நானும் பிரபுவும் நேற்று பேசிக்கொண்டிருக்கையில் அடிபட்ட ஒரு விஷயம் - பி.கே நேற்று சுதந்திரதினமாக இருந்தபோதிலும் அலுவல் சென்றது.
இந்தியாவில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், குறிப்பாக 24 X 7 நிறுவனங்கள் வந்தபின் நமது விடுமுறை லாஜிக்கே மாறிவிட்டது. ஜூலை நாலாம் தேதி சில அலுவலகங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகின்றது. தேன்க்ஸ்கிவிங் டே, லேபர் டே போன்ற நாட்களிலும் விடுமுறை.
இது பற்றி பேசிக்கொண்டிருந்த போது, வெங்கிட்டு சாரின் ஒரு பழைய பதிவில் நான் எழுதிய காமெண்ட் (பின்னூட்டு - Feedback என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் வார்த்தை... உவ்வேக் !) ஞாபகம் வருகிறது.
அவுட்சோர்சிங் வேதனைகள்
---------------------------------------------
மாலை சூரியனுக்கு சுப்ரபாதம் பாடி
அரைகுறை தூக்கத்தில் சோம்பல் முறித்து
மாலைக்கடன்களை வட்டியுடன் செட்டில் செய்து
BPO மக்கள் அந்த நாளைத் துவக்கிடுவர்
இல்லம் தேடிவரும் காரில் ஏறி
அளவில்லா தூரம் பயணம் செய்து
"வா மாமு !".. "வா மச்சி !" எனக் குசலம் விசாரித்து
"Good morning sir, Im Mike spencer, welcome to ***** how may i help you." என்பார் மோஹன் ராமக்ருஷ்னன்.
இரவெல்லாம் பகலாய்.. பகலெல்லாம் இரவாய்
வீட்டில் இருந்தும் இல்லாமல்
பிள்ளையார் சதுர்த்தி நாள் முழுவதும் தூக்கம்
சம்பந்தம் இல்லாத லேபர் டேயில் விடுமுறைகள்
வேலை கிடைத்ததே ! அது போதும்...
நாங்க இங்கே ஃபோன்ல கை வைக்கலேன்னா
அங்கே ஒரு அமெரிக்கன் சோத்துல கை வைக்க முடியாது
ஹ்ம்ம்ம்ம்... !
3 comments:
Nice earlier post Keerthi. I like the way you bring out your creativity in so many small things. Example: the Independence day post. Nacchunu irunthuthu!
Mostly true about BPO. I was doing the same 7 years before in India when I was in 24x7 tech support. :)
:-)
காமெண்டுக்கு பெட்டர் தமிழ்ச்சொல் மறுமொழி!
Gopinath Sundaram, thank you very much.
Jeeva, கரீட்டு மா !
Post a Comment