Saturday, October 20, 2007

தீபாவளி பர்சேஸ் !!

புதிய டிசைன்கள் மற்றும் வெரைட்டி மெட்டீரியல்கள் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. நகாசுப் பட்டு, அக்ஷயப் புடவை என்று வகைவகையாக கணவர்களின் வயிற்றில் புயல் அடிக்கிறது.

தி. நகர் மற்றும் சுற்று வட்டாரங்களில் கடும் அலைகளின் சீற்றம் கடுமையாகக் காணப்படுவதால், மக்கள் யாரும் இன்று ஷாப்பிங் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-----------------

உஸ்மான் ரோடில், தார் சாலையை நான் பார்த்ததே இல்லை. முகவாட்டை நேராக வைத்துக்கொண்டு பார்த்தால், வெறுமன தலைகள் மட்டும் தான் தெரியும். கொஞ்சம் தலையை இறக்கிப்பார்த்தால் அதிகபட்சமாக சென்னை சில்க்ஸ், போத்தீஸ், ஆர். எம். கே.வி, நல்லி அல்லது சரவணா ஸ்டோர்ஸ் கவர் அல்லது கட்டைப் பை மட்டும் தான் தெரியும். அதைத்தாண்டி, மக்கள் நடந்து செல்லும் சாலையைப் பார்க்கவே முடியாது.

இப்படிப்பட்ட நிலையில், உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது. பாதி சாலை மட்டும்தான் மக்களுக்கு அவெய்லபிள். யோசித்துப்பாருங்கள். "தீபாவளிக்கு முந்தய சண்டே போய்க்கலாம்" என்று ஷாப்பிங் ப்ளான் போட்டீர்களானால், தீபாவளி முடிந்துதான் திரும்பி வரலாம். எப்படி உத்தேசம் ?

1 comment:

Manki said...

நானெல்லாம் ஊருக்குப் போகிற ஆர்வத்தில ஒரு மாசத்துக்கு முந்தியே எல்லா பர்ச்சேஸும் முடிச்சு ரெடியாகிட்டேனாக்கும்! :-) (BTW, I am in Hyderabad.)