Monday, September 15, 2008

உண்மையைத் தேடி - I

உண்மை என்றால் என்ன ?

உங்கள் பார்வையில் உண்மையின் விளக்கத்தை காமெண்ட் செய்யுங்கள். என்னுடைய பார்வையை நான் இங்கே பதிவு செய்கிறேன்.

உண்மை என்றால், பல பேர் எந்த ஒரு விஷயத்தை அல்லது கொள்கையை அல்லது ஒரு தத்துவத்தை, சரி என்று ஒப்புக்கொள்கிறார்களோ அல்லது நம்புகிறார்களோ, அதுவே உண்மை. இது சரியா ?

இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா ? ஒட்டுமொத்தமாக பல பேர் ஒப்புக்கொண்டால், இதுவும் உண்மையாகிவிடும்.

நிற்க.

உண்மை காண்பதில், பல சந்தர்பங்களில், வித்தியாசங்கள் மேவிடக்கூடும்.

சில விஷயங்களில் பொய் உரைக்கப்படும்போதுதான் உண்மை தேடப்படும். சாதாரணமாக நிகழும் சம்பவங்களை பொய்யாகச் சொல்லப்படும் போது, அந்தச் சாதாரணச் சம்பவங்கள் உண்மை எனப் பெயர் பெறுகின்றன. ஆகவே அந்தப் பொய்க்கு எதிர்மறையாக நிகழும் சம்பவங்கள் உண்மை ஆகின்றன. இது பொய்யால் உணரப்படும், அல்லது மறைக்கப்படும் உண்மை.

பொய் மட்டும்தான் உண்மைக்குப் புறம்பானதா ? பொதுவாகவே, நாம் தவறாகச் செயல்படும் பல விஷயங்களில் ஒன்று, எதிர்ப்பதம் கண்டுபிடிப்பது. "உண்மை"க்கு "பொய்". "சந்தோஷத்திற்கு" "துக்கம்". "ஹாஸ்யத்திற்கு" "கோபம்". "விளையாட்டுக்கு" "படிப்பு". "வேலைக்கு" "ஓய்வு". "கருணாநிதி"க்கு "ஜெயலலிதா". "ரஜினிக்கு" "கமல்". ஆனால் இவற்றை சமய சந்தர்பங்கள் வேறுபடும்போது, எதிர்ப்பதங்களையும் மாற்றிக்கொள்வோம்.

"அவன் சந்தோஷமாக இருக்கிறான்" என்ற வாக்கியத்துக்கு எதிர் வாக்கியம் என்னவாக இருக்கக்கூடும் ?

"அவன் துக்கமாக இருக்கிறான்"
"அவன் சந்தோஷமில்லாமல் இருக்கிறான்"
"அவன் சந்தோஷமாக இல்லை"
"அவன் சாதரணமாக இருக்கிறான்".

எது?

3 comments:

Anonymous said...

over work pressure?????

Manki said...

Friedrich Nietzsche has said: "There are no facts, only interpretations".

KRTY said...

Anon, :P not really

Manki, Is that a fact, or Nietzsche's interpretation. Either ways, it negates the sentence :)