Friday, August 24, 2007

சனி பெயர்ச்சி

இரண்டு மூன்று நாட்களாக ப்ளாக் அப்டேட் செய்யாமல் எங்கே போனாய் ? என்று பல லட்சம் விசாரிப்புக்கள் (ஹி ! ஹி).

ஒரே வார்த்தையில் பதில் சொல்வதானால் - ஜலதோஷம் என்று சொல்லலாம்.

இளம்பிராயத்தில் ஆரம்பித்து இன்றுவரை ஜலதோஷம் வருடத்திற்கு மூன்று முறை விசிட் அடிக்கும். இளவயதில் தும்மல், இருமல் என்று ஆரம்பித்து ஜுரம் வரை வந்து நாக்கு கசந்து உடம்பு வியர்த்துப் போனபின்தான் "ம்ம்ம்.. நாளைலேர்ந்து ஸ்கூலுக்குப் போகலாம்" என்ற அறிவிப்பு வரும். அடச்சே ! இந்த ஜுரம் இன்னும் மிட் டேர்ம் எக்ஸாம் முடியற வரைக்கும் இருக்கக்கூடாதோ !!

ஆனால் ஜுர நாட்களில் லீவ் எடுத்து ஒரு பிரயோஜனமும் இல்லை.மதிய வேளைகளில் தூர்தர்ஷனில் யூ.ஜி.சி யை போட்டு கழுத்தறுப்பார்கள். எங்கேயும் வெளியேயும் செல்ல முடியாது. படுத்து தூங்கி சிறுவர் மலர், கோகுலம், ஆனந்த விகடன் எல்லாம் படித்து வெட்டியாக பொழுதை கழிக்க வேண்டும். ஆனால் ரொம்ப ஆக்டிவ்வாக காமித்துக்கொண்டோமோ ! தொலைந்தோம். அடுத்த நாள் பள்ளி செல்ல வேண்டியது தான். என்னதான் பொழுதுபோகவில்லை என்றாலும் லீவ் எடுக்கிறோம் என்ற அந்த "ஈவில் தாட்" தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆனால் அப்பொழுதெல்லாம் ஃபோகஸ் ஜலதோஷத்தின் மீது இல்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் ஜலதோஷம் வந்தால் நான் ரியாக்ட் செய்யும் விதமே வேறு. இளங்கன்று பயமறியாது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். வயது ஆக ஆக, பயம் கூடுகின்றது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால், தைரியம் குறைகின்றது.

[சாயங்காலம் தொடர்கிறேன்]

1 comment:

Jobove - Reus said...

very good blog congratulations
regard from Catalonia Spain
thank you