Tuesday, May 27, 2008

குருவிக்குருவிக்குருவீ... அடிச்சா !!!!



நேற்று "குருவி" பார்த்தேன்.

ஒரு சினிமாக் கலைஞன் எனப்படுபவன், தன்னைக் காணவரும் ரசிகனுக்கு மூன்று மணி நேரம் தடையில்லாத சந்தோஷத்தைக் கொடுக்கக் கடமைப்பட்டவன். என் வாழ்க்கையில் இத்தனை சந்தோஷமாக நான் படம் பார்ப்பது இது இரண்டாவது முறை.
(முதல் முறை அவ்யுக்தா வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்)

காமெடிக்கென தனியாக வரும் காட்சிகளைத் தவிர, பாக்கி அனைத்து காட்சிகளிலும் விழுந்து புரண்டு சிரித்து மகிழ்ந்தேன். விஜயின் ஒவ்வொரு அபிலாஷையிலும் மயிர்க்கூச்செரிவதென்றால் படம் முடியும் தருவாயில், அனைத்து ரோமங்களும் உடம்பிலிருந்து உதிர்ந்துவிடும். அவ்வளவு இம்பாக்ட். சீராகப் போய்க் கொண்டிருக்கும் கதையில் திருப்பம் வருவது விறுவிறுப்பைக்கொடுக்கும். ஆனால் இங்கே, இருபது செக்கண்டுக்கு ஒரு ட்விஸ்ட்... அந்த ட்விஸ்டில் இன்னொரு ட்விஸ்ட் என்று பார்வதி பவன் ஜாங்கிரியைக் காட்டிலும் அதிக ட்விஸ்ட்கள் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தரணி.

வள்ளலார் ஸ்வாமிகளைப் போல, தியேட்டருக்குள் சென்றவுடன் ஜோதியில் ஐக்கியமாகிவிட வேண்டும். அப்பொழுதுதான் பரமானந்தம் நமக்குக் காத்திருக்கும். (இல்லையென்றால் ப்ராண அவஸ்தைதான்).

உதாரணத்திற்கு ஒரு காட்சி சொல்கிறேன். போய் காப்பி சாப்பிட்டுவிட்டு திடமாக வந்து பாக்கி பத்தியைப் படியுங்கள்.

விஜய் ரேஸ் கார் ஓட்டுகிறார். இத்துப்போன ஸ்கோடா ஆக்டேவியா கார் ஒன்றை ஸ்டார்ட் செய்து பறக்கிறார். முதல் லேப்பில் பின்பக்கம் எகிறுகிறது. கொஞ்ச நேரத்தில் பானெட் பறக்கிறது. அடுத்த லேப்பில் இடது சைட் கதவு பிளந்து கொண்டு காரைவிட்டுப் பிரிகிறது. நொடிப்பொழுதில் வலது சைட் கதவும் பறந்து செல்கிறது. என்னடா !! இப்படி நடக்கிறதே என்று யோசித்தால், புவியியலில் ஐன்ஸ்டீன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. "When a body travels faster than the speed of light, it tends to loose mass/weight". ஆஹா ! பாமரருக்கும் அதைப் புரியவைக்க விஜய் உயிரைப் பணயம் வைத்து விளக்குகிறார்.

அப்புறம் தான் நாம் எதிர்பார்க்காத திருப்பம். உயிரை உலுக்கும் திருப்பம். விஜய் காரின் ஆக்ஸிலரேட்டர் பெடல் டமால் என உடைந்து காரை ஓட்டைசெய்து சென்று விழுந்துவிடுகிறது. ஐயையோ!!!!!! என்ன ஆகுமோ.. ரேஸில் அஜித் மாதிரி இருப்பவர் முந்துகிறார். விஜய் பின்னடைகிறார். ரேஸின் முடிவுக்கோடு தெரிகிறது... ஆ !!! என்ன நடக்குமோ... பதை பதைக்கிறது. விஜய் தோற்பதா.... ??? அதுவும் அவர் படத்திலா ??? அங்கேதான் ட்விஸ்ட் வைக்கிறார் தரணி.

விஜய் குனிந்து ஆக்ஸிலரேட்டர் வயரை எடுக்கிறார். ஜஜெய்ங் !!!!

