Tuesday, October 30, 2007
நாகலிங்கப் பூ
இந்தப் பூவை பற்றி கேள்விப்படாதவர்கள், பட்டுக் கொள்க !
நாகலிங்கப் பூ - பார்ப்பதற்கு லிங்கத்தை பலதலை நாகம் குடைவிரித்துக் காப்பது போலக் காட்சி தரும். மேலே நீங்கள் பார்க்கும் படம், வெறும் லிங்கத்தை மட்டும் காண்பிக்கிறது. முழுவதுமாக எடுக்க மறந்துவிட்டேன். பிறகொரு நாள் முழு படமும் போடுகிறேன்.
இதன் நறுமணம் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும். "மனோரஞ்சிதம்" என்றொரு பூ இருக்கிறதே, தெரியுமோ ? மனோரஞ்சிதத்தின் வாசம் நாசிகளில் நுழையும் போது, நாசித்துவாரங்களை கிழித்துக்கொண்டு வரும். அவ்வளவு திகட்டலாக இருக்கும். அதனையொத்த மணம் கமழும், இந்த நாகலிங்கப்பூ. இது செடியில் சர்வ சாதரணமாக பூக்கின்ற ஜாதியில்லை. நாகலிங்க மரம், அல்லது நாகலிங்கப்பூ மரம் நீண்டு நெடியதாய் வளர்ந்திருக்கும். அதனடியில் கொடிகளாய் படர்ந்து, அக்கொடிகளில் பூக்கும்.
சிவனுக்கு மிகவும் உகந்ததாக இம்மலர் கருதப்படுகின்றது. பல சிவன் கோயில்களில் இம்மலரால் ஈசனுக்கு அர்ச்சனை நடத்தப்படுவது உண்டு. இதன் வாசனை பாம்புகளை அதிகம் கவரும் என்று நினைக்கிறேன். என் கல்லூரியில் பூதாகாரமாக வளர்ந்து நிற்கும் இம்மரங்களின் அடியில் பல பாம்புகள் ஊர்வதை நான் பார்த்திருக்கிறேன். அதனால் தானோ என்னவோ, பெண்கள் இம்மலரை சூடிக்கொள்வது இல்லை. (இப்போதெல்லாம் பெண்கள் மலர்கள் சூடுகிறார்களா என்ன ?)
எல்லாவற்றையும் தாண்டி நான் வியப்பது இதன் அமைப்பைத்தான். இயற்கை எத்தனை நயமாக இருக்கிறது. எத்தனை நளினம் !
தேடிப்பிடித்து ஒரு பூ வாங்கி, கையால் வருடிப்பார்த்து நாசிகளில் நுகருங்கள். இதை எப்படி டிசைன் செய்திருப்பார், என்று வியந்து பாருங்கள். !
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
I saw this trees and flowers first time some months back in Adyar Theosophical Society. Nice info too Keerthi.
Jeevan, thanks. !
Post a Comment