கண்டேன் தசாவதாரத்தை !!
இந்த போட்டோவில் ஆரம்பித்தது கண்ணாமூச்சி விளையாட்டு. இவர் இங்கே எழுதியிருந்தார். (http://www.lazygeek.net/archives/2006/02/avatharam_no1.html).
அன்று முதல் இன்றுவரை, இப்படியிருக்குமோ..!!. இல்லை அப்படியிருக்குமோ என்று பதைபதைத்து மண்டை காய்ந்து, ஓய்ந்து.. ஒருவழியாக இரண்டே காலே கால் வருட காத்திருப்பு, இன்று முடிவுக்கு வந்தது. கமல்ஹாசன் ஒரு பேட்டியில் "ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கலைஞர்களுக்கு பிரசவ வேதனை போன்றது" என்று சொல்லியிருப்பார். இரண்டு வருடங்களாகக் காத்திருக்கும் இரசிகனுக்கும் அது பிரசவ வேதனை போன்றதுதான்.
இன்று பிரசவமாகிவிட்டது. சந்தோஷச் சமாச்சாரம் என்னவென்றால், குழந்தை நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.
படம் முடிவானதில் இருந்து இன்று வரை தசாவதாரத்தின் மார்க்கெட்டிங் வார்த்தையாக இருப்பது "பத்து வேடங்கள்". இந்தியனில் தாத்தா கமல் பார்ப்பதற்கு கொஞ்சம் நெருடலாகவே இருப்பார். அப்படி ஏதாவது சொதப்பியிருப்பாரோ என்று பயந்ததற்கு நேர் எதிராக இப்பொழுது வியப்பாக இருக்கிறது. ஒவ்வொரு மேக்கப்பும் கனக்கச்சிதம். தாவாங்கட்டை மட்டும் சில கதாபாத்திரங்களில் வீங்கியிருக்கும். பத்து நிமிடங்களில் நமக்கு பழகிப் போய்விடும். ப்ளெட்சராக வடும் கமல் முதலில் "என்னடா ! இப்படி வேஷம் எல்லாம் போட்டுத்தான் செய்யனுமா ?" என்று முனுமுனுக்க வைத்தாலும், கதை நகர நகர "இந்த ப்ளெட்சரா நடிச்சிருக்கரவர் நல்லா நடிச்சிருக்காருப்பா !!!" என்று முனுமுனுக்க வைக்கிறார். ஜார்ஜ் புஷ் கெட்டப் அசரடிக்கிறது. இதுவும் முதலில் நெருடல்.. பின் ஆஹா கொட்ட வைக்கிறது. புஷ்ஷை சகட்டு மேனிக்கு கிண்டலடித்திருக்கிறார்கள். அவர் கண்ணசைவு, அவரது ஸ்டுபிடிடி எல்லாவற்றையும் படித்து ஹோம்வர்க் செய்து அதகளம் செய்கிறார் கமல். பலராம் நாயுடு கமல் கலக்கல் பாத்திரம். ப்ப்பா !! என்னமா மேனரிஸம் செய்கிறார். பலராம் நாயுடு நடப்பதில், உரையாடுவதில், ஓடுவதில் எல்லாம் கவனமெடுத்து பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார்.
சிரத்தை. என்ன ஒரு உழைப்பு. Mr. Kamalhaasan. My salute !!
பொன்னியின் செல்வன் படித்தபோது நான் வியந்தது அதன் ப்ளானிங்கை. கல்கி, பல இடங்களில் நடக்க்கும் விஷயங்களை ஸ்வாரஸ்யம் குறையாமல், டீட்டெயிலும் பிசகாமல் விறு விறுப்பாக கதையை நகற்றுவார். கமலஹாசன் இந்த திரைக்கதையை எப்படி ப்ளான் செய்தார் என்று நினைக்கும் போது பொன்னியின் செல்வனின் நினைவுதான் வந்தது. தசாவதாரம் திரைக்கதை எழுத அசாத்தியமான Planning வேண்டும்.
ஒன்றுமில்லை ! ஒரு சேலஞ்ச் ! படம் பார்த்துவிட்டு, அதன் திரைக்கதையை ப்ளாட் போட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஒரு பயலாலும் இந்தப் படத்தின் கதையை ப்ளாகில் அப்படியே எழுத முடியாது. ஏனென்றால் படத்தில் முழுமையான கதையே இல்லை. சீறிப்பாயும் திரைக்கதை மட்டும்தான் நம்மை கட்டிப் போடுகிறது. ரங்கராஜன் நம்பி கடலில் மூழ்கியதிலிருந்து, கடைசியில் கோவிந்த் அதே சிலையின் மேல் சாய்ந்து சுபம் சொல்லும் வரை விறுவிறுப்பு. ஏகப்பட்ட கார் சேஸ்கள். சண்டைக் காட்சிகள். எல்லாமே டாப் கியரில் பறக்கிறது. இதற்கு நடுவில் கமலின் வேடங்கள் புகுந்து நுழைந்து வாய் பிளக்க வைக்கின்றன.
