Saturday, June 21, 2008

பெருமிதம்




பெருமிதம் - எங்கேயோ கேட்ட வார்த்தை மாதிரி இருக்கிறதா... அன்றாடம் நிகழாத/நேரிடாத ஒரு rare feeling. இதை எப்படி உங்களிடம் விவரிப்பது.. இருக்கவே இருக்கிறார் பாரதியார்.

"மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால், மேனி சிலிர்க்குதடி". ப்ப்ப்ப்ப்பா !! இந்த வரிகளைப் படித்தாலே என் மேனி சிலிர்க்கும்.

விஷயம் இதுதான். மூன்றாவது முறையாக இன்று தசாவதாரம் பார்த்தேன். இந்த தடவை என் அப்பாவையும் அழைத்துக்கொண்டு சென்று பார்த்தேன். சத்யம் தியேட்டர் பால்கனியில் உட்கார்ந்து தசாவதாரம் பார்ப்பது சுகானுபவம். அதிலும் அப்பா ரசிப்பதைப் பார்த்துக்கொண்டே திரையில் என் கமலஹாசனின் அவதாரங்களைப் பார்ப்பது... அது ஒரு வகையான பெருமிதம்.

நெற்றியில் நாமம்; சூப்பர் பஞ்சக்கச்சம்; கம்பீரமான சிண்டு; புஜபலத்துடன் பூமிக்கு அடியில் இருந்து வெளியே குதித்து "அடியேன் ராமானுஜ தாஸன்" என்று சொல்லி அனல் பறக்கும் சண்டையிட்டு "சுங்கம் தவிர்த்த சோழனிடம் கர்வம் தவிர்க்கச் சொல்.. மன்னனுக்குப் பிடித்திருக்கும் பிற தோஷங்களுடன் ப்ரம்மஹத்தி தோஷமும் பிடிக்கும் என்று சொல். அதைச் சொன்னவன் இந்த ரங்கராஜ நம்பி என்று போய்ச்சொல்.... !!" என்று கதவைச் சாத்திக்கொண்டு
"சாந்தாகாரம் புஜக சயனம் பத்மனாபம் சுரேஷம்
விஷ்வாதாரம் ககன சதர்ஷம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமல நயனம் யோகிபிர் த்யான கம்யம்
வந்தே விஷ்ணும் பவ பய ஹரம் ஸர்வ லோகைக நாதம்"

என்று சொல்லி ஸ்ரீமன் நாராயணன்மீது பறந்து விழும் ரங்கராஜன் நம்பியின் நடிப்பப் பார்த்து அப்பா "இந்த மாதிரி தமிழ் பேசி நடிக்க வேற யாருடா இருக்கா !!" என்று வியந்ததைப் பார்த்து எனக்குப் பெருமிதமாக இருந்தது.

கமல் கீர்த்திக்கு ஆற்றும் உதவி என் தந்தை கமலஹாசன்
என்னோற்றான் கொல் எனும் சொல்.

8 comments:

Anonymous said...

keerthi ippadi oru threada pottuteenga. indha vaaram innoru tkt potravendiyadhudhaan.

6th time..

Anonymous said...

Pira thosham - Pradhosham - pun!

Anonymous said...

Hey Keerthi,

Did you hear about the analogy between Avatarams in the movie and Vishnu's Dasavatharam?

Dasavatharam has more to it than meets the eye. Did you wonder why Asin gets hurt in a statue when she runs with Kamal(to get ice) after hiding the idol?

-Sridevi

KRTY said...

Kannan, Muscat record !!! :)

Srikanth, there's one more pun on Shaivism.. Figure out !!

Sridevi, Yeah.. lots of them.. on various dimensions.. upto the extent that Lord Krishna gets killed by an arrow hitting his foot, just like how Poovaragan gets killed. Also, for 12th Century Kodhai looses her life by hitting her head on the statue.. and 21st century Aandal (both names indicate the same person) gets hit on that statue. You see it in a different angle ?

