சில நாட்களுக்கு முன் "எனது இளம்பிராய ஆசைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றி வருகிறேன்" என்று சொன்னேன் அல்லவா. இதோ, இன்னுமொரு ஆசை நிறைவேறியது (அல்லது நிறைவேறிக்கொண்டிருக்கிறது).
ஜிக்ஸா பசிள் (Jigsaw Puzzle) - சும்மா சாதாரணம் இல்லே, கண்ணா ! ஆயிரம். ஆயிரம் வில்லைகளை ஒன்று சேர்த்து படத்தில் காண்பித்துள்ள பெட்ரொனாஸ் டவரை நான் செய்து முடிப்பதற்குள், நிஜமாகவே பெட்ரொனாஸ் டவர் கட்டி விடலாம்.
அமெரிக்காவில் இருந்த கஸின், இந்தியா வந்தவுடன் அவனது பொட்டியிலிருந்து ஒரு 500 Pieces வெளியே வந்தது. ஆஹா ! நமக்குத்தான் தரப்போகிறார்கள் என்று நினைத்தால், "வா ! போடலாம் !" என்று அங்கேயே பிரித்து அடுக்க ஆரம்பித்தான். அன்று ஆரம்பித்தது இந்த ஆசை. 'ஐநூறு என்ன பெரிசு ! நாம பெரியவனா வளர்ந்து ஆயிரம் பீஸஸ் வாங்கி பெரூசா ஃப்ரேம் போட்டு வெச்சுக்கனும். "
முந்தய பதிவில் சொன்னதுபோல், Maturity is all about realizing we were wrong - almost all the times. இப்போது தச்சுவுக்கு 32 and 64 pieces பஸில் வாங்கிக்கொடுக்கிறேன். சூப்பராக கிடு கிடுவென போட்டு விடுவான். அந்தப் பஸிலை தொட்டுப்பார்க்கும் போதெல்லாம் எனது விட்டுப்போன ஆசைகள் ஞாபகம் வரும் (யாராவது பேக்ரவுண்ட் மீசிக் போடுங்களேன் !).
அந்த ஆசையை கடந்த பிறந்த நாளின் போது பரிசாக நிறைவேற்றினாள் அம்மா. :). வாங்கும்போதெல்லாம் பரம சந்தோஷமாகத்தான் இருந்தது. பிரித்தபோதுதான் மலைப்பு, திகைப்பு எல்லாம். அந்த நீண்ட நெடிய பெட்ரொனாஸ் டவர் செதில் செதிலாக டப்பாவுக்குள் கொட்டிக்கிடக்கிறது. அதுவும் தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது (ஆயிரம் சின்ன வார்த்தையாகிவிட்டது) வில்லைகளாய். பின்னாடி நம்பர்களும் கிடையாது.
"பலே ! வெள்ளையத்தேவா ! என்னடா இது கீர்த்திக்கு வந்த சோதனை" என்று கட்டம் கட்டி Puzzleஐ கட்ட ஆரம்பித்துள்ளேன். இன்னும் எவ்வளவு நாளோ ! தெரியவில்லை. ஆனால், முடித்துவிடுவேன். எனக்கு இதற்கே தாவு தீர்ந்து போகிறதே ! பதிமூன்றாயிரம் பீஸ் பஸில் எல்லாம் இருக்கிறது ! (இங்கே க்ளிக்கவும்). (நான் வாங்கியது இது)
கிடைத்தால் வாங்கிப் போட்டுப்பாருங்கள். ஜோரான அனுபவம்.
No comments:
Post a Comment