என் வீட்டு வாசலில் ஒரு காட்சி. கங்கா தெரு என்று இந்தத் தெருவிற்கு பெயரிட்டது எவ்வளவு பொருத்தம் என்று இன்றுதான் தெரிந்தது.
வில்லிவாக்கம் ராஜாஜி நகரின் ஒவ்வொரு தெருவும் ஒரு நதியின் பெயரைக் குறிக்கும். காவெரி தெரு, யமுனா தெரு, வைகை தெரு, பொன்னி தெரு, தேனருவி தெரு, வேகவதி தெரு என்று பல தெருக்கள். இன்று அனேகமாக அத்தனை தெருக்களும் பெயருக்கேற்றபடி ப்ரவாகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆபீஸுக்கு மட்டம் அடித்துவிட்டு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
மழையையும் பொருட்படுட்தாமல் வீட்டுக்குள் வந்து பம்பாய் வன்முறை செய்திகளை சொல்லிக்கொண்டிருக்கிறது - டி.வி.
1 comment:
பொருத்தமான பெயர்தான், இந்த சூழ்நிலைக்கு. இன்று எல்லா தெருக்களும் கங்கை தெருதான்.
Post a Comment