Saturday, November 17, 2007

ஜில்லென்று ஒரு போட்டோ

Morning Raaga

தலையணைவரை வந்து முத்தமிடும் பனி
நவம்பர் மாத காலைப் பொழுது.
சூரியனே சோம்பல் முறிப்பது போலத் தோன்றும்
கம்பளி போர்த்தினால் கம்பளிக்கே குளிரும்.

பறவைகள் சட சடக்கும் சப்தம்,
சமையலரையின் டிகாஷன்
கலக்க ஊற்றும் வெந்நீரின் சப்தம்
அடுத்த தெருவின் கோயிலில் பாடும்
எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரல்
என
சப்தங்கள் கூட,
இதமாய், குளிர்காய வைக்கும்.

மந்தமாய் ஆரம்பிக்கும் காலை வேளைகூட
அழகாய்த்தான் இருக்கிறது..
இன்று ஞாயிறு என்பதால்.

1 comment:

Adaengappa !! said...

WOW..wonderful one ,keerthi !!


"ஞாயிருக்கு ஞாயிரு கொடுக்கும் மேகக்கூட்டம்"...Enjoy ur sunday !!!