Saturday, August 23, 2008

கோவை ஷார்ட் ட்ரிப்

Temple at Dawn

கோயமுத்தூர் சென்றிருந்தேன். ராம் நகரில் கஸின் திருமணம். பரபரப்பான பஸ்டாண்டிலிருந்து ஒரு தெரு தள்ளி வந்தால், அமைதியான அட்டகாசமான இடம் ராம் நகர். வெயில் அடித்தாலும் குளுமையாக இருக்கும் நகரம்.

அங்கே புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் தான் நீங்கள் மேலே காண்பது. அதிகாலையில் எடுத்தபோது இந்த எஃபக்ட் கிடைத்தது.

மூன்று நாள் கல்யாணத்தில் முதல் நாள் மத்யானமே போர் அடித்ததால், பக்கத்தில் இருந்த செந்தில் குமரன் தியேட்டரில் ஐம்பது ரூபாய்க்கு ஃபர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட்டுடன் "குசேலன்" படம் பார்க்க உட்கார்ந்தேன்.

இந்தப் படத்திற்கு இத்தனை விவாதங்கள் தேவையா என்று தோன்றியது. படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு நன்றாக இருந்தது. பசுபதி நடிப்பை பல பேர் புகழ்ந்திருந்தது வேடிக்கையாக இருக்கிறது. பசுபதி சுமாராக தன் பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார், அவ்வளவே. க்ளைமேக்ஸ் நன்றாக இருகிறது.

கோயமுத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸும் அன்னபூர்னாவும் சென்று தீர்த்தயாத்திரையை பூர்த்தி செய்து கொண்டேன். ராம் நகரில் இருந்து இடையார்பாளையம் செல்ல ஆட்டோவில் நூற்றி முப்பது ரூபாய். கால் டாக்ஸியில் எண்பத்து ஏழு ரூபாய்.

புத்தம் புது கோச்சை இழுத்துவந்த சேரன் எக்ஸ்பிரஸில் ஏறி வீடு திரும்பினேன்.

3 comments:

Venkatramanan said...

Seen a School @ RamNagar - Suburban? Thats were I studied! Feeling Nostalgic after your post! And our school once upon a time had a fame that "If any one put the Kaavi in the kolam border, we will be declared a holiday!" This was due to the large brahmin population there! Even Ramnagar was once called Brahmin's extension! And "Senthil Kumaran" was called "Ambika Ambalika" when I studied!

Regards
Venkatramanan

expertdabbler said...

CBE is one place where call taxi works out cheaper.
I once took a call taxi from Gandhipuram to Airport for 100 rupees. Auto la vandhirundha Personal loan potrukanum.

Archana Darsana pakkathile Paati Amma tiffen stall nu onnu irukku... adhu pogama vandhunaale unakku moksham kedaikaradhu confirm aagaama WL/1 la irukku

KRTY said...

Venkataramanan, Illaye sir. It was a very brief stay. LOL @ School rules. My college used to be like that (it was run by Sindhi community).

PK, he he.. miss pannittene !!