Monday, August 04, 2008

மீசை முகம் மறந்து போச்சே !

பரபரப்பான க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ பாம் ஒன்றின் முன் நின்று கொண்டு சிகப்பு வயரை நறுக்குவதா அல்லது மஞ்சளையா, அல்லது பச்சை வயரை நறுக்குவதா என்று யோசிக்கையில், நெற்றி வியர்வை வழிந்தோடும்.. கைகள் வேகமாக நடுங்கும். அப்புறம் சுபமாக முடியும். (எந்தப் படத்திலும் பாம் வெடித்ததில்லை, கவனித்தீர்களா !)

இதே போன்ற ஒரு நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. கையில் ஜில்லெட் ரேசருடன் கண்ணாடிமுன் அதே வியர்வை.. அதே நடுக்கம். ஆனால் அதே சுபம்தான் இல்லை. எடுக்கலாமா, வேண்டாமா என்ற ஆறு மாத மனப்போராட்டம்.. ஒரு அசட்டுத்தனமான தைரியம் வந்து மழிக்க ஆரம்பித்தேன். பாதி மீசை வாஷ் பேசினில் விழுந்தவுடன்... அடடா.. இனிமேல் .. there's no going back..!! முழுசும் மழித்து... பள பளா என்ற மூஞ்சியுடன் கண்ணாடியில் என்னாலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு ஒரு முகம்.

முன்கதைச் சுருக்கம் :

இளம்பிராயத்தில், பெர்மனன்ட் மார்க்கரால் கட்டபொம்மன் மீசை வரைந்து கொண்டு, அது அழியாமல் போன நாட்களில் இருந்தே மீசை மீது ஆசை. நமக்கு வளராதா... என்று ஏக்கமே வந்துவிட்டது. அடிக்கடி ஷேவிங் செய்து கொண்டால் கிறு கிறு என்று வளரும் என்று யாரோ சொன்னதாக நானே நினைத்துக்கொண்டு வீட்டில் கெஞ்சி கூத்தாடி ஒரு ஷேவிங் கிட் வாங்கிக் கொண்டேன். அல்பத்தனமான வெவ்வேறு ஆசைகள் தோன்றும் காலம்.

இருந்த நான்கைந்து முடியையும் செல்ஃப்-ஷேவிங் என்ற பேரில் மழித்தாகிவிட்டது. இனிமேல் கறுப்பாக வளர்ந்து வாயை மறைக்கப் போகின்றது என்று காத்திருந்து காத்திருந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. மீசை மேல் வெறுப்பே வந்து விட்டது. ஸ்கூலில் நிறைய பேருக்கு அரும்பு மீசை வளர ஆரம்பித்து இருந்தது. எனக்கு மட்டும் மழ மழ முகம்தான். சே!! அப்போது ஷேவிங் செய்திருக்கக் கூடாதோ!! கூடாது தான். அந்த புது சேவிங் செட் எனக்கு குழந்தைகள் விளையாடும் பொம்மை டாக்டர் செட் மாதிரிதான் பயன்பட்டது.

காலேஜ் நுழைந்த பிறகுதான், வறண்ட பூமியில் துளிர்விடும் புல்லைப்போல் மெதுவாக, நத்தை வேகத்தில் வளர்ந்து வந்தது. நாளொரு மயிரும் பொழுதொரு கால் மில்லி மீட்டரும் என்ற கணக்கில் வளர்ச்சி. சரி. இது தான் சரியான சமயம்.. இப்பொழுது ஷேவ் செய்தால் சீக்கிரம் வளர ஆரம்பித்துவிடும்.. என்ற நம்பிக்கையில் மீண்டும் சவரம் செய்தேன். பொன் முட்டையிடும் வாத்தை நடுவிலேயே நறுக்கிவிட்டது போல், அந்த ஷேவிங்கிற்குப் பிறகு ரொம்ப நாள் வளரவே இல்லை. முகம் பார்க்கவே கொடூரமாக இருந்தது. நல்ல வேளையாக எனது எல்லா நண்பர்களையும் இப்படிச்செய்தால் தேவர்மகன் நாசர் மாதிரி மீசை வளர்ந்துவிடும் என்று கப்சா அடித்து நம்ப வைத்து, அவர்களையும் கன்னி ஷேவிங் செய்துகொள்ள வைத்தேன். எல்லாருமே உரிச்ச கோழி மாதிரி இருந்ததால், எனக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் இருந்தது.

காலேஜ் முடிந்து முதல் வேலைக்காக திருச்சி போன சமயம். சென்னைக்கும் திருச்சிக்கும் இடையே அடிக்கடி போய் வந்து கொண்டிருந்த பரபர நாட்களில் ஒரு நாள் தான் கவனித்தேன். மீசை என்று ஒரு தோராயமாக நம்பக்கூடிய அளவில் வளர்ச்சி அடைந்திருந்தது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஷேவிங் ப்ளேட் பக்கமே முகம் வைக்கக் கூடாது என்றும், தேங்காய் எண்ணை கேசவர்தினி தைலம் போன்றவற்றைத் தடவி, growth processஐ expedite செய்யலாமோ என்ற எண்ணம் வந்து, விபரீத ஆரய்ச்சிக்கு இது தருணமில்லை என்று உணர்ந்து அப்படியே விட்டுவிட்டேன். டி.வியில் யெங்கேயோ மீசையைப் பற்றி பேசிக்க்கொண்டிருந்தார்கள் - "முயற்சியே இல்லாமல் நடக்கின்ற வளர்ச்சி" என்று.