கிராபிக்ஸ் எல்லாம் கலக்கல். கண்ணில் அகப்படுகின்ற கிராபிக்ஸ் மட்டும் கொஞ்சம் குழந்தைத்தனமாக இருக்கிறது.
பேக்ரவுண்ட் ஸ்கோர் , யூஸ்லெஸ். Devi Sri Prasad has not disappointed me (if you know what i mean).
கேமரா ! - இந்தப் படத்தில் கேமரா சுமாராக இருக்கிறது என்று சில பேர் சொல்லலாம். ஒரே ப்ரேமில் மூன்று நான்கு கமல் நுழைந்து யூனிபார்ம் லைட் கொடுக்க வேண்டும் என்றால், கேமரா மேன் திணறித்தான் போவார். செய்தவரை திருப்தியாகச் செய்திருக்கிறார் ரவிவர்மன்.
டைரக்டர் - கே.எஸ். ரவிக்குமார். இவரது பங்களிப்பு என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் இத்தனை சுமைகளைத் தாண்டி கமலால் படத்தை நிச்சயமாக இந்த அளவுக்கு இயக்கியிருக்க முடியாது. அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் - ரவிக்குமார். Job well done, for executing Kamal's Script.
எடிட்டிங், சவுண்ட் மிக்ஸிங், பாடல்கள் போன்ற இன்னபிற தொழில் நுட்பங்களை உன்னிப்பாக கவனிக்க முடியவில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
டு சம் அப்....
மலைப்பாக இருக்கிறது. சிறு சிறு குழந்தைத்தனங்கள், சிறு சிறு சறுக்கல்கள், சில அதிமேதாவித்தனங்கள், சில திணிப்புகள் எல்லாவற்றையும் தாண்டி... மலைப்பாக இருக்கிறது. எங்கே குறைசொல்லலாம் என்று யோசித்துச் சொல்பவர்கள் இன்னேரம் எழுத ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், படத்தில் வரும் சில டெக்னிக்கல் உச்சக்கட்டங்களை இன்னும் அசைபோட்டு வியந்தபடியே இருப்பதால், குறைகள் இப்பதிவில் எழுதப்போவதில்லை.
ஒரு அருமையான மேஜிக்கை நிகழ்த்திய கலைஞன் எதிர்பார்ப்பது கைத்தட்டலைவிட, அவர்கள் முகத்தில் தெரியும் மலைப்புதான்.
நீங்கள் கட்டாயமாகப் படம் பார்க்கலாம். பார்க்க வேண்டும். A roller coaster ride.
You fully expect a surprise, and you will be surprised yet !
18 comments:
Semma uzhaippu idhu nischayamaaga..Not as easy as commenting about it.... Enjoyed the movie
good review :)
enakkum adhe malaippu dhaan
நானும் பார்த்துட்டேனே :))
//ஒரு பயலாலும் இந்தப் படத்தின் கதையை ப்ளாகில் அப்படியே எழுத முடியாது. ஏனென்றால் படத்தில் முழுமையான கதையே இல்லை. //
wow!!! நானும் இதையே தான் எழுதியிருக்கிறேன்.
http://enn-ennangal.blogspot.com/2008/06/without-spoilers.html
//டைரக்டர் - கே.எஸ். ரவிக்குமார். இவரது பங்களிப்பு என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் இத்தனை சுமைகளைத் தாண்டி கமலால் படத்தை நிச்சயமாக இந்த அளவுக்கு இயக்கியிருக்க முடியாது. அதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் - ரவிக்குமார். Job well done, for executing Kamal's Script//
முற்றிலும் உண்மை.
அருமையான விமர்சனம்.நன்றி
Ostentatiously Brilliant Movie..
"எங்கே குறைசொல்லலாம் என்று யோசித்துச் சொல்பவர்கள் இன்னேரம் எழுத ஆரம்பித்திருப்பார்கள்.."
I believe Rangaraja Nambi has the answer for this in his song's first line!
Seriously?
The movie was a bunch load of crap and going by your reviews of other movies in the past, I am tempted to ask: Was it really you who wrote this review?
