Monday, April 21, 2008

Spending Power @ Sathyam Cinemas

Spending Power

Sathyam Cinemas has carved a niche for itself as a premium entertainment destination in the city. It is thus a very well known fact that people at Sathyam are those with the power to spend, thereby the right target audience for any brand trying to leverage on the property.

இது www.SathyamCinemas.com மில் கிடைத்த தகவல்.

சத்யம் சினிமா தியேட்டரில் சினிமா பார்க்க, குறைந்தபட்சம் எழுபத்தைந்து ரூபாயிலிருந்து அதிக பட்சம் நூற்று இருபது ரூபாய் வரை டிக்கெட் செலவாகிறது.

டிக்கெட் விஷயத்துக்கு அப்புறம் வரலாம். உள்ளே உள்ள கொறிக்கும் ஐட்டங்களின் விலையை முதலில் பார்ப்போம்.

வெகு சாதாரணமான வெஜெடெபிள் பப்ஸ், ஒரு மீடியம் கோக் வாங்கினால் எழுபது ரூபாய் சுளையாக கபளீகரமாகிவிடும். இதிலும் நண்பர்களுடன் சென்று ஜபர்தஸ்தாக "நான் வாங்கறேன்டா மச்சி ! " என்று சவுடால் விட்டுவிட்டு "ஒரு வெஜ் பப்ஸ், ஒரு சிக்கன் பப்ஸ், ஒரு ஹாட் டாக், ஒரு சில்லி பனீர், ஒரு சாக்லேட் எக்லேர், ஒரு லார்ஜ் பாப் கார்ன், அஞ்சு கோக்... எவ்ளோ ஆச்சு ?" என்று கேட்டால் ஹார்ட் அட்டாக் சர்வ நிச்சயம். அடுத்த பத்தி செல்வதற்கு முன் கணக்கு போட்டு, எவ்வளவு ரூபாய் ஆகியிருக்கும் என்று ஊகியுங்கள் பார்க்கலாம்.

ஐந்து பேருக்கு சாதாரணமான ஒரு ஸ்னேக், ஒரு கோக், அப்புறம் ஐந்து பேரும் பகிர்ந்துண்ண ஒரு பாப் கார்ன் - இதற்கு ஆகும் விலை நானூற்று எண்பது ரூபாய். தியேட்டருக்கு வெளியில், இதே ஐட்டங்களின் கூட்டு விலை - அதிக பட்சம் நூற்றைம்பது ரூபாய்.

என்னதான் சில்லி பனீரின் டேஸ்ட் சூப்பராக இருந்தாலும், மொத்தமாக வரும் பில் கொஞ்சம் அதிரவைக்கிறது என்பது உண்மை. அதி முக்கியமாக, மீடியம் பாப் கார்ன் - Rs. 55 என்பது டூ மச். ஆனால் க்யூ கட்டி அலை மோதி வாங்க மக்கள் இருக்கிறார்கள்.

மொத்தச் செலவு ?

ஆவரேஜ் பார்ப்போம். இரண்டு பேர் டூ வீலரில் வந்து படம் பார்க்க சத்யம் தியேட்டரில் எவ்வளவு ரூபாய் செலவாகும் ?

முதலில் பார்க்கிங் - ரூ. 10
அப்புறம் டிக்கெட் - ரூ. 100 * 2 = ரூ. 200
அப்புறம் கொறிக்ஸ் - ரூ. 30 * 2 + ரூ. 35 * 2 + ரூ. 55 = ரூ. 185

ஆக மொத்தம் ரூபாய் முன்னூற்று தொன்னூறைந்து. Rs. 395. அப்ராக்ஸிமேட்லி, தலைக்கு இருநூறு ரூபாய். கடைசியாக சொன்னது மிகையாகத் தெரியலாம்.. ஆனால் ஆன் எ ஆவெரேஜ், அவ்வளவு நிச்சயம் வரும்.

மாதத்துக்கு மூன்று லட்சம் பேர் இங்கே சினிமா பார்ப்பதாக சத்யம் சினிமா வலை மனை தெரிவிக்கிறது. "..are those with power to spend..." என்று மேலே குறிப்பிட்டது ஒரு வகையில் உண்மைதான் போல !

8 comments:

யாத்ரீகன் said...

But satyam is far far far better than iNOX in chennai. The way they treat people coming to watch movie and the price of snacks inside iNOX is higher than satyam, we dont get tickets less than 100 bucks.. except the snack matter , i feel satyam is worth the ticket money

Saravanan said...

definitely when the value (strength) of the buyer is increasing this is not bringing any surprise

Unknown said...

thats obvious... if you are getting such kind of ambiance then its worth spending.

how much time to go to a movie that too in satyam?... once in a month or twice?
then its worth spending that money to have a nice time, feel together with family and friends....

thanks to the govt. atleast the tickets are affordable.

Ramya said...

satyam ku 2-wheeler la pogravanga naraya per,(atleast couples..tomy knowledge) oru pop corn vaangi in between chair la sorugi eduthu saapadradhu dhaane vazhakkam..

men dont prefer/like pop corn as much as women.. idhu ennoda opinion.. enna solrenga..

idhellam seri..naraya post panreenga.. rajagopalum thirudanum next part engappa.. waiting for it..

Anonymous said...

idhellam sari.nee enna solla vare??
is the post about exorbitant prices n sathyam cinemas?

Shreekanth said...

Sathyam Theatre kku unnai thavira yaarodu padam paarka ponaalum onnum korikardhu illai. :).... Nanba nee vaazhga

KRTY said...

Yathreekan, true. Sathyam is worth the ticket money.

Saravanan, Value ? Would you define that. If you mean affordability. yes I agree with you.

Dhaa, No sir. Not right. I wouldnt say it is direct exploitation. But the pricing is heavy. Period.

Ramya Harish, It is not anyone's preference. People are forced by impulse to buy something.. or rather spend money.. dont you think so ?

PK, No.. it is just a read through Sathyam's declaration that people coming there are the people powered to spend.

Shreekanth, Nee romba nallavan da !

Saravanan said...

Yes, I meant the financial freedom that the growing generations have. Definitely people living on the streets may never get a chance to step into this complex in future, right?