Monday, April 14, 2008

சென்னையில் நிழல் பற்றாக்குறை


[படம் - நன்றி - வேளச்சேரி ஜி. பாலசுப்ரமணியன்]

பில்போர்டுகள், ஹோர்டிங்குகள், விளம்பரப் பலகைகள் என அத்தனையையும் அடி, துவம்ஸம் செய்துவிட்டார்கள் மாநகராட்சியினர் - கடந்த இரண்டு நாட்களில்.

வானளாவி் அகண்டு பூதாகார பிம்பங்களாய் நயந்தாராவையும், நமீதாவையும் இனிமேல் அண்ணாந்து பார்த்துச் செல்ல முடியாது. சர்ச் பார்க் காண்வென்டின் முன் பக்கத்தில், சென்ற வெள்ளிக்கிழமைவரை பிரம்மாண்டமான ஹோர்டிங்குகளைப் பார்த்துப் பழகி இன்று திடீரென்று விஜயும் அஜீத்தும் பிய்த்து எறியப் பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

வெள்ளை அடிக்காமல், சௌகர்யமாக ஹோர்டிங் போட்டு மறைத்த கட்டிடங்கள் பல்லை இளித்துக் கொண்டு காட்சியளிக்கின்றன - சென்னை மாநகரிலே.இத்தனை நாளாக பாராத பில்டிங்குகள் பளீரென்று தெரிகின்றன.

எப்பொழுதோ ஒரு முறை, சென்னையில் பல ஹோர்டிங்களுக்குச் சொந்தக்காரர் ஆற்காடு வீராசாமியின் உறவினர் என்று செய்திகளில் கேள்விப்பட்டேன். இப்பொழுதென்ன ஆயிற்றோ, தெரியவில்லை.

விஷயம் என்னவென்றால், போதிய அனுமதியில்லாத அல்லது சட்டத்துக்குப் புறம்பான விளம்பரப் பலகைகளை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவின் படி இது நிகழ்ந்துள்ளது. பல பேர் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எங்கோ உதைக்கிறது. அதெப்படி சொல்லிவைத்தாற்போல் அத்தனை ஹோர்டிங்குகளும் சட்ட விரோதமாக நிறுத்தப் பட்டிருக்கின்றன ? சம்திங் வெரி ஃபிஷி அபௌட் இட்,..

எது எப்படியோ, ப்ரின்டிங் டெக்னாலஜியை தினமும் ரசித்து மகிழ்ந்த எனக்கு இது பெரும் டிஸ்ஸப்பாயின்ட்மென்ட். சபையர் தியேட்டருக்கு எதிரில் இருக்கும் அதி பயங்கரமான் பெரும் ஹோர்டிங்கில் பில்லா போஸ்டரில் அஜித்குமார் அந்தரத்தில் பறந்து கொண்டிருப்பதை கம்பெனி பஸ்ஸில் செல்லும் போது பார்த்துக்கொண்டே செல்வேன். என்றேனும் ஒருனாள் நான் எடுக்கும் போட்டோ இம்மாதிரி வரவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டு. (அது ஏனோ அஜித் மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்படவில்லை).

இது வெறும் தற்காலிகமான நடவெடிக்கை என்று தோன்றுகிறது. பணம் கொழிக்கும் சமாச்சாரம்.

அது சரி ! சுப்ரீம் கோர்ட் ஆணைகளில் அரையணா பிரச்சனைகள் மட்டும் டக் டக் என்று நிறைவேற்றப் படுவது எப்படி ? காவேரித் தீர்ப்பாணைகள் ஏன் தூங்குகின்றன ? டான்சி நில பேர வழக்கு, ஸ்டாலின் சம்பந்தப்பட்ட பாலங்கள் கட்டுமானப் பணிகளின் ஊழல், இவையெல்லாம் தூங்குகின்றனவே ?!!

ஹ்ம்ம்.. ! என்னவோ போங்கப்பா ! சம்மர் டைமில் நிழல் தரும் ஹோர்டிங்குகளை அகற்றியாகிவிட்டது.

அட்லீஸ்ட் தசாவதாரம் வரையாவது பொறுத்திருந்திருக்கலாம்.

4 comments:

Jeevan said...

If I would have knowing this before, I had gone out ones sighting more beautiful banners before it have banned. I agree with u, these hoardings may occur again.

Narayanan Venkitu said...

I am glad this happened Keerthi.
It's a wonderful job by the Govt...to prevent this 'Cancer' called Hoardings..spreading all over and distracting people..

It's ok..if they are kept in a few places..but imagine the whole set crumbling into Church Park school etc.

I hope this is not like the usual encroachment removal stuff..where everything goes back...to SQUARE-1 in a few weeks.

I liked your style here..!! When you wrote about Vijay/Ajith getting torn away !

Last line sounded good too !

Arcot Veerasamy - Hmm..I've read about that too !

PS - My mom today told me that she is a big fan of your Blog...( Thanks to your recent half-written story :-) ).

KRTY said...

Jeevan, Im guessing 2 months. Whats your bet ;)

Venkittu Sir, I wouldnt agree with you about the distraction part, totally (although i agree partially). We will discuss about it.

Im very glad to know your mom is a fan. My thanks to you and your mom. And reg the story, thats my failure :(

Anonymous said...

Keerthi... dont miss this chance to click the unveiled beauty of Panagal park.. i mean the rear side of the main entrance.. facing the old Nalli, Kumaran silks etc... its indeed a beautiful view that i enjoy when i passby.. still we (your regular readers) would love to see its pic in your blog! pls give a try!!! Ungal camera sevai, inda naatukku thevai.

- Priya