10A - inbetween classic MMKR and commercial Thenali?
Just happenned to visit your blog and have read almost all of your posts. Excellent!!!Keep blogging.
"எங்கே குறைசொல்லலாம் என்று யோசித்துச் சொல்பவர்கள் இன்னேரம் எழுத ஆரம்பித்திருப்பார்கள்."
ஏன் இப்படி?
"படத்தில் வரும் சில டெக்னிக்கல் உச்சக்கட்டங்களை இன்னும் அசைபோட்டு வியந்தபடியே இருப்பதால்..."
அதே தான். தொழில்நுட்பத்தை விடவும் காட்சிகள், படமாக்கப்பட்ட விதம், வசனம் போன்றவையே என் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை இன்னொரு "கமல் படம்" என்று ஒத்துக்கொள்ள என்னால் முடியவில்லை. தேவர் மகன், ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி போன்றவற்றுடன் ஒப்பிட்டால் தசாவதாரம் ஒரு சாதாராண மசாலா படமாக மட்டுமே என் பார்வையில் எஞ்சுகிறது.
விமர்சனம் செய்யும் நோக்குடனோ குறை கூறும் நோக்குடனோ இதை நான் சொல்லவில்லை. இந்தப் படத்தைப் பற்றி என் மனதில் தோன்றிய நேர்மையான கருத்து இது. அவ்வளவுதான்.
Nermaiyana karuthu.....
yes nermaiyana kamal rasigan karuthu.....
A well promoted & marketed...bunch of BS. We never expect this from kamal after a long successful career. One thing is very clear from this video(Sorry, It can't be called as a movie because it doesn't abide the protocols of a basic movie), he's always a good actor but not anything else.
Only this time your review looks biased! i don't no why.
-Longtime reader of your blog.
Excellent review write up keerthi ! (innum padam parkkavillai naan :))
Hello Anonymous, unga peyarai yen ivlo thairiyamaga maraikireergal. kaaranam ennavo !!
Reg "MicroPoll"---
How was Dasavatharam ?
At any cause u urself decided this film is anyway good and above....and u want ur fellow fans to vote and declare this film is widely accepted super duper hit.....
Unga nerami ellam intha poll a irunthae arambikuthu keerthi.....u r not able to given the choice of "Average" and below how come u r recommending to everyone.....
Sowmya,
It is not about Anonymous or some name....I dont think so any name value attached for any one.....
in Danny Elfman's Words about Batman!!
"...It gives an incredible sense of non-reality."
I just loved a possibility of such people and the world that this story has taken us into!!
Wonderful!!
Sir,
Why do you have such an aversion to the great story-teller Kalki & compare him to Kamal, of all people?
I felt like watching a fancy dress (or is it mask) competition.
Kamal's USP is his acting & such horrible make-up made sure that people couldn't watch it. Because of this, Kamal has been forced to resort to voice differentiation which made the task of deciphering the dialogue delivery that much harder.
All in all, Kamal should restrict himself to what he is best at - acting. Screenplay & direction should be left to fellow-professionals who are better at it.
Dasa's producer should feel lucky if the movie recovers its cost in spite of all the created hype & unnecessary spend on audio release.
@ Arunachalam:
"All in all, Kamal should restrict himself to what he is best at - acting. Screenplay & direction should be left to fellow-professionals who are better at it."
Have you never seen any movie with Kamal's screenplay? I would urge you watch a couple of Kamal's movies before bluntly commenting like this :-)
My Review at
http://vigneshram.blogspot.com/2008/06/dasaavathaaram-review.html
Manki,
My comment is based on what has happened in Dasa. Not on any previous movie. Even if Kamal has done a good screenplay in other movies, what the heck? How does it matter in Dasa's story telling?
The problem with Kamal fans is that they want to judge any Kamal movie based on some of his previous movies.
I reiterate, an excellant plot, tailor-made for an Hollywood flick, has been wasted by Kamal in Dasa due to shoddy story telling & single-minded pursuit to score a brownie point that he had acted in 10 roles. The scape-goat this time is Ex-Oscar Ravichandran.
@ Arunachalam:
I am not denying that Dasavadhaaram was a bad movie. You can see that in my first comment itself.
"I reiterate, an excellant plot, tailor-made for an Hollywood flick, has been wasted by Kamal in Dasa due to shoddy story telling & single-minded pursuit to score a brownie point that he had acted in 10 roles."
I disagree with this point. A movie is a teamwork. I wouldn't blame only one person for a failure, especially when I don't know what really happened behind the scenes.
Post a Comment