Wednesday, July 23, 2008

Home Video



இப்படி கண்டதையெல்லாம் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறோமே.. ஒரு தர்மத்துக்கு வீடியோ எடுத்தால் என்ன, என்று ஷண நேரத்தில் உதித்த ரோசனையின் விளைவுதான் நீங்கள் மேலே பார்த்தது.

உப்பு சப்பு எதுவும் இல்லாமல் டல்லாக ஒரு வீடியோ.. ஆனால் இது எடுப்பதற்கு, எடுத்து ஒட்டி, வெட்டி, பாட்டு போட்டு என்று கொஞ்சம் வேலை வாங்கியது. ரொம்ப பெரிய வேலையில்லை என்றாலும், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வீடியோ எப்படி வர வேண்டும் என்று யூகித்து அல்லது கற்பனை செய்து, வெவ்வேறு தனி ஷாட்கள் எடுக்க வேண்டும்.

நீங்கள் பார்த்த வீடியோவில் ஏழு அல்லது எட்டு தனி வீடியோக்கள் ஒன்றாக தைக்கப்பட்டுள்ளன. அவற்றின் லைட்டிங் யூனிபார்மாக இருக்க வேண்டும். அதே டெம்போவில் இருக்க வேண்டும்.

இதில் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது. வீடியோக்ராஃபி என்பது மொத்தமாக வேறு தளத்தில் இருக்கிறது என்பது புரிகிறது. கற்றுக்கொள்ள வேண்டியது தான்.
(Neo : "Can you fly that thing ?"... Trinity : "Not Yet !").

இந்த சுவாரஸ்யமில்லாத விடியோவை பொறுத்தருள்க. இது ஆரம்பம் தான். :)

5 comments:

Anonymous said...

Off-topic: Soundtrack - The Terminal padathoda? Awfully similar to title track from Chocolat.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அசத்தலா இருக்கு !

KRTY said...

குண்டலகேசி, டெர்மினல். யெஸ். :) கண்டுபிடிச்சுட்டீங்களே !!

ரவிசங்கர், நிஜம்மாவா.. எனிவே.. தேன்க்ஸ் !! :)

Anonymous said...

Idha kelunga (starting approx 3:45)

http://www.youtube.com/watch?v=S0u4GLUjUsg

Enakku Terminal OST kekkumbodhellam idhu dhaan nyaabagathukku varum.

KRTY said...

குண்டலகேசி, கேட்டேன். சூப்பர் :)