Sunday, October 28, 2007
சென்னையில் அடை மழை
சே ! நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையாம். தச்சுவுக்கு லீவ். இப்படிப்பட்ட திங்கள் கிழமைகளுக்காக ஏங்கியிருக்கிறேன்.
காலையில் ஆரம்பித்த மழை, விட்டேனா பார் என்று பெய்யோ பெய் எனப் பெய்துகொண்டிருக்கிறது. குளிர ஆரம்பித்துவிட்டது. இரண்டு வருடங்கள் முன்னர் நிகழ்ந்தது போலவே நாள் முழுவதும் மழை பெய்தாகிவிட்டது. நாளை கரெண்ட் போகும் அபாயம் உள்ளது. அபயஹஸ்தத்தால் காப்பாற்றமுடியாத பேட்டரிகளை சார்ஜ் செய்து கொண்டிருக்கிறேன்.
நாளை வேலை சென்றாக வேண்டும். மிதவைப் பேருந்தில் உட்கார்ந்து கண்ணாடிக்கு வேளிப்பக்கத்தில் சிதறும் மழைத்துளிகளை ஆள்காட்டி விரலால் தொட்டுவிட முயற்சி செய்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாது.
இப்படி பொறுப்பில்லாமல் பள்ளிகளுக்கு லீவ் விட்டால் வீட்டில் குதியாட்டம் போடும் குழந்தைகளை யார் ஃபோட்டோ எடுப்பது ? சே !
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
Thats a good point. School closed but offices open. who will take care of the kids? Can we "work from home" like USA?
Schoolluku leave vita nearam parthu Veyyil Palla Kaatuthu :D
ippo than ithu keerti blog maathiri irukku !
i agree with jeevan :D oru naal pooravum mazha penjutu monday school leave vittappuram pramadhama veyyil adichudhunu amma sollitu irundhanga.
anon, Sleep from home ? May be. !!
jeevan, adhu dhaan eppavum anti climax.
aditya, thanks for the info.
sowmya, :) makes me feel comfortable.
narayanan, has happened during school days. Nambiyar madhiri sirichuppom
Post a Comment