Tuesday, February 12, 2008
காகம் கரையும்
என் கேமெராவில் சர்வ சாதாரணமாக சுமார் முப்பதாயிரம் புகைப்படங்கள் எடுத்திருப்பேன். அவற்றில் குறைந்தபட்சம் முன்னூறு படங்கள் "காக்கா" படங்கள். ஞாயிறு காலை போர் அடிக்கும் போது, மொட்டை மாடிக்கு கேமராவையும் நடத்தி அழைத்துச்செல்கையில் அகப்படும் ஒரே ஜீவன் - காக்கா. மற்ற போட்டோக்ராபர்கள் மாதிரி போட்டோ எடுக்க , ஒரு பஞ்சவர்ணக்கிளியையோ, சிறகடித்துப் பறக்கும் பருந்தையோ என் மாடியில் காண முடியாது.
காக்கையின் விங் ஸ்பேனும் அவ்வளவு அழகாக இருக்காது. அதனால் சோம்பேறித்தனமாக சுவற்றின்மேல் உட்கார்ந்து பராக்குப் பார்க்கும் காக்கை தென்பட்டால் ஒரு க்ளிக் செய்துவிட்டுத்தான் மறுவேலை.
என் கேமரா ஐதீகப்படி ஒரு காக்கையின் போட்டோ எடுத்துவிட்டு பாக்கி எந்த போட்டோ எடுத்தாலும் அமர்க்களமாக வருகிறது. சென்ற சனிக்கிழமை எடுத்த காக்கையின் போட்டோவே கொஞ்சம் அமர்க்களமாக வந்துவிட்டது.
இல்லை ?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
thiramayana pugaippada-kaararukku kaakkayum pon konju enru niroobithu vitteergaL! arumai!
he he ! Thank you Vinesh
சென்ற சனிக்கிழமை எடுத்த காக்கையின் போட்டோவே கொஞ்சம் அமர்க்களமாக வந்துவிட்டது.
இல்லை ?
- illai!very ordinary photo!
Post a Comment