Thursday, December 27, 2007

துன்பம் நேர்கையில் யாழ்

சுக துக்கே, சமே க்ருத்வா
லாபா லாபெள, ஜெயா ஜெயெள !
- சுகம், துக்கம், லாபம், நஷ்டம் என எல்லாமே ஒன்றுதான், எல்லாம் உணர்ந்தவருக்கு.

பகவத் கீதையில் ரொம்ப "சுலுவா" கிருஷ்ணர் சொன்ன விஷயம் இது.
நாம் என்ன கிருஷ்ண பரமாத்வாவா, அல்லது எல்லாம் உணர்ந்தவரா...
ஹ்ம்ம்ம் !

சமய சந்தர்பத்திற்கேற்ப, துன்பம் நேர்கையில் என்னதான் கம்போஸ்டாக இருக்க நினைத்தாலும் உடைந்து போகிறோம். லாஜிக், ரீஸனிங் எல்லாவற்றையும் தாண்டி எமோஷன் ஜெயிக்கும் இடம் - துன்பம். "இதுவும் கடந்து போகும்" என்று எத்தனை பேரால் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும். குருதிப்புனலில் கமல் சொல்வதைப்போல "Every man has his breaking point".

நியாயம் தான். ஜடமாட்டம், "எனக்கு துன்பம் நேர்ந்திருக்கிறது.. இது எனக்குப் பழகிப்போய் விடும், அல்லது காலப்போக்கில் நிவர்த்தியாகிவிடும் அல்லது பனி போல விலகிவிடும்" என்று மன நிலையை கம்போஸ் செய்து கொள்பவரை நான் இன்னும் சந்திக்கவில்லை. சொல்லப்போனால் அப்படியெல்லாம் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. "ஆர்ட் ஆஃப் லிவிங்" ரவிஷங்கரை ஈமெயில் செய்து கேட்க வேண்டும்.

அப்படிச் செய்வதினால் என்ன சாதிக்கிறோம் ? அல்லது என்ன பயன் ? துன்பத்தை வென்று விட்டோம் என்று பொருளா ? அல்லது அந்தத் துன்பம் நமக்கு நிகழவில்லை என்று அர்த்தமாகுமா ? எனக்கு விளங்கவில்லை.

எனக்குத் தெரிந்த வரையில், துன்பத்தை வெல்லவோ அல்லது மறக்கவோ அல்லது பக்குவமாக ஏற்றுக்கொள்ளவ்வோ முடியாது.

அப்படிச்செய்ய நினைப்பதிலும் பயன் இல்லை.
என்ன சொல்கிறீர்கள் ?

3 comments:

Manki said...

கமெண்ட்டா எழுத ஆரம்பிச்சது ரொம்பப் பெரிசா வந்ததால என்னோட ப்ளாகில போட்டுட்டேன். சிரமத்துக்கு மன்னிச்சுட்டு, என்னோட பதிலை இங்க படிங்களேன்: http://kuselan.blogspot.com/2007/12/blog-post_28.html

KRTY said...

Hey Thanks. Will respond you on your comments. :)

Shobana said...

It is my personal opinion that when we try to suppress our feelings during hard times, it will be repressed at a different time. It then becomes a terrible thing to deal with....our minds and hearts will not be able to handle all that pain at one time... so it is good to get rid of it then and there.