
ப்ரம்ம முஹூர்த்தத்தில் விழித்து எழுந்து,
சூப்பர் பில்டர் காபி குடித்து உடம்பில் உற்சாகம் ஏற
"இன்று நா ஆ ஆ ன் மீண்டும் மீண்டும் பிறந்தேன், உன் ஒரு துளிப் பார்வையிலே !!!" என்று கண்ணாடி பாடல் பாடிவிட்டு...
ஆபீஸ் கிளம்பி சுமார் ஆறரை மணிக்குள் வீட்டை விட்டு வெளியேறி,
அம்மாவின் அன்பான விடை பெற்று
வாசலில் நீர் தெளித்து போடப்பட்ட அரிசி மாவு கோலங்களை ரசித்தபடியே
அன்று பூத்து கீழே விழுந்த பவழமல்லிப் பூக்களின் சுகந்தத்தை நுகர்ந்தபடியே, அக்கூக்குருவிகளின் கூவல்களை ரசித்தபடியே...
சில்லென்ற காற்று தலை கோதிச்செல்லும் அழகை அனுபவித்தபடியே,
காலார நடந்து சென்றால்.....
பீச் டிரெயினை கோட்டை விட வேண்டியதுதான் !!!!!
அப்புறம் பாருங்கள் உலகமே நரகமாகத் தெரியும்.
2 comments:
Ha ha ha...here I was thinking, wow, Keerthi is leading a beautiful life during the rush time, and then you come up with your bang. Nice.
there u stand, keerthi...
superb punch!!!
Post a Comment