Thursday, July 26, 2007

The Tao of Boredom

நொடிகள் நகர்வது கூட துல்லியமாகத்தெரியும், காதல் செய்தால்.. போர் அடித்தால்.

அப்படி பொழுதுபோகாமல் உட்கார்ந்திருந்த அகால வேளையில் உதித்த ரோசனை - புஸ்தகம் வாசிக்கலாம், சினிமா பார்க்கலாம். சினிமா எல்லாம் பார்த்தாகிவிட்டது. என்ன புஸ்தகம் படிக்கலாம் ?

நடுவில் இருந்த பழக்கம், அப்பம் வடை தயிர்சாதத்துடன் விடைபெற்று சென்றுவிட்டது. மீண்டும் புதுப்பிக்கலாம் என்று நினைத்து என் கணிணியில் உள்ள ஈ-புக்ஸ்களை நோட்டம் விட்டேன். "The Tao Of Physics" என்ற வித்தியாசமான பேர் தென்பட்டது. காலைவேளைகளில் அலுவல் செல்கையில், பக்கத்து TCS, Infosys, Sathyam, CTS பேருந்துகளில் ஜன்னலோரத்து தேவதைகளும், தேவையில்லாதைகளும் கையில் வைத்திருக்கும் புத்தகம் அனேகமாக "டா வின்ஸி கோட்", அரதப்பழைய "ஹாரி பாட்டர்" அல்லது "த டாவோ ஆஃப் ஃபிசிக்ஸ்".

ஹாரி பாட்டர், லார்ட் ஒஃப் தி ரிங்ஸ் சமாச்சாரங்கள் எல்லாம் எனக்கு ஜீரணம் ஆகாத பலகாரங்கள். அதனால் இந்த Tao of Physics புத்தகத்தை பருப்பு மாதிரி எடுத்து படிக்க உட்கார்ந்தேன். மூச்சு முட்டியது.

நாள் முழுக்க பகீரதப்ப்ரயத்தனம் செய்து பன்னிரண்டு பக்கங்கள் முடித்தேன். ஒரு எழவும் புரியவில்லை. யாரிடமும் ஃபிலிம் காமிக்க முடியாது. எடக்கு மடக்காக கேள்வி கேட்டால் "சரியா ஞாபகம் இல்லையே.. படிச்சு ரொம்ப நாள் ஆச்சு" என்று மழுப்பத்தான் முடியும். சரி ! எனது அறிவுத்திறன் அவ்வளவுதான் என்று புத்தகத்தை மூடிவிட்டு, இருந்த கடுப்பில் டிலீட் செய்துவிட்டேன்.

நல்ல வேளை, பி.கே பரிந்துரையில் "ஏர்ஃப்ரேம்" படிக்க ஆரம்பித்தேன். கீழேவைக்க முடியவில்லை. இன்று முடித்துவிடுவேன்.

எனக்கு இந்தமாதிரி மசாலா தான் ஒத்துவரும் போல இருக்கிறது. ஆனால் ரிச்சர்ட் பாச்சின் "தி ஒன்" போன்ற புத்தகங்களை (அப்ஸ்ட்ராக்ட் வகையராக்கள்) படித்து வந்தேன். இந்த Tao of Physicsதான் சோதனைப்படுத்திவிட்டது.

யாராவது நிறைய கொலை,திருட்டு நிறைந்த புஸ்தகம் வைத்திருந்தால் ஈமெயில் அனுப்பி விடுங்கள்.. போர் அடிக்கிறது.

5 comments:

Anonymous said...

:)

nee nalla thoongi rombo naal aachu..

adhuku 'Tao of Physics' dhaan sirandha marundhu :)

Chakra said...

>> எனக்கு இந்தமாதிரி மசாலா தான் ஒத்துவரும் போல இருக்கிறது.

- enakkum adhe adhe!! :)

indha Tao, Mao ellam PK madhiri arivu jeevigalukku.. not for paamara makkals..

KB said...

'Tao of Physics' படித்த பிறகு
தெய்வம் போல் தோன்ற்ியது
+2வில் ப(பி)டிக்காத physics

;)கே.பி.

KRTY said...

PK, :) Thookam varalai.. mandai kaanju pochu !!

CEO sir, adhaane ! Paamara makkalukku eppadi Tao Mao ellam vilangum.. loosu pasanga...

KB, kalakkal

Aravind said...

hehe .. first line than best..

ஜன்னலோரத்து தேவதைகளும், தேவையில்லாதைகளும...
ada ada...;-)