நாளொரு மேனியும், பொழுதொரு குண்டு வெடிப்புமாய்
இந்தியா இன்னுமொரு நாளில் அடியெடுத்து வைக்கிறது.
சோம்பல் முறித்து செய்தித்தாளிடம் கேட்டது,
நேற்று ராத்திரி ஏதாச்சும் விசேஷம் உண்டோ ?
குஜராத்திலும் மகாராஷ்ட்ராவிலும் நால்வர் பலி
மற்றுமோர் Low-intensity குண்டு வெடிப்பு..
தலையில் கை வைத்துக் கொண்டது இந்தியா.
நல்லாத்தானே இருந்தேன்.. திடீர்னு என்னாச்சு ?
என்னதான் Low-intensity bombing என்றாலும்
ஒரு உயிர் விழுந்தாலும் அது குரூரமல்லவா
இன்னும் என்னென்ன பாக்கி இருக்கோ
கவலையோடே காப்பி அருந்தியது இந்தியா.
மன் மோகன் சிங்கிடம் கேட்கலாம் என்று
பிரதமர் அலுவலகத்துக்கு போன் போட்டது
அவர் அங்கே இல்லை, அமெரிக்காவில் இருக்கிறார்
"அங்கென்ன செய்கிறார், நான் இங்கே பரிதவிக்கையில் ?"
"அவர் உங்களைக் காக்கத்தான் அங்கே சென்றுள்ளார்."
"என்னை காக்க அமெரிக்காவால்தான் முடியுமோ ?"
"அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானால், நீங்கள்
பல மடங்கு பலம் பெறுவீர்கள்.. சந்தோஷம்தானே !"
சிந்தையில் ஆழ்ந்தது குழப்பமான இந்தியா... இந்தப்பயல்
என்ன கையெழுத்திடுகிறான் என்று சொல்லவுமில்லை
என்னை எங்கோ அடமானம் வைக்கிறானோ ? தெரியவுமில்லை
அதுசரி ! இந்த அணு சக்தி ஒப்பம் முடியட்டும். அவனிடமே கேட்போம்.
"இந்தியாவே, உன் ரூபாய் மதிப்பு வீழ்கிறது.. ஏதாச்சும் செய்"
என்றது செய்தித்தாள். கவனிக்கவேயில்லை இந்தியா.
அணு சக்தி ஒப்பந்ததினால், பிற நாடுகள் வேண்டுமானால்
பயம் கொள்ளலாம்.. உள்ளே இருக்கும் புல்லுருவிகளுக்கு பயம் வருமா ?
அங்கம் எங்கும் இங்கும் அங்குமாய் குண்டு வெடிப்புகள்
ஒரு முறை தடவிப்பார்த்துக்கொண்டது இந்தியா..
என்ன செய்வது.. ஒரு நாள் படுத்தெழுந்து விழித்தால்,
வலி மறந்து போய்விடும். இந்தியாவின் எளிய மருத்துவம் இதுவே..
செய்தித்தாளைத் திருப்பியது.. "ஓஹோ... சாயிஃப் அலி கானுக்கு என்னாச்சு ?"
2 comments:
Our Iraq aahevida kudathu naam India. Should never leave the blast to be a continue process to create the mind to be silly.
Jeevan, what can we do ? any thoughts ?
Post a Comment