உடனே, கடந்த பதிவை பார்க்கவும். பின் காமெண்ட் பாக்ஸ் திறந்து, காமெண்டுகளை படிக்கவும். நல்ல கவிதைகள். காமெண்ட் செய்தவர்களுக்கு நன்றி.
நிற்க.
இன்னுமொருவர் ஐடியா கொடுத்தார். "சிறந்த கவிதையை படத்தில் எம்பாஸ் செய்து ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பலாமே" என்று சொல்லியிருக்கிறார். செய்துதான் பார்ப்போமே !
ஆனால் ஒன்று. கவிதைகள் எல்லாம் சோக ரகம். Ironies பொதிந்த கவிதைகள். விட்டிருந்தால் நான்கூட அப்படித்தான் எழுதியிருப்பேனோ என்னவோ...
அகால வேளைகளில், ஆஃபீஸில் வரும் உருப்படியில்லாத ஃபார்வர்ட் மெயில்களில் சில தமிழ்க்கவிதைகள் வரும். அவற்றில் பெரும்பாலானவை காதலாகிக் கசிந்துருகி கடுப்படிக்கும். சில கவிதைகள், கணிணி மெண்பொருள் வல்லுனர்கள் (யப்பா !) வாழ்வில் இழப்பவற்றை பற்றி டீடெயிலாக இருக்கும்.
டைரெக்டர் சேரனின் சாயலில், "பகட்டாக பஞ்சு மெத்தையில் உருண்டு சோம்பல் முறித்து எழுந்து ஓரல்-பி யில் க்ளோஸப் தடவி பல் விளக்குவதில் என்ன சுகம்... கயத்துக்கட்டிலில் விழிந்து ஆலங்குச்சியில் பல் விளக்கினால்தான் சுகம்" என்று ஆர்க்யூ செய்வதெல்லாம் சும்மா டகுல் பாஜி(நன்றி லேஸிகீக்/சுஜாதா) வேலைகள்.
சாஃப்ட்வேர் வல்லுனர்கள் அனைவரும் அடிமனதில் இழையோடும் சோகத்தோடுதான் இருக்கிறார்கள் என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். யாராவது சாஃப்ட்வேர் வேலையில் கிடைக்கும் இன்பத்தைப்பற்றி கவிதை எழுதுங்கள் பார்ப்போம். இல்லையென்றால் நான் எழுதி நீங்கள் படிக்கும் மோசமான நிலைமை வந்துவிடும், ஜாக்கிரதை.
எப்படியிருந்தாலும், திரு. பாலச்சந்தரின் கவிதையைப் போட்டு விகடனின் பிரசுரம் செய்ய அனுப்பப் போகிறேன். பார்க்கலாம், இந்த முயற்சி வெற்றியடையுமா என்று !
2 comments:
//கவிதைகள் எல்லாம் சோக ரகம்//
//சாஃப்ட்வேர் வல்லுனர்கள் அனைவரும் அடிமனதில் இழையோடும் சோகத்தோடுதான் இருக்கிறார்கள் என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன//
அட நீங்க வேற.. முதல்மரியாதை பாட்டு ஞாபகம் இல்லையா ?
" சொகராகம் சோகம் தானே " இதெல்லாம் அந்த ரகம் :)
lol@ raasa
1. Mudhalil Idea-vai ettru kondatharkku nandri. Commission ethenum kidaikkumaa :)?
2. Ippadiyaavathu Kavithai onrinai prasuram seithu paarkalaam endraal nadakkavillai :). Unnmai sollavendum endraal antha pachai paalaivanam endra iru sorkalae pothum balachandarin kavithaiyai prasurikka.
3. Cubicles are a construct of nearly any coporate job. Software engineers are a small subset. In fact what prompted me to write was the fact that the corridor in the picture is curiously similar to the corridors in my office. And neither am I a software engineer nor do I live in India. Existential angst enbathu ellorukkum sonthamaanathu :)!
Ulagam azhinthaalum cockroach and cubicle mattume minjum enbathu enathu karuthu.
Post a Comment