Srini said...

Sridevi, Keerthi

I'm seeing more anologies than the normal one that is making rounds.

Poovaragan can also be Lord Boovaragan Himself (Temple at Srimushnam)!! Associating a Varaaham with sands is quite natural, and casting the identity dark still holds good. Remember at the climax, P.Vasu's son enquires Vincent's name which sticks out somehow from the scene, but after Kamal's reply he would say 'Funny' name with stress on Funny (Punny in tamil) !!

Krishnaveni Paati can be Lord Krishna too. Moment Balaram meets Krishnaveni they remain alltogether from Chidambaram to Chennai. (I vaguely remember instances where Lord Balaram suspects Lord Krishna on Syamandhaga Mani issue/ Mahabaratha issue or somewhere)

Gunshot from Fletcher to Avatar is an outcome of outbusrt of Parasurama to Lord Rama when Rama breaks the SivaDhanusu (in both cases due to mistaken/unforseen identity)!!

Back to Nambi, I can't figure out anything apart from Pradhosham either !! What is it thala? For a wild guess..

"மன்னனுக்குப் பிடித்திருக்கும் பிற தோஷங்களுடன்" - The word பிடித்திருக்கும் as in liking ??

BTW, for the biggest goof-up, with due credits to someone from Orkut community - 'In Mukundha song, we see Varaaha avadharam on the screen whereas the lyrics goes with Koormavadharam'. Pretty costly mistake with Kamal and Vaali at the helm :(

Anonymous said...

Keerthi, I really have no clue on the other pun you are referring to. can u show some light?

And, have you noticed the energetic suprabatam slokam at the dawn of the movie "Aham dhoorathasthe padaamboja yugma pranaamechchayaagathya sevaam karomi..."

The chant goes for a few more times as well. Kamal in one interview said, he has byhearted suprabhatham and is one of his favorite.

Such scenes are gloriously glittering!

Anonymous said...

One more to share from another blog;

Ten avatars:

1. மச்சம் - ரங்கராஜ நம்பி - கடலோடு போவதால்.
2. கூர்மம் - அமெரிக்க அதிபர் புஷ். தேவருக்கும் அசுரருக்கும் சண்டை மூட்டியது போல் இன்று மேற்கத்தியருக்கும், இஸ்லாமியருக்கும் சண்டை மூட்டிவிடுதல்.
3. வராகம் - பாட்டி - ஒரு பாட்டில் அவரே பன்றியாக நடிக்கிறார்.
4. நரசிம்மம் - ஸிங்கன் நராஹாசி - பெயர், கைகளால் கொல்வதற்காக பயிற்சி.
5. வாமனன் - கலீபுல்லா - விஸ்வரூபம்.
6. பரசுராமன் - ஃபெலெட்சர் - கொலைகாரர்.
7. ராமன் - அவதார் சிங் - ஒரு தார மணம்.
8. பலராமன் - பலராம நாயுடு - பெயர், காவல் துறை.
9. கிருஷ்ணன் - பூவராகன் - திரெளபதியை (அசின்) காத்தது, பாண்டவர் (சகாக்கள்), தூது செல்வது, காலில் அம்பு பட்டு இறப்பது.
10. கல்கி - கோவிந்த் ராமசாமி - நிகழ்கால உலகத்தை காப்பவர்.

Wondeful isn't it!

KRTY said...

Srini, Ill put that as a separate post.. So many things to wonder about the movie. Yeah.. mistake in Mukunda, i noticed it the second time. But, I liked the technique used for showing Narasimha Avatar.

Srikanth, "அஹம் தூரதஸ்தே பதாம்பேரஜயுக்ம ப்ரணாமேச்சயாகத்ய ஸேவாம் கரோமி".. Thanks for cathing this. Some one wrote somewhere they can hear Purusha Suktam when Krishnaveni puts the Virus into Govindaraja utsavar. I couldnt hear the second and third time.. Did you ?