Friday, October 24, 2008
கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி
ஆபிஸிலிருந்து வந்தான் மோகன். வாசலில் தமிழ்ச்செல்வன் கோபத்துடன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். "என்னடா... !! முறைக்கிறே.. ! ப்ரோக்ரஸ் கார்ட் வந்திருச்சா ??" என்றான், ஆறுமுகம். பதில் பேசாமலிருந்தான் தமிழ்ச்செல்வன்.
உள்ளே நுழைந்து முகம் கழுவி, லுங்கிக்குள் நுழையும்போது கருணா காப்பி எடுத்துக்கொண்டு வந்தாள். "என்னாச்சு தமிழுக்கு ? ஒரே முறைப்பு !! கோவமா இருக்கானோ !!" என்றான்.
"அது ஒன்னுமில்லீங்க.. நம்ம பக்கத்துவீட்டு சண்டைதான். அவிங்க வீட்டுல அவிங்க பையன் தமிழ்க்குமரனைப் போட்டு அடிச்சிருக்காங்க. அந்தப்பய இவன்கிட்டே புலம்பினதுனால இவன் என்கூட ஒரே சண்டை." என்றாள் கருணா.
"அதுக்கு நீ என்ன புள்ள பண்ண முடியும்.. ? உனக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்." என்றான் மோகன்.
"அட.. புள்ள கோபப்படனும்னு ஆசப்படுதில்லே.. பட்டுட்டு போவட்டுமேன்னு விட்டுட்டேன். 'தோ பாரு.. அப்பா வரும்போது நல்லா டவுசர மாட்டிக்கிட்டு சவுத்துல சாஞ்சு நின்னுக்கிட்டு போராடு'ன்னு சொன்னேன்.. அதான் போராட்டம்னு நம்பி நின்னிட்டுருக்கான்.. நீங்க ஒண்ணும் கண்டுக்கிடாதீங்க.. இந்தாங்க காப்பி சாப்பிடுங்க.. !"
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment