இன்பத்தில் ஆடுது என் மனமே !!
அப்பாடா ! இன்னிக்கு சம்பளம் வந்துவிடும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சம்பளமும் கிடைத்து, கூடவே நான்கு நாட்கள் விடுமுறையும் கிடைக்கும். சனி, ஞாயிறு விடுமுறை போக, திங்கட்கிழமை பந்தின் காரணமாகவும், செவ்வாய் அன்று காந்தி ஜெயந்தியின் காரணமாகவும், ஆக மொத்தம் நான்கு தினங்கள். மாநில அரசே, இரண்டாவது முறையாக பந்த் செய்வது ஆச்சரியமாகவோ, வருத்தமாகவோ இல்லை. எதிர்பார்த்ததுதான்.
ராமர் பற்றி விவாதிக்க வேண்டாம். அதை கடைசியில் சொல்கிறேன்.
முதலில் சம்பளம் கையில் வாங்கியவுடன், இருக்கும் நான்கு நாட்கள் விடுமுறையை நொடிகள் விரயமாகாமல் அனுபவியுங்கள். ஊரிலிருக்கும் வீட்டுக்குச் செல்லுங்கள். சொந்த ஊரிலேயே இருப்பவர்கள், கால் கிலோ ஸ்வீட், கால் கிலோ மிக்ஸர் வாங்கிக் கொண்டு அத்தை, மாமா, சித்தி, பெரியப்பா.. என்று பல நாட்களாக வேலை காரணமாக செல்ல முடியாமல் இருந்த வீடுகளுக்கு சென்று உறவுகளை சம்பாதியுங்கள்.
"இப்போதான் வழி தெரிஞ்சுதா ?" என்ற கேள்வியுடன் தான் ஆரம்பிக்கும். அதற்கெல்லாம் சங்கோஜப்பட வேண்டாம். இந்த தலைமுறை இழந்துகொண்டிருக்கும் விஷயங்களில் முக்கியமான ஒன்று இரத்த சம்பந்தங்கள். முடிந்தவரை உறவுகளை காப்பாற்றிக்கொள்ளுங்கள். இதற்கு மேல் அறிவுரை செய்ய எனக்கு யோக்யதை இல்லை. ஞாயிறுதான் பல நாட்கள் கழித்து அத்தை வீட்டுக்குச் செல்கிறேன்.
இது ராமரே பார்த்துக் கொடுத்த லீவ். சந்தோஷமாக அனுபவியுங்கள்.
சரி.. காந்தி ஜெயந்தியும், ராமர் பந்த்தும் ஒரு சேர வருவதினால் பின்வருவதை இடைச்சொறுகுகிறேன்.
Vaishnav jan to tene kahiye je
PeeD paraayi jaaNe re
Par-dukhkhe upkaar kare toye
Man abhimaan na aaNe re
டி.கே. பட்டம்மாளின் குரலில் கேட்கவும்
அது சரி.. இந்தப்பாடலின் அர்த்தம் புரிந்தால் "பந்த்" நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
ஹே ! ராம்.
1 comment:
//
கால் கிலோ ஸ்வீட், கால் கிலோ மிக்ஸர் வாங்கிக் கொண்டு அத்தை, மாமா, சித்தி, பெரியப்பா.. என்று பல நாட்களாக வேலை காரணமாக செல்ல முடியாமல் இருந்த வீடுகளுக்கு சென்று உறவுகளை சம்பாதியுங்கள்.
//
ஆமாம் அவ்வளவையும் ஒருவரே சாப்பிட்டால் 4 நாள் லீவு முழுவதும் பாத்ரூமிலேயே இருக்க வேண்டி வரும்
Post a Comment