பழந்தமிழில் செலவு என்றால் "பயணம்" என்று அர்த்தம். வாசகர்களுக்கு ஒண்பதாம் வகுப்பில் "இலங்கைச் செலவு" படித்தது ஞாபகம் இருக்கலாம்.
"கண்ணில் அகப்பட்டதையெல்லாம் படமெடுப்பதேயன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே" என்று காமிராவைத் தூக்கிக் கொண்டு மாமல்லபுரம் பயணமானோம். வழியில் அறுபடை வீடு முருகன் கோயிலுக்கும், பூரி ஜகன்னாத் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தோம். இந்த பூரி ஜகன்னாதர் ஆலயம் பலப் பல ஒரிசா மக்களின் கொடையில் கட்டப்பட்டிருக்கிறது. பூரி கோயிலின் "ரெப்லிகா" என்கிறார்கள். மாமல்லபுரம் நுழைந்தவுடன் ஸ்தலசயன பெருமாள் கோயிலுக்கும் சென்று ஒரு கும்பிடு போட்டோம்.
இனிமேல் ஃபோட்டோ.
மாமல்லபுரத்திற்கு வந்த எல்லாரும் ஃபோட்டோ பிடிக்கிறார்கள். பெரும்பாலும் மொபைல் ஃபோனிலிருந்து படம் பிடிக்கிறார்கள். சில பேர் புஜபல பராக்கிரம காமிரா கொண்டு வந்து உருண்டு உருண்டு எடுக்கிறார்கள்.
"இப்படி நில்லு.. அப்படி நில்லு.. நீ இங்கே முன்னாடி வா.... இரு இரு..ஆங்.. ஓகே ! அப்படியே இருங்க.."..... க்ளிக்.
இப்படி சில பேர்.
பாக்கி பேர் கலை நயம் தோய கல் சிற்பங்களுக்கு நடுவில் துளைத்து உயிர்த்திருக்கும் செடிகள் முதற்கொண்டு இன்ச் இன்ச்சாக ஃபோட்டோ எடுத்துத் தள்ளுகிறார்கள்.
நானும் என் பங்குக்கு விவஸ்தை இல்லாமல் படம் எடுத்துவிட்டு வந்தேன்.
ஒரு சில இடங்களைத் தவிர மஹாபலிபுரம் அவ்வளவு சுவாரஸியமாக இல்லை. ஒண்பதாம் வகுப்பில் எக்ஸ்கர்ஷன் வந்தபோது கட்டி உருண்டு விளையாடிய நினைவுகள் மட்டும் சுகந்தமாய் இருக்கிறது.
கைடுகள் தொல்லை அவ்வளவாக இல்லை. ஒரே ஒருவர் மட்டும் கார் அருகில் வந்து "டூ யூ வான்ட் அ கைட் ?" என்றார். வேண்டாம் என்றோம். "ஓ.கே. வுட் யூ லைக் டு கிவ் திஸ் ஓல்ட் மேன் எ டென் ருபீஸ் ஃபார் எ ப்ரேக்ஃபாஸ்ட்? " என்றார். சில பேர் இப்படியும் பிழைக்கிறார்கள்.
சிலைகள். பஞ்ச ரதம் செல்லும் வழியில் அட்டகாசமான பார்க்கிங் வசதி செய்திருக்கிறார்கள். அங்கே பல கடைகள் போட்டு சிற்பங்கள் விற்கிறார்கள். கைக்கடக்கமான குட்டி சிற்பங்களிலிருந்து பூதாகாரமான சிற்பங்கள் வரை விற்கிறார்கள். பார்ப்பதற்கு மட்டும் அழகாக இருக்கிறது. விலை எக்கச்சக்கம். பிள்ளையாரை வைத்து புகுந்து விளையாடியிருந்தார்கள்.
மதியம் வரை அங்கு இருந்துவிட்டு "தக்ஷின் சித்ரா" போனோம். அது வேறு பதிவில்.
6 comments:
Beautiful pictures keerthi :) i have to go some detail visit one day, its been so long i went near some places.
IF you like capturing architecture, then Chidambaram/sirkali/madurai/thanjavur is the place for you! By the way, I've never heard of that Jagannatha temple before. Is it new?
nice pictures....
the last one was excellent.
Jeevan and Dhana, thanks.
Shylu, true. Madurai is my next target. :) Hope you saw my Vaitheeswarankoil pictures.
படங்கள் அழகா இருக்கிறது.. படிக்கட்டும் மிக அருமை. தக்ஷின் சித்ரா என்று கூகிளிட்டபோது இப்பதிவு கிடைத்தது.. :)
Thanks Muthulakshmi - Kayalvizhi
Post a Comment