை மாறாது.

எந்த ஜென்மம் எடுத்தாலும் என் அன்பு மாறாது.

Anonymous said...

Anbulla Keerthi,

Transliterationakku manikkavum. Ungaludaya vaarthai prayogam, ezhuthu nadai ezhuthalar Sujatha'vin paani'ku miga arugil ullana. Idhai naan oru kutramaga sollavillai. Maaraga padikka padikka melum padikka vendum endra undhudhalai ungal ezhuthu yerpaduthugiradhu. Vaazthukal...

Anonymous said...

That Water Packet song was written that flim's director Perarasu.

In a Interview he told, he is writing such kind of songs to make the Level C Audience happy. In addition to that Service to Tamil Poetry, He spends the money which he gets from those songs to the improvement of his village's infrastructure and studies.