இரண்டு விரல்களை நீட்டினான். நாக்கையும் கீழ் உதட்டையும் பற்களுக்கு இடையில் கடித்து கண்களால் சிரித்தான். "என்ன ?" என்றேன்.
அவனது நீட்டிய விரல்களை அவனே பார்த்துக் கொண்டான். லேசாக ஒரு விரலை மடக்கிப்பார்த்தான். மடங்குகின்றது என்று தெரிந்தவுடன், அந்த விரலை வேகமாக மடக்கிவிட்டு "இன்னும் ஒன் டே ஸ்கூல் லீவ் !!", என்று சொல்லிவிட்டு குட்டி சைக்கிளை உருட்டியபடி வெளியே ஓடி விட்டான்.
அட. ஆமாம். இன்று தான் கடைசி நாள். நாளை ஆஃபீஸ் போகவேண்டும். அளவில்லா சோகம் திடீர் என ஆட்கொண்டது. மத்தியான வேளையில் தூங்கி எழுந்தவுடன் அழ வேண்டும் போல் இருக்குமே.. (இருந்ததுண்டா ?).. நாலு நாள் லீவு என்றார்களே.. இவ்வளவுதானா ? ஒரு ஐந்து நாட்கள் இருந்திருக்கக் கூடாதோ ? சே !!! அடுத்த லீவ் எப்பொழுது என்று கேலண்டர் மேய்ந்தேன்.
கண்ணத்தில் கைவைத்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.
ரூமுக்கு வெளியில் குட்டி சைக்கிள் அதகளம் செய்து கொண்டிருந்தது.
4 comments:
இப்படி எல்லாம் நீங்க எழுதுறதைப் பார்த்தா "கண்டிப்பா கல்யாணம், குழந்தை-னு செட்டில் ஆகி கஷ்டப்படணுமா"-னு தோணுது. இப்போ மாதிரியே தனியாளா இருந்துட்டா நினைச்சவுடனே வேலையை விட்டுட்டு கோயில் குளம்-னு கிளம்பிறலாமே!
Two years before I wrote this article in maraththadi.com. I too feel like you even on sunday evenings. Too bad! Time runs very fast.
Wow Unga Nadaiyelai Balakumaran Vadai Adikudhu...Good keep it up...
ரொம்ப 'டச்சிங்'கா இருக்கு.
நிறைய இது மாதிரி எழுதுங்க.
all the best.
Post a Comment