




திருவொற்றியூர் - வடிவுடையம்மன் / தியாகராஜ ஸ்வாமி திருக்கோயில்.
இங்கே போவதற்கே கொஞ்சம் ப்ரயத்தனப்பட வேண்டியிருக்கிறது. சென்ட்ரலிலிருந்து கும்புடிப்பூண்டி மார்கமாகச் செல்லும் ரயிலில் ஏறி நான்கைந்து ஸ்டேஷன் தள்ளி இருக்கும் திருவொற்றியூர் ஸ்டேஷனில் இறங்க வேண்டும்.
பேசின் ப்ரிட்ஜ் தாண்டியதிலிருந்தே, பொளேர் என்ற வித்தியாசம். சென்னை இப்படியெல்லாம் இருக்குமா என்று ஐயப்பட வைக்கிறது. தொண்டையார்பேட்டையில் ப்ளாட்பாரத்தில் ஒரு அம்மாள், பெரிய பீரோவுடன் நின்று கொண்டு இருந்தார். அதை தூக்கி ரயிலில் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தார். ரயில் நகர ஆரம்பித்தவுடன், ஜன்னலோரமாக இருந்த என்னைப் பார்த்து, "ட்ரெய்ன நிறுத்து.. நிறுத்துங்க.. யோவ்.. நிறுத்துங்கன்னு சொல்றேன்ல..." என்று கத்தினார். இதென்ன ஷேர் ஆட்டோவா ? ஹ்ம்ம்..
திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஒரு ஏழு நிமிடம் நடக்கும் தூரத்தில் இருக்கிறது இந்தக் கோயில்.
பெரிய கோயில் என்றாலும் கூட்டமே இல்லை. பெரும்பாலும் தெலுங்கு காதில் விழுந்தது. கோயில் அர்சகர் சென்னைத் தமிழில் பேசினார்.. "என்ன சுத்தி சுத்தி போட்டோ எத்துனுக்குறே ! ரசீது வாய்னியா ?" என்று மிரட்டும் தொணியில் கேட்டார். அவரோடு சமாதானமாக உரையாடிவிட்டு வந்தாலும் போட்டோ எடுப்பதற்கு கொஞ்சம் உதறலாகவே இருந்தது.
வடிவுடையம்மன் ஆலயத்தில், அம்மன் தரிசனம் காணக் கண் கோடிவேண்டும். சுந்தரமான அலங்காரம். தீபத்தின் வெளிச்சத்தில் தரிசனம் செய்யும்போது பேரானந்தமாக இருந்தது. கோயிலில் கோசாலை பெரிதாக இருக்கிறது. எல்லாச் சுவர்களிலும் பழமை ஒட்டிக்கொண்டிருக்கிறது.
தியாகராஜ சன்னிதியும் அழகாக இருக்கிறது. கும்பகோணம் தியாகேசரும் இவரும் ஒன்றா ? யாருக்காவது தெரியுமா ?
6 comments:
அண்ணே நீங்க என்ன கேமரா வச்சிருக்கீங்க? போடோலாம் இவ்ளோ clearஆ இருக்கு...
The pixel comes out wonderfully keethi! My mom wish to visit this temple one day, and was asking dad to take her for long time.
I meant photo.. not போடோ....
:)
I think you meant Mr. Thiyagu from 'Thiruvarur'.
Nice photos.
Keerthi, I am shamelessly digressing the topic here - I had posted a question in my blog and wanted to know if you might know the answer.
elangovan, :) I have a Sony DSC H5.
Jeevan, thanks.
Indian Voter, thanks for correcting. Yes, i mean Thiruvarur Thyagesar !!
Deepak, replied :)
Post a Comment