Wednesday, July 02, 2008

நிலம்.

"வயிறெரியுது லச்சுமி.. கட்டேல போறவனுவ... எப்படியெல்லாம் ஃப்ராடு பன்றானுவ.."
"இப்போ என்ன ஆச்சு.. ஏன் புலம்பறீங்க ? யார் கட்டேல போறாங்க ??"
"நம்ம நிலம்.. கைவிட்டுப் போயிடுச்சு.."
"என்ன ?? என்னங்க சொல்லறீங்க.. புரியற மாதிரி சொல்லுங்க.."
"வின்டர் ரிஸார்ட்..."
"ஆமாம்.. அது என்னாச்சு..."
"இன்னிக்கு அது வழியா வந்தேன்... நம்ம நிலத்துல கல் பதிச்சு, பூஜை போட்டுட்டு இருந்தாங்க.. எனக்கு பகீர்னுச்சு.. அங்கே நின்னவர் கிட்டே கேட்டேன். அவர் காதுலயே வாங்கிக்கல... அதான் நம்ம ஆளுங்க எல்லாரையும் கூட்டிட்டு போய் நியாயம் கேட்கலாம்னு வந்தேன்."
"என்னால நம்பவே முடியலைங்க... உங்க அப்பா..."
"ஆமாம்.. போன வாரம் கூட சொன்னார். இது நம்ம பரம்பரை சொத்துப்பா.. பத்திரமா பாத்துக்க.. அப்டீன்னு சொல்லிட்டுத்தான் போனார்.. அவரோட கடைசி ஆசையை கூட காப்பத்தாம முடியாம போயிருமோன்னு பயமா இருக்கு".
"எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. நம்ம உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது.. சீக்கிரம் கிளம்புங்க.. "
"இதோ.. இன்னும் ரெண்டு பேரை கூட்டிட்டு போக வெய்ட் பன்னறேன். பரம்பரை வீடு லச்சுமி... வயிறெரியுதே... அந்தப்பயலோட பரம்பரையில முதல் ஆளு பொறக்கறத்துக்கு முன்னாடிலேர்ந்து நம்ம பரம்பரை நிலம் இது.. என்னோட காலத்தில் இப்படி நடக்கனுமா.. !!"
"பயப்படாதீங்க.. தைரியமா இருங்க.."
"சரி. நான் போயிட்டு வந்துடறேன்....லச்சுமி..."
------
திருவான்மியூர் ப்ளாட்
"யோவ். யாருய்யா நீங்க ? சும்மா நீங்க பாட்டுக்கு நிலத்தில பூமி பூஜை போட்டுட்டு இருக்கீங்க.. பொறம்போக்கு நிலம்னு நினைச்சீங்களா ? வகுந்துருவேன்... எங்க பரம்பரை நிலம்ய்யா !! கேக்கறத்துக்கு ஆள் இல்லேன்னா உடனே வந்துருவீங்களே... மரியாதையா இடத்தை காலி பண்ணிடுங்க.. இல்லே நடக்கறதே வேற... என்ன !! என்ன நான் சொல்லிட்டே இருக்கேன்.. பதில் பேசாம நின்னுட்டு இருக்கீங்க... ஹா ??"

-------
திருவான்மியூர் ப்ளாட்

விஸ்வனாதன் ரொம்ப நேரமாக காதருகில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்த கொசுவை, "பட் !" என்று அடித்தார். கொசு செத்து விழுந்தது.

6 comments:

யாத்ரீகன் said...

Grrrrrr !!!!!

Anonymous said...

:)

nice attempt.

nee indha type la konjam eludhitta, why dont u try something different..

aprom i expect replies to comments be it from me or other person.. appo dhaan interesting a irukkum

KRTY said...

PK, did you get the story ??
Comments.. will do.

Anonymous said...

naan purinja varaikum

modhalla pesura dialogue ellam kosu voda point of view?

kadasila point of view changes from mosquito to vishwanathan.. right?

Anonymous said...

Nice one Keerthi... loved the twist at the end :-)

Rgds
Sreeram (Cognizant)

KRTY said...

PK, yes right :)

Sreeram, thanks.. :)