நான் சீட்டு நுணிக்கு வந்துவிட்டேன். நகங்கள் மட மடவென கடிக்கப் படுகின்றன....

ஆக்ஸிலரேட்டர் வயரை வாயில் வைக்கிறார்... ஜஜெய்ங் !!!! ஜஜெய்ங் !!!!

என் கண்கள் அகலமாக விரிகின்றன. வாய் பிளந்து "ஆ" என தியேட்டரே பார்க்கிறது.

விஜய் வயரை வாயில் வைத்தபடி தலையை ஒரு சிலுப்பு சிலுப்புகிறார். ஆ ஆ ஆஹா !!!

அந்த டப்பா வண்டி, தரையை விட்டுப் பறந்து சென்று முடிவுக்கோட்டை ஆகாயமார்க்கமாகத் தாண்டுகிறது.

நான் ஸீட்டைவிட்டு எழுந்து குதிக்கிறேன். கூட வந்த என் சகாக்கள் அனைவரும் ஆனந்தத்தில் பறக்கின்றனர். அனைவரின் முகத்திலும் இதுவரை காணாத சந்தோஷச் சிரிப்பு. வயிறைப் பிடித்துக்கொண்டு தொப் தொப் என ஸீட்டில் விழுந்து சிரிக்கிறார்கள். Ecstacy. பரமானந்தம். !! கரையில்லாச் சந்தோஷக் கடல்.

இன்னும் மூன்று மணி நேரம் இந்தக் கடலில் தத்தளித்து மகிழப்போகிறோம் என்று நினைத்தபோதே மகிழ்ச்சியில் தலை கிர்ர்ர்ரென சுற்ற ஆரம்பித்தது. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தவுடன் என் நண்பனைப் பார்த்தேன். அவன் பேசவில்லை. வாயில் வார்த்தைகள் இல்லை. "I survived !!" என்றேன்.

டாக்டர் விஜய் !!! நீர் வாழ்க. நின் கொடை வாழ்க. நின் கொற்றம் வாழ்க.

9 comments:

gP said...

hmmm...intriguing. i felt like beating him up watching this movie. wait till the next time he comes to Msia.

Unknown said...

ohh!!! ohh!!! ithu thaan vazhai pazhathil oosi ethuvathoooo?

Unknown said...

"I survived !!" - Apt reaction for this awe(some/ful) movie..!!

Chakra said...

Keerthi, laughed out aloud on reading this...

btw, first time happy-aa paartha movie namma thaanai thalaivar VTR movie daane? peyar marandhu pochchu.

Anonymous said...

Your presentation is too good Keethi!!. I enjoyed a lot reading it.

Srini said...

lol :) At your best Keerthi !!

BTW, lets come to the best 2 mins part of the entire 3 hours spent. How was the Dasa trailer on the bigger screen, and more importantly.. how was the crowd response??

Narayanan Venkitu said...

குருவி
காக்கா
அண்டங் காக்கா
கோழி
வாத்து
மைனா

என்னவோ படம்....என்னவோ பெயர்கள்

வெத்து பசங்க!

Tech Shankar said...

'குருவி' பேரைக் கேட்டாலே புவியீர்ப்பு விசைக்கே குளிரெடுக்குதுல்ல..

Anonymous said...

Baby Kosu : Amma naan cinemakku poittu varen.

Amma Kosu : Paarthu poittu vaa..Ellarum kai thattuvanga

Baby Kosu : No bayam amma, Naan KURUVI paduthukku poren
===================================
Ippodhu oru 50p clicnic plus Shampoo Vanginal "Kuruvi" Ticket Mutrilum Ilavasam, Mundhungal Indha Salugai Padam Theatre'il odum varai mattum.
==================================
Vijay Fan: Hello Pepsi Umava? enakku kuruvi padathula irundhu Oru patu podunga.
Pepsi UMA: Oru rendu nal wait pannunga padamae potruvom!!!!
===================================
Man1: Yenna sir antha theatrela avalavu kootam....
Man2: "KURUVi" padam parka yavano ticket reservation panni irukkan, avana parka thaan ivvalavu kootam....
===================================
Mr.X went to Guinness Book Office....to check if he is still the biggest comedian in Earth or not..... He came out angrily shouting "WHO IS THAT VIJAY"....
===================================
Vijay asks God: When I wll become Next Super Star?
God: Not in My life Time