Tuesday, May 20, 2008

சொல்லுதல் யார்க்கும் எளிய.. Updated

"சும்மா ஒரு பணக்காரப் பொண்ண காதலிக்க வேண்டியது... அப்புறம் கல்யாணம் செஞ்சு செட்டில் ஆயிட வேண்டியது... " என்று ஒரு டையலாக் காதில் விழுந்ததும் யோசனையில் ஆழ்ந்தேன்.. காதலிப்பது பற்றி இல்லை... அந்த சொற்றொடர் குறித்து.

ஒரு நீண்ட நெடிய ப்ராஸஸ் மிகுந்த செயல்களை ஒன்றாக்கி ஒரே வரியில் சொல்வதால், கேட்பதற்கு அது அச்சீவபிளாக - செயத்தக்கதாகத் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஆனால், செய்ய ஆரம்பிக்கும் போது, அதன் க்ரானுலர் டீடெயில் (நுணுக்கமான விஷயங்கள்) தரும் பிரச்சனைகளுக்கு நாம் தயாராக இருப்பதில்லை.

உதாரணத்திற்கு, வீட்டில் யாரும் இல்லாத ஒரு மாலைப் பொழுதில் என் சித்திக்கு போன் செய்து "காய்கறி நறுக்காமல், உடம்பு நோகாமல் ஒரு டிபன் செய்து சாப்பிடனும்.. என்ன செய்யலாம் ?" என்று கேட்டதற்கு "பொங்கல் செய்யலாம்" என்றார் சித்தி.

"பலே கீர்த்திவாசா !! செய்து தான் பார்ப்பமே !" என்று முடிவெடுத்து.. "என்னென்ன சாமான் வேணும் ?" என்று கேட்டேன்.

"அரிசி.. மிளகு.. பயத்தம் பருப்பு.." என்று சொல்ல ஆரம்பித்தபோதுதான் சமையலின் க்ராவிட்டி எனக்குப் புரிய ஆரம்பித்தது..

பயத்தம்பருப்பை எப்படி கண்டுபிடிப்பது.. ?

(இன்னும்...)

--- Updated : 22May08---

ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டால், முயற்சியில் காலத்தை ரொம்பக் கழிக்காமல் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று - உதவி கேட்பது. சித்தியை கேட்டே விட்டேன்.

"பயத்தம் பருப்பு தெரியாதாடா ? ம்ம்... ஒன்னு பண்ணு... கொஞ்சம் வெள்ளையா ஓவலா இருக்கும்.. அது உளுத்தம் பருப்பு.. அது இல்லை. அப்புறம் பயத்தம் பருப்பு, இருக்கறதிலேயே குட்டியா இருக்கும்.. " என்பது போலப் பல வர்ணனைகளைக் கொடுக்க ஆரம்பித்தார். உத்தேசமாக இதுதான் பயத்தம் பருப்பு என்ற முடிவுக்கு நான் வர சுமார் பத்து நிமிடங்கள் ஆனது. அதற்குப் பிறகு நான் பொங்கல் செய்ய ஒன்றரை மணி நேரம் ஆனது, தனிக் கதை..

இப்படி, பல செயல்பாடுகள் அடங்கிய ஒரு விஷயத்தை, ரொம்ப சுலுவாக (சுலபமாக) ஒரு வரியில் சொல்வோம். கேட்பதற்கு, அந்த செயல்களைச் செய்வது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினம் குறைவானதாகவே தோன்றும். செயல்படுத்தும்போது அதன் கஷ்டம் உணரப்படும் என்பது வேறு விஷயம்.

ஆனால் Birds Eye Viewவில் பார்ப்பது போல், பெரிய விஷயத்தைச் சுருக்கிச் சொல்வதால், நம்பிக்கை வளர்கிறது.

ஒரு சிலபேர் அனுபவஸ்தர்கள். "கார்த்தாலே ஒரு ஆறரை மணி வாக்கிலே மாயவரம் போய் சேரும். இறங்கி ப்ளாட்பாரம் வழியா மெயின் என்ட்ரன்ஸ் வெளியே வந்தீன்னா, நிறைய டாக்ஸி இருக்கும். இண்டிகா எல்லாம் புடிக்காதே. அம்பாஸடர்காரன் எவனையாவது கூப்பிடு. கஞ்சனூர் போகனும்னு சொல்லு.. பேர் மினிமம் இருனூறூ ரூபாய் கேட்பான்...." என்று ஒரு டீடெயில்ட் ஸ்பீச் கொடுப்பர். இதை சுருங்கச் சொல்வதென்றால், "கார்த்தால ரயில் இறங்கி டேக்ஸி புடிச்சு கஞ்சனூர் போயிடு.." எனச் சொல்லலாம்.

இதில் எது சிறந்தது ?? அது கேட்பவரைப் பொறுத்தது.

பொதுவாக, அக்கறை எடுத்துக்கொண்டு பேசினால் விலாவரியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வது என்பது பெரும்பாலும் கழித்துக் கட்டுவது போல இருக்கும். சில சமயங்களில் குழப்பம் வராமல் இருக்க, சுருங்க்கச் சொல்வதுண்டு. ஆனால், மோஸ்ட்லி.. கழட்டி விடுவதற்கு.

இப்பொழுதெல்லாம், "DETAIL" என்பதற்கு வேல்யு இல்லை.. அல்லது குறைந்த மதிப்பே உள்ளது. "அஞ்சாதே" படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, அதன் விளக்கமான கதை. (பலபேருக்கு அதுதான் பிடிக்கவில்லை). யாரும் "அவருக்கு என்ன ஆச்சு.. இது எப்படி திடீரென வந்தது.." என்று கேள்விகேட்க முடியாது. அத்தோடில்லாமல், அந்த டீடெயில் கதைக்கும் கதாமாந்தர்களுக்கும் வலு சேர்க்கிறது. இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்திலும் இப்படித்தான் படம் எடுக்கிறார்கள். "Assassination of Jesse James by the coward Robert Ford" பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் பார்க்கவும்.

அது சரி, நீங்கள் எப்படி ?

4 comments:

Anonymous said...

Rombha kastama visiyatha rombha simple aa solliteenga :)

nice post

Anonymous said...

Rombha kastamaana visiyatha rombha simple aa ..puriyara maathiri solliteenga :)

nice post

KRTY said...

Jeyasaravanan rk, thanks. :)

Anonymous said...

makkaloda 'listening ability' oru nalaiku pala aayiram vishayangala kavanam seludha try panradhaal badhika patrukku IMHO..

ketka aal illena seekirama surukama sololitu nadayai katradhudhaan better