
இவரைச் சுற்றி பல சம்பவங்கள் நிகழ்கின்றன. சாதாரணமாக எல்லாருக்கும் நிகழும் சம்பவங்களே. ஆனால் அவை அநியாயம் என்று கோபப்படுகிறார் ஸ்ரீதர் வாசுதேவன். அவர் கோபத்தில் நியாயம் இருப்பதாக நாம் உணருகிறோம். ஆனால் அதையும் தாண்டி, அந்த கோபங்கள் நமக்கு வராமல், அநியாயங்களும் அக்கிரமங்களும் மரத்துப்போனவர்களாக நாம் ஆகிவிட்டோம் என்பதையும் உணருகிறோம்.
கமலஹாசன் பாஷையில் "சமுதாயக் கோபம்" கொள்ளும் ஒரு நடுத்தர வர்க்கத்து ஸ்ரீதர் வாசுதேவனின் கோபங்கள் பொங்கி எழும்போது நாமும் நிமிர்ந்து உட்காருகிறோம். ஒரு கொக்க கோலாவின் விலை இரண்டு ரூபாய் அதிகமாக விற்கப்படும்போது உடைகிற உணர்ச்சியுடன் படம் முழுவது வியாபித்து ரணகளம் செய்கிறார். அவரது மன அழுத்தத்தை நாமும் ஸ்க்ரீனில் ஷேர் செய்வதை உணர முடிகிறது.
மன அழுத்தத்தில் ஒரு கிரிக்கெட் பேட்டால் அடிதடி செய்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக கத்தி, துப்பாக்கி என்று க்ராஜுவேட் ஆகி நகரமே இவரைப்பற்றி பரபரப்பாகிறது. தான் செய்த குற்றங்களுக்கெல்லாம் போலீஸ் தேடுவதைக்கூட உணராமல், க்ளைமேக்ஸில் போலீஸ் வந்து சுற்றி வளைக்கும் போது "யெஸ் ! ஹெள கேன் ஐ ஹெல்ப் யூ" என்பது போல பார்க்கிறார். "அன்னியன்" மாதிரியோ "இந்தியன் தாத்தா" மாதிரியோ ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் Down to Earth ஹீரோவாக ஆர். மாதவன் கேள்விகள் கேட்கும் போது நம்மால் நம்மை அந்த இடத்தில் ரிலேட் செய்ய முடிகிறது.
ஸ்ரீதரை வலை வீசித்தேடும் போலீஸாக சீமான். க்ளைமேக்ஸ் முடிந்தபின் எவரது உரை கேட்டு நான் அவமானம் அடைந்தேன். ஒரு செத்த எலியின் மீது மொய்க்கும் ஈக்களை Zoom செய்து காண்பித்து பேக்க்ரவுண்டில் கேட்கும் சீமானின் கருத்து பளார் பளார்.
படத்தின் சப்ஜெக்ட் க்ளாஸ்.
திரைப்படம் ?
நிஷிகாந்த் காமத் - தனது டோம்ப்வில்லி ஃபாஸ்ட் படத்தை அப்படியே தமிழில் எடுத்திருக்கிறாராம். நான் அந்தப்படம் பார்த்ததில்லை. ஆனால் தமிழிலும் அழகாகப் பொறுந்தியுள்ளது.
சில அமெச்சூர்த்தனங்கள், சில லாஜிக் பிழைகளைத் தவிர பல இடங்களில் தூள் கிளப்புகிறார், நிஷிகாந்த். படத்தின் பலம் வசனம். சாதாரண வசனங்கள் தான் என்றாலும் முக்கியமானவை. சிந்திக்க வைப்பவை.
நடிப்பு - மாதவன் முதல் சீனில் மட்டும் பொறுந்தவில்லை. பாக்கி இடங்களில் டாப் க்ளாஸ். சங்கீதாவும் கலக்கியிருக்கிறார். இறுக்கமான கதாபாத்திரத்தில் சீமான். கதைக்களம் பலமாக இருந்தால் எந்த நடிகரும் ப்ரகாசிக்க முடியும் என்று உணர்த்தும் படம்.
ஓளிப்பதிவு காணக் கண் கோடி வேண்டும். ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு Picture Postcard. ஆனால் அடிக்கடி ஃபோகஸ் ஷிஃப்ட் செய்கிறாரோ ?
இசையை நான் கவனிக்கவில்லை.
நிற்க...
இவ்வளவு எழுதிய பின், நியூஸ்பேப்பர்காரர் இந்த வார "ஆனந்தவிகடன்" தூக்கி எறிந்துவிட்டுப் போனார். "ஓரம் போ" மற்றும் "எவனோ ஒருவன்" படங்களின் விமர்சனங்கள் உள்ளடங்கியது.எவனோ ஒருவனுக்கு 41 மதிப்பெண்கள். ஓரம் போவிற்கு 42.
ஓரம் போ விமர்சனத்தில் "சிக்கன் பிரியாணி போல சிக்கென பூஜா.. ஆட்டோவுக்குள் 'நான் சொல்றதைச் செஞ்சா போதும்' என்று கிறங்கடிக்கிறார்" என்று ஒரு இடத்திலும் "...திடீர் திடீரென பாய்ந்துவரும் 'நாஸ்டி காமெடி'களின் நாராசம் தாங்கவில்லை" என்று ஒரு இடத்திலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் 42.
மசாலா, குத்துப்பாட்டு, ஆபாசம் எதுவுமே இல்லாமல் படம் முழுவது சீட்டில் கட்டிப்போட்ட "எவனோ ஒருவன்" சுணக்கமாம்.
போங்கடா......
8 comments:
Good review!
Its very obvious that the once-upon-a-time high-class magazine is taking the 'Non-Vegetarian' route nowadays.
Superb review! this is tempting me to watch the movie... thanks for giving a review about DECENT movie..
Well said abt the A.Vikatan Review!!!
Nowadays they keep diffrent standards for diffrent films(Stars)...
hey
its a blunt copy of Falling Down movie.
http://en.wikipedia.org/wiki/Falling_Down
A very just review.
For the marks, life is not always fair and so is movie reviewing.
Atlast a promising movie-a?
My 'Aa Vi' subscription expired recently and I am still undecided whether to renew it or not.
42 mark for Oram Po vukku kodathathu enakku ennavo correct nny thonuthunga...enna the movie didnt bother about any thing,,,it was so cool and straight from heart movie ,,including the climax...
Evano oruvan la periya sothapal erukunga,,,middle classa pathi padam eduthu multiplex a target panna kudathu ella.!!!
To me..Evano oruvan was a classic. Not sure what affected me but I literally cried for 15 minutes aftr coming out of the theatre due to the heaviness it created in my the mind for that few moments. I hope this is how the film takes one into the movie and mostly many in the theatre emphathize themselves as srithar vasudevan .
Post a Comment