Friday, February 08, 2008

பின் ஸீட்டு கடலை

சென்ற வாரம் கொஞ்சம் பரபரப்பாக நகர்ந்ததால் ப்ளாக் பக்கம் வரமுடியவில்லை. ஒரு வாரத்தில் ஸ்வாரசியமாக எதுவும் நடக்கவுமில்லை. அடுத்தவாரம் வேலன்டைன்ஸ் டே.. அதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது போல் ரேடியோவில் அறிவித்திருக்கிறார்கள். லேண்ட்மார்க்கில் கணஜோராக க்ரீடிங் கார்ட் விற்பனை நடைபெற்று வருவதாக லோக்கல் செய்தித்தாளில் செய்தி (!).

அலுவலகத்திலிருந்து வேனிலும் பஸ்ஸிலும் திரும்பி வீடு வரும்போது, எனக்குப் பின்னால் சீட்டில் அமர்ந்திருக்கும் யுவனோ,யுவதியோ கர்மசிரத்தையாக ஒன்றரை மணி நேரம் கடலை போடுகின்றனர். ஒட்டுக்கேட்பது தவறுதான் என்றாலும் "ஹேய்.. என் கவிதை பிடிச்சுதா ?... இல்லையா.. இல்லே பொய் சொல்லரே... அப்படின்ன புடிக்கலன்னுதானே அர்த்தம்.. அப்பொ கவிதை மட்டும்தான் புடிச்சுருக்கு.. இல்லையா ?" என்று எனக்கு முன் மூன்று சீட்டுகளுக்கு கேட்கும்படி காட்டுக்கத்தலாக கத்தினால், கேட்காமல் என்ன செய்வது ?

பல சமயம் மிரட்டலாகத்தான் காதலிக்கின்றனர். நான் பயணிக்கும் ஒன்றரை மணி நேரத்தில் குறைந்த பட்சம் மூன்று தடவை எதிர் முனை தன்னை காதலிக்கிறாரா என்று ஊர்ஜிதப் படுத்திக்கொள்கின்றனர். "என்னை நீ லவ் செய்யரியா இல்லையா ? எவ்ளோ லவ் பண்ணறே ?"... அடப்பாவி மக்கா.. காதல் இவ்வளவு ஸ்திரமற்றதா ? இங்கே சொல்லமுடியாத அளவுக்கு அபத்தமாகவும் பேத்தலாகவும் சம்பாஷனைகள்.


இந்த செல்ஃபோனில் கடலைக்காதல் செய்பவர்கள் அபரிமிதமாகப் பேசும் விஷயம் சினிமா. அப்புறம் வீட்டுப் ப்ரச்சனைகள். பெரும்பாலும் பெண்ணின் வீட்டுப் ப்ரச்சனைகள். இவை இரண்டையும் விட்டால் எஞ்சியிருப்பது லிட்டர் கணக்கான ஜொள்ளுதான்.

சில சமயம் காது கூசும் அளவுக்கு அந்தரங்கமாகப் பேசுவார்கள். அப்படிப் பேசிய ஒரு தடவை கொஞ்சம் திரும்பி "ஒன் செக்கண்ட்" என்றேன். எதிர்முனையிடம் நிறுத்தச்சொல்லிவிட்டு .. "யெஸ்" என்றார்.. "எவ்ரிபடி இஸ் லிசனிங்... " என்றேன். லேசாக அசடு வழிந்துவிட்டு.. "ஹெ ! ஹெ! கான்ட் ஹெல்ப் தீஸ் திங்ஸ் இன் லவ்.." என்றார். எனக்குப் புரியவில்லை... என்றாலும் திரும்பி உட்கார்ந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்னைப்பார்த்து புன்னகைத்து "டோன்ட் ஸ்டாப் தி ஃபன்" என்றார். வாஸ்தவம்தான்.

ஏன் இவற்றையெல்லாம் பஸ்ஸில் / வேனில் செய்கிறார்கள் ? அலுவலகத்தில் சேர்ந்தார்ப்போல் இவ்வளவு நேரம் கிடைப்பதில்லை. வீட்டில் / ரூமில் ப்ரைவசி இல்லாமல் இருக்கலாம். ஆகவே ஸ்ட்ரேஞ்சர்களுக்கு மத்தியில் உட்கார்ந்து கணக்கில்லாமல் கடலை போடுவது இவர்களுக்கு கம்ஃபோர்டபிளாக இருக்கிறது.

போட்டுவிட்டுப் போகட்டும். ஒய் ஸ்டாப் தி ஃபன்.

4 comments:

Anonymous said...

:)

Shobana said...

Yes, why stop the fun??

Aaanaa kekravaalukkuthaan kaadhu koosum...but, athai kekkum bothu...it is funny!!!

Chakra said...

என் கீர்த்தி சும்மா ஃபன் எல்லாம் ஸ்டாப் பண்றே? என்ஜாய் பண்ணு. :)

Anonymous said...

dhinam 1.30 hr travel panriye bore adikum paavam nu nenachen..
interesting a dhaan pogudhu unakku..
naan kooda pesama enga company bus la office polaam nu yosikaren :P