Thursday, November 01, 2007
அடுத்த வாரம் தீபாவளி
அமெரிக்கர் ஒருவர் நேற்று கேட்டார்.. "வென் இஸ் யுவர் ஹாலிடே ஆஃப் லைட்ஸ் ?"
அடெடே ! நம்ம தீபாவளி அமெரிக்காவில் இவ்வளவு பாப்புலராக இருக்கிறதே என்று ஒரு பக்கம் மகிழ்ச்சியும், "ஃபெஸ்டிவல் ஆஃப் லைட்ஸ்" என்பது "ஹாலிடே ஆஃப் லைட்ஸ்" ஆக மாறிப்போனது குறித்து வருத்தமும் மேலோடியது.
சென்ற ஞாயிறு, நம்ம தேஜு குட்டிக்கு கம்பி மத்தாப்பு கொண்டுபோய் கொளுத்திக் காண்பித்தேன். ஆஹா ! முகத்தில் என்ன ப்ரகாசம். பயப்படுவாளோ என்று நினைத்தால், மொத்தப் பொட்டியையும் வாங்கிக் கொண்டு காலி செய்துவிட்டு, "அப்புறம் ?" என்று கேள்வியுடன் பார்த்தாள். போச்சுடா ! அடுத்த தீபாவளியில் டென் தவுசண்ட் வாலா கொளுத்துவாள் போல தோன்றியது.
விகடன் தீபாவளி மலர் வெளிவந்து விட்டது. மஹா த்ராபையாக இருக்கிறது. டி.வி. நடிகர்கள் எழுதிய ஒரு பக்கக் கதைகள் வெளிவந்துள்ளன. எல்லாம் பிலோ ஆவரேஜ். மேலும் கவிதைகள், ஜோக்குகள் என்று எல்லாமே சப் ஸ்டாண்டர்ட். நான்கு வருடங்களாக வாங்கிய விகடன் இதழ்களில் இந்த தீபாவளி மலர், எ பிக் லெட் டெளண். நூறு ரூபாய்க்கு ********* (ஆங்கில கெட்டவார்த்தை).
ஷாப்பிங் சூடு பிடித்து கொதித்து கொப்பளித்துக் கொண்டிருக்கிறது. இந்த வருட டாப் தீபாவளி அட்ராக்ஷன் - போத்தீஸின் "பரம்பரா" பட்டு மற்றும் ஆர்.எம்.கே.வி யின் "நகாசு" பட்டு. அட ! ஆம்பிளைகளுக்கு ஏதாவது செய்யுங்கப்பா ! வ்ரின்க்னிள் ஃப்ரீக்கு அப்புறம் பெரும் புதுமை எதுவுமே இல்லையோ !
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
Hi Keerthi,
Saw your earlier post on Prestige. I agree - Nolan brothers keep upping the bar higher and higher. I wanted to ask you something, but I prefer that I ask it over email. I know this kinda sounds strange. Don't worry, I am not going to ask you for the DVD or invitations to the torrent site from which you downloaded the movie from :-). Idhu oru genuine question. So, can you please give me your email address? Illa, if you prefer, neenga enakku mail pannalam: sateesh $ot santhalingam $t gmail $ot com. Udhavikku nandri!
Keerthi... nice write up and excellent pic as usual.. is that our hero Dachu standing there?
BTW... look at Teju... I am pretty sure that she must have enjoyed the entire packet of 10 sparklers..
Sateesh, thanks. Added.
Gowri, :) Thats not Dachu. Some one else from the flat Teju stays in.
Post a Comment