ஒரு சம்பவம் நிகழ்ந்துகொண்டிருப்பதை வீடியோ எடுத்து, செய்தியில் காண்பிக்கிறார்கள்.
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் பெருமளவில் வளர்ந்து, கத்தி, இரும்புக் கம்பி, ஹாக்கி மட்டை, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர். பின்னர் பலவீனமடைந்த ஒரு குழுவில் மூன்று நான்கு பேர்களை அவர்கள் தரையில் கீழே விழுந்த பிறகும் மிகக்கொடூரமாக அடித்தனர்.
இங்கே பத்திரிக்கை போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நிருபர்கள் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். போலீஸ்காரர்கள் மக்களைத் தடுத்து முன்னால் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். பொறுக்கிகள் அடிக்கிறார்கள். அடி வாங்குபவர் நினைவுப் பிரஞையே இன்றி அடி வாங்கிக்கொண்டிருக்கிறார். பொதுமக்கள் போலீசாரிடம் கதறுகிறார்கள் - "நாங்கள் சாட்சிக்கு இருக்கிறோம். அடித்துக்கொண்டிருப்பவர்களை கைது செய்யுங்கள்" என்று.. ஆனால், ஒரு திசையிலும் இயங்காமல், வெறுமன வேடிக்கை பார்த்து நின்றனர் - போலீசார். உலக மகா கேவலம். வெட்கம்.
இதனுடைய ரிப்பிள் எஃபக்டாக பாக்கி சட்டக்கல்லூரிகள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருப்பது இன்னும் வருத்தமான விஷயம்.
ஒவ்வொரு காலேஜிலும், ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் தங்களை ரௌடிகளாக நினைத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் படிக்கிறார்களோ, இல்லையோ.. பொறுக்கித்தனங்களை கல்லூரிக்குள் கூட்டிக்கொண்டு வருகிறார்கள். காலேஜ் ஸ்டிரைக், இருதரப்பு மோதல், கைகலப்பு போன்றவற்றில் ஈடுபடுவார்கள்.
நானும் இப்படிப்பட்ட பொறுக்கிகள் நிறைந்த காலேஜில் படித்திருக்கிறேன். இரண்டு பேர் நண்பர்கள்.. வேறு வேறு டிப்பார்ட்மெண்ட். இந்த இரு டிப்பார்ட்மெண்டுக்கும் இடையிலே சண்டை வந்த போது, இந்த இரு நண்பர்களும் எதிர் எதிர் அணியிலிருந்து ஒருவரைஒருவர் அடித்துக்கொண்டு சண்டை போட்டனர் - ரத்தம் வரும் அளவிற்கு. பின்னர் சாயங்காலம், இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டே பஸ்ஸில் செல்கின்றனர்.
இவர்களுக்கெல்லாம் பைத்தியக்காரத்தனமான சைக்காலஜி, சென்டிமெண்ட். இவர்கள் தங்களுக்கென்று ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறார்கள். ஒரு விதமான இரக்க சுபாவத்தையும், சினிமாவில் கற்றுக்கொண்ட வெறியையும், மிரட்டல் தொனியையும் கொண்டவர்களாக இருப்பார்கள். வீட்டில் அம்மா அப்பாவின் மிரட்டலுக்கே தனியாக பயப்படும் இவர்கள், கும்பலாகச் சேர்ந்தவுடன் அசட்டுத்தனமான தைரியம் பெறுகிறார்கள். மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாதவரைதான் இவையெல்லாம் சகித்துக்கொள்ளப்படும். இவர்கள் கிடக்கட்டும்..
இதில் இந்த
வெறி கொண்ட இந்த ரௌடிக்கும்பல், போலீஸ் ஈடுபாட்டால், கல்லூரிக்கு வெளியேறி பொதுமக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பிரச்சனை ஏற்படுத்துவார்கள் என எண்ணினார்களோ என்னமோ !! அது ஒரு வகையில் யோசிக்க வேண்டிய விஷயம். மேலே படத்தைப் பாருங்கள் தெரியும்... மதுரையில் ஒரு பேருந்தை எரித்திருக்கிறார்கள். கோவையிலும் கலாட்டா.. "நாங்களும் பொறுக்கிதான்" என்று காண்பிக்கும் நோக்கம்தான் இவற்றிர்க்கு.
இதிலிருந்து இன்னுமொரு ஜாதிக்கலவரம் வராமல் இருந்தால் அதுவே போதும்.
5 comments:
Yes you have posted just my feelings towards this incident! Even a ordinary people like us feel shivering and if we would have been there we would have atleast tried to stop those rascals! But being a police men,they were running like a cowards,girlishly from the scenario...I heard that only coz of press and public shouted they left that guy near gate,otherwise they would have killed him...
Even after he fainted they were beating means,they should have decided to kill him?!!
What such periya anger,to kill a mate?stupid rascals....how only their hand comes to beat another human being to death...
How much rods,iron rods how badly they were beating...
If i was their as a police men,then I would have shot them on the spot...as they dont deserve to be alive as a human being in this world...
Aambalaya irundha one for one sanda potirukkanum...other than that,oruthana 4 or more are beating to death means they are beasts...
Chennai is going in minus humanity...only god can save !!!!
i think those rascals are thinking them selves as action heros,as now a days more such firey kind of movies come,they are so badly inspired by that...even heroes and directors are responsiible for this...
and also this is the worst example,for how law is in hands of rowdies now a days...these rascals are future lawyers right?
see one of these guys are going to become judge in future....
And all people who watch this in tv are cursing those rascals,police,principal,government....may god give justice for this....
Cool down Raks...Our police knew only to provide security to uneducated politicians and can do nothing to maintain law and order.Can a citizen enter a police station with dignity ?They are the most corrupt dept in our state.Shame on them.I sincerely hope TN does not become another Bihar of south.
I read the reasons behind the issue. Varra vaandhium uLLa poiduthu!.
Man, where are those days of gangs fighting over a girl! I miss it.
Raks, cant agree more
Tamilan, agree with you too..
Deepak, he he.. ive seen those types. It had a jolly factor in.
Post a Comment