இரண்டு வருடங்கள் பிறகு, காலையில் கண் விழித்து கண்ணாடி பார்த்தபோது... கண்ணில் துளிர்விட்டது கண்ணீர். ஆஹா ! எத்தனை நாள் கனவு... நமக்கும் மீசை முளைத்துவிட்டது. தடவிப்பார்த்து, முறுக்கிப் பார்த்து அப்போது இருந்த வெப் காமில் படம் எடுத்து... என்று ஏகக் கொண்டாட்டம்.

மெதுவாக, க்ராஜுவேட் ஆகி, நல்ல அடர்த்தியான மீசை என்று எஸ்டாப்ளிஷ் ஆன சமயத்தில் ஆபீஸ் சென்றால், எல்லா பெரிய மனிதர்களும் மழமழ என்று ஷேவிங் செய்துகொண்டிருந்தனர். என் மீசை முளைப்பதற்குள் ட்ரெண்டே மாறிவிட்டிருந்தது. சே !! என்ன குதர்க்கமான உலகமடா இது என்று ஷேவிங் செய்து கொண்டால் மீண்டும் இரண்டு வாரங்களில் கறு கறு என்று வளர்ந்துவிட்டது. பலே ! வெள்ளையத்தேவா. . இதல்லவோ மீசை என்று வளர்ந்த அந்த மீசையுடன் அப்படியே செட்டில் ஆகிவிட்டேன்...சென்ற ஞாயிறு வரை....

ஞாயிறன்று உதித்த ஞானம் - வாழ்க்கையில் வித்தியாசமாக செய்வதற்கு என்று பல வாய்ப்புகள் வருவதாகத் தெரியவில்லை. என்னதான் செய்வது என்று யோசித்துக்கொண்டே தாடி ரோமங்களை சவரம் செய்து கொண்டிருந்தபோது..."சரி !! மீசையை எடுப்போமா ?" என்ற கேள்வி தோன்றியவுடன்... எனக்கே டென்ஷனாகிவிட்டது. நான்கு ஆண்டுகளாக வளர்த்த மீசை. ஹேராமில் வரும் டயலாக்தான் ஞாபகம் வருகிறது.

"உங்களுக்கும் மிஸ்டர். சாகேத் ராமுக்கும் என்ன உறவு"
"சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் இருக்கிற உறவு
"... !

இந்த சென்டிமென்டுக்கெல்லாம் பிறகுதான் மீசையை மழித்தாக வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜில்லெட்டை ஒரு முறை பார்த்துக்கொண்டேன்.

கையில் ஜில்லெட் ரேசருடன் கண்ணாடிமுன் அதே வியர்வை.. அதே நடுக்கம். ஆனால் அதே சுபம்தான் இல்லை. எடுக்கலாமா, வேண்டாமா என்ற ஆறு மாத மனப்போராட்டம்.. ஒரு அசட்டுத்தனமான தைரியம் வந்து மழிக்க ஆரம்பித்தேன். பாதி மீசை வாஷ் பேசினில் விழுந்தவுடன்... அடடா.. இனிமேல் .. there's no going back..!! முழுசும் மழித்து... பள பளா என்ற மூஞ்சியுடன் கண்ணாடியில் என்னாலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு ஒரு முகம்.

புதிய முகம்.

9 comments:

நாதஸ் said...

Photo Please :D
Ungaludaya puthiya avathaaratha paakanum :P

Shreekanth said...

Dei poiya sollara :)...Namma Class la in 12th you were one among them who had good meesai and thaadi...

Enna kodumai..Ivane varutha patta appo...?????????

Now almost you like the left bottom photo in the link..Ore vidhyasam..Moonji perusa veengi pochchu :)

http://avyukta2.blogspot.com/2006/01/if-face-is-index-of-mind-then-my-mind.html

Anonymous said...

I remembered the scene where thalaivar undergoes the same emotions in MMKR.

Venkatramanan said...

டே! வேற என்னென்ன படம் போட்டு அசத்தறே! இந்தப் படத்தை போட்டியானா KRTYயை சீக்கிரமே unlist செஞ்சுடலாம்! சீக்கிரம் போடுறா!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

பிச்சைப்பாத்திரம் said...

Nice Post, especially the title.

Ravi said...

nalla varnanai Keerthi. Many times I used to wonder why people who look good with a mousch shave it off (after having sported one!). Ippo neengalumaa?

KRTY said...

Nathas, venkat... are you sure you want to take the risk ? :)

Shreekanth, i didnt have meesai in school! Kadaisi farewell photos paarthale puriyum.

R.Vijay, Indha periya manusangalukku meesai thaan mukkiyamana vishayam !! Super conversation in MMKR.

Suresh, thanks.

Ravi, Im not someone who looks good and now, i've gone from bad to worse.

Unknown said...

Nice title and very good narration..!!

Anonymous said...

Very cute narration dude.
Sarasari aangaludaya aanmavin alaral enru kooda sollalaaam :):)