Saturday, October 27, 2007

அழகிய தமிழ் மகன்



இந்தப் படத்துக்கு யதேச்சையாக "ஏ.டி.எம்" என்று நாமகரணம் சூட்டியாகிவிட்டது. ஹிந்தியில்தான் முழ நீளத்துக்கு பெயர்வைப்பார்கள். அதற்கு நாமும் "K.A.N.K", "D.D.L.J","Q.S.Q.T" என்றெல்லாம் ஷார்ட் நேம் வைத்து அழைப்பது வழக்கம். இப்போது அழகிய தமிழ் மகனுக்கு ATM என்று ஷார்ட் நேம். ஹ்ம்ம்... நடத்துங்க நடத்துங்க...

ஏ.ஆர். ரகுமானின் இசையில் ஒரு வித்தியாசம் தென்படுகிறது. "நீ மர்லின் மன்ரோ" என்ற பாடலும், "பொன்மகள் வந்தாள்" என்ற ரீமிக்ஸ் பாடலும் கலக்கல் ரகம். கேட்கும் போதே கழுத்து சுளுக்கும் அளவுக்கு ஆட்டவைக்கும். பாக்கி பாடல்கள் சுமார் (அல்லது சுமாருக்கும் கம்மி..). ஆனால், "கேளாமல் கையிலே !" என்ற பாடல்தான் எனக்குப் புரியவில்லை. மாடர்ன் ஆர்ட் மாதிரி, இந்தப்பாடலை ரசிக்க வேண்டுமா, அல்லது வேண்டாமா என்று தெரியவில்லை.

"பொன்மகள் வந்தாள்" ரீமிக்ஸ் கலக்கலோ கலக்கல். நார்மல் வால்யூமில் இந்தப்பாடலை ப்ளே செய்து, கனுக்காலையும் கழுத்துப் பகுதியையும் ஒன்றாக பாவித்து மேலும் கீழும் ஆட்டவும். இரசித்தல் - என்பது ஒரு கலை. இப்பாடலை எந்த ஒரு நளினமும் இல்லாமல் பாடியதற்காக, பாடியவருக்கு ஒரு ஷொட்டு.

"நீ மர்லின் மன்ரோ" பாடல் ஹாரிஸ் ஜெயராஜின் "அரக்கோனத்தில் ஆரம்பம்" என்ற பாடலை ஞாபகப்படுத்துகிறது. உஜ்ஜெயினி என்பவர் ஒரு கட்டத்தில் "சேட்டர்டே நைட், பார்டிக்கு போகலாம் வர்ர்ரியா ?!" என்று பாடும்போது அட்ரெஸ் கேட்டு போய்விடலாம் என்று தோன்றும். கலக்கல், பெப்பி சாங்க்.

"எல்லாப் புகழும்" பாடலைக் கேட்கும் போது "ஆறரை கோடி பேர்களில் ஒருவன்" என்று எஸ்.ஜே. சூர்யா குதித்தது நினைவுக்கு வருகின்றது. டாக்டர் விஜய்யின் இன்ட்ரோ பாடலாக இருக்க வேண்டும். இன்னும் எவ்ளோ நாளைக்கோ !!!

"வலையப்பட்டி" பாடலும் "மதுரைக்குப் போகாதேடீ !" இரண்டும் ஃபோல்க் டைப். விஷுவல்தான் காப்பாற்ற வேண்டும். அதிருக்கட்டும் "நாதஸ்வரம் போல வந்தாய்" என்று ஆரம்பிக்கும் "வலையப்பட்டி" பாடலின் லிரிக்ஸ் சகிக்கவில்லை. தினமும் காலை, மாலை, மதிய வேளைகளில் ஹெவி டோஸ் "கற்பனை" மாத்திரைகளை தவறாமல் சாப்பிடவும்.

ஏ. ஆர். ரகுமானின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு சென்செக்ஸ் மாதிரி, இரண்டு புள்ளிகள் உயர்ந்து மூன்று புள்ளிகள் கீழே இறங்கியது.

2 comments:

Anonymous said...

Keerthi,

Try to listen 'Kelaamal' a couple of times more. That song is really good.

Except the intro(!!!) song, all other songs are definite hit material.

KRTY said...

senthil, listened to it. mhhmm.. visualsku wait seyvom!