டைம்ஸ் ஆஃப் இந்தியா - சென்னை எடிஷன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதோ ? மும்பையில் இருந்தபோது இந்தப் பேப்பரைப் பார்த்தாலே வெறுப்பாக இருக்கும். இந்த பேப்பரும் "மிட் டே" என்ற மத்தியானப் பத்திரிக்கையும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு த்ராபையாக இருக்கும். ஆனால் சென்னை எடிஷன் பரவாயில்லை. கொஞ்சம் நன்றாகவே இருக்கிறது. மரியாதை கொடுத்து ஆபீஸ் வரை எடுத்துச் செல்கிறேன்.
மு.கு - ஆபீஸில் தினம் தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு ஸீட்டில் வந்து உட்கார்ந்தால் அப்படியே கண்கள் சொக்கும். ஆனந்தமான நித்திரை சூழ தியான நிலையில் தலை "பொட்" என்று கீபோர்டில் விழும். சுதாரித்து எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தால், நமது மேனேஜர் தமது பணி அத்தனையையும் விடுத்து நம்மை முறைத்துக் கொண்டிருப்பார். இதெல்லாம் தேவையா ? அதற்காக தயிர் சாத்தத்தை தியாகிக்கவும் முடியாது. இதற்குச் சிறந்த வழி - இங்கிலீஷ் பேப்பர். மத்தியான தூக்கத்தை போக்க இதை விட வேறு வழி இல்லை.
-------
இன்று சித்ரா பௌர்ணமி. யாராவது பீச்சாங்கரை சென்று அழகு நிலவை பிரதிபலிப்புடன் போட்டோ எடுத்து வாங்களேன்.
-------
மறுபடியும் காங்கிரஸிலிருந்து விலகியிருக்கிறது தா.மா.கா !
அதுசரி.. ஒக்கேனக்கல் பிரச்சனையில், கர்நாடக காங்கிரஸுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் ஒரு குரல்கூட எழுப்பவில்லையே ? எதிர்ப்பு சொல்லியிருந்தால் கூட யாருக்கும் கேட்டிருக்காது. எனக்குத் தெரிந்த அளவில் அரசியலின் அத்தனை உருவங்களையும் காங்கிரஸில் காணலாம். இந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுடன் உடன் படிக்கை. கேரளாவில் ஜன்ம விரோதி. கர்நாடகாவில் காவிரி காப்பார்கள். தமிழகத்தில் கேட்பார்கள் !
சொல்ல முடியாது, வேறு ஏதாவது ஒரு மாநிலத்தில் பிஜேபியுடன் கூட்டனி வைத்தாலும் வைப்பார்கள்.
"என்னாங்கடா ! கலர் கலரா ரீல் உடரீங்க !!?" என்று தத்துவமேதை கவுண்டமணி சொன்னதுதான் ஞாபகம் வருகிறது.
-------
தசாவதாரம் ஆடியோ பாடியோ, இந்த வெள்ளி நடை பெறுகிறது.
படம் நாத்திகம் பத்தி இருந்தாலும் ஆத்திகமா இருந்தாலும், நல்ல படமா இருக்கனும் ஆண்டவா !
-------
2 comments:
Eswara! padam nalla padiya release aaganum, apram hit aaganum... namma kamal sandoshama irukkanum.
>> மறுபடியும் காங்கிரஸிலிருந்து விலகியிருக்கிறது தா.மா.கா !
- Source pls? Can't find it anywhere.
Post a Comment