Monday, January 14, 2008

பொல்ல்லோ பொல்லல்

"பொங்கல் பொங்கப் போறது... எல்லாரும் வாங்கோ !!" என்று பத்மினி கிச்செனில் இருந்து கத்தினாள். ஒருவரும் வருவதாய்க் காணோம். விடுமுறை நாளில் தனக்கு மட்டும் விதித்த தண்டனையாய் அடுப்படியைப் பார்த்தாள் பத்மினி. ஒரு நிமிட இடைவேளைக்குப் பிறகு, குட்டி வர்ஷா மட்டும் அழகுப் பாவாடையில், குண்டுக் கன்னங்களுடன், துறு துறு கால்களுடன், கொள்ளையடிக்கும் கண்களுடன் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தது.

"குட்டிச்செல்லம்.. குட் மார்னிங் !" என்றாள் பத்மினி.

குட்டி வர்ஷா கன்னத்தில் குழி விழ சிரித்தாள். பொங்கல் பாத்திரம் பொங்கியது.

"பொங்கலோ பொங்கல்" என்று பத்மினி கத்தினாள். லிவிங் ரூமிலிருந்து ஒரு சப்தத்தையும் காணோம்.

"பொல்ல்லோ.. பொல்லல்" என்றது குட்டி வர்ஷா...

பத்மினி குட்டி வர்ஷாவை வாறி அணைத்து முத்தமிட்டாள். "இன்னொரு வாட்டி சொல்லு. அம்மா என்ன சொன்னேன் ?"... "பொல்ல்லோ.. பொல்லல்"..

திடீரென ஒரு அலறல் வந்தது, லிவிங் ரூமிலிருந்து... "வேட்டையாடு விளையாடு ஸ்டார்ட் ஆயிடுச்சு" என்று வினித் கத்தினான்.

வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த தாத்தா, பாயில் இன்னும் படுத்துக்கொண்டிருந்த பாட்டி, கம்ப்யூட்டரில் ஜல்லி அடித்துக்கொண்டிருந்த அருண் எல்லாரும் லிவிங் ரூமுக்குள் படையெடுத்தனர்.

பத்மினியும் கேஸ் ஸ்டவ்வை அணைத்துவிட்டு, டீ.வி. பார்க்கச் சென்றாள்.

குட்டி வர்ஷா மட்டும் மெதுவாக அவர்களிடம் சென்று, "பொல்ல்லோ பொல்லல் !" என்றது. யாரும் கவனிக்கவில்லை.

7 comments:

Adaengappa !! said...

Thats reality i gues..
Lemme know what happened when li'l Dachu said பொல்ல்லோ.. பொல்லல...

Adiya said...

nice.

:) இனிய பொங்கலோ பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

Idhu KH and GM oda VV kku kudukkara vilambarama...illa :)

Manki said...

இதில் நீங்கள் உணர்த்த வரும் கருத்தில் (சரியாகத்தான் புரிந்து கொண்டேனா?) எனக்கு உடன்பாடில்லை. ஆனால் கதை என்று மட்டும் பார்த்தால், நன்றாயிருக்கிறது.

நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால்: கண்ணத்தில் -> கன்னத்தில். இது குறை சொல்வதற்காக அல்ல. ஒருவேளை நீஙகள் பிழைகளைத் திருத்த விரும்பலாம் என்பதற்காக.

KRTY said...

Adengappa, :) avanukku ellame happy birthday !

adiya, thanks.

shrikanth, guess KH aint that bad yet.

manki, which part are you not convinced about. and thanks for pointing out the errand.. corrected.

Manki said...

"which part are you not convinced about"

இந்தக் கதையைப் படித்ததும் கிட்டத்தட்ட தங்கர்பச்சான் படம் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் கிடைத்தது. பலர் ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருக்கும் டயலாக்கையும் இது நினைவுபடுத்தியது ("இப்படியே போனா நம்ம கலாச்சாரம் என்ன ஆகுறது?", "நம்ம கலாச்சாரத்தையெல்லாம் மறந்துட்டு இப்படி நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கலை").

உங்கள் கதையும் கிட்டத்தட்ட அதே மாதிரி, "இப்போதெல்லாம் பண்டிகை என்பது டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் பார்ப்பது என்று ஆகிவிட்டது" என்பதை ஹைலைட் செய்வதுதான் என்னவோ போல் இருக்கிறது. ஆனால் கதை எழுதப்பட்ட விதம், அமைப்பு எல்லாம் நன்றாக இருக்கிறது.

Me too said...

கரும்பு தின்ன கூலியா என்றிருப்பேன் வேறு (அண்ணாத்தே)படமாயிருந்தால்!!