Saturday, November 08, 2008

ஜேம்ஸ் பாண்டு - Not Not 7 !!



ஜேம்ஸ் பாண்டு என்றால் யார் ?

கட்டிய டை அழுக்காகாமல், வாட்ச் பட்டன்களை அமுக்கி பாம் வெடிக்கச் செய்து, கட்டை விரலில் கார் ஓட்டி, மந்தகாசப் புன்னகையில் அழகான பெண்டிரை மயக்கி ரொமான்ஸ் செய்து, அதகளம் செய்து ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் சண்டையிலிருந்து வெளியே வரும் ஸ்டைலான ஒரு ப்ரிட்டிஷ் ஏஜண்ட். ஒரு லார்ஜர் தேன் லைஃப் ஹீரோ. அவரால் சாத்தியமாகாதது எதுவும் இல்லை. வில்லன் க்ரூப் பெண்ணாக இருந்தாலும் இலகுவாக செட்யூஸ் செய்து மடக்கிவிடுவார். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் Q விடம் வாங்கிய ஒரு பேனாவையோ, காரையோ அல்லது ஒரு வித்தியாசமான-மர்மமான ஒரு சாதனத்தின் உதவியால் தப்பிவிடுவார். மணிபென்னியுடன் உருகுவார். "மை நேம் இஸ் பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட்" என்று ஸ்டைல் காட்டுவார்.

ஊஹும் !!

இவை எதுவும் இல்லை "குவாண்டம் ஓஃப் சோலேஸ்"ல்.

சத்யம் தியேட்டரில் ஹாயாக மாடியில் போய் உட்கார்ந்து விசிலடிப்பதற்கு ரெடியாகி எங்கே அடிக்கலாம் என்று படத்தின் இறுதிவரை காத்திருந்ததுதான் மிச்சம். "போங்கடா ! நீங்களும் உங்க "மாடேர்ன்" பாண்டும்" என்று டைரக்டர் பேர் இறுதியில் வரும்போது சொல்லிவிட்டு வந்தேன்.

ஜேம்ஸ் பாண்ட் ஸீரீசைத் தயாரிக்கும் EON குழுமம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முடிவுக்கு வந்தது. "ஜேம்ஸ் பாண்டை - இந்த சில்லியான கேட்ஜட்டுகளிடமிருந்து வெளியே கொண்டுவந்து நிஜமான நாவலில் தோன்றும் பாண்டு போல காட்சியளிக்கச் செய்ய வேண்டும். அவர் உடம்பில் ரத்தம் சிந்த சண்டையிட வேண்டும். அவருக்கும் அடிபட வேண்டும். இவ்வளவு காமாந்தகனாக இருக்கக் கூடாது. Lets bring him back to the roots" என்று முடிவு செய்தனர். அதன் விளைவே கடைசியாக வெளிவந்த "கேஸினோ ராயல்".

இதில் ஜேம்ஸ் பாண்டு, பாவம், நம்ம ஊரில் லீவு நாளில் லாரியில் தண்ணீர் பிடிக்க ஓடும் குடும்பத் தலைவன் போல அதீதமான கஷ்டப்பட்டு வில்லன்களை வீழ்த்துவார். ஜேம்ஸ் பாண்டின் ஸ்டைலில் கிறங்கிப் போகாமல், அவர் மீது பச்சாதாபமே எஞ்சியது. படம் ரொம்ப யதார்த்தமாக இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். "குவாண்டம் ஓஃப் சோலேசும்" அப்படித்தான். ஆனால் ஜேம்ஸ் பாண்டு படங்களில் என்ன புண்ணாக்கு யதார்த்தம் வேண்டியிருக்கிறது.

கேஸினோ ராயலில் இறந்துபோன தன் காதலியின் மூலமாக மிஸ்டர் ஒயிட்டை விரட்டுவதிலிருந்து ஆரம்பிக்கிறது "QOS". படம் நெடுக சண்டைகள். ஓட்டலுக்கு வெளியே சண்டை போட்டுவிட்டு ரிசெப்ஷனுக்கு சென்று சாவி வாங்கிக்கொண்டு வந்து ரூமுக்குள் சண்டை போடுகிறார். அப்புறம் வெளியே வந்து மறுபடியும் சண்டை போடுகிறார்.. யப்பப்பா !

சண்டைக் காட்சிகளைப் பார்க்கத்தான் காசு கொடுத்து வந்தோம் என்பது உண்மைதான். ஆனால் ஒரு சண்டைக் காட்சியாவது தெளிவாக இல்லை. பாண்ட் ஒரு குத்துவிட கை ஓங்கினால், ஓங்குவதைத் தான் காண்பிக்கிறார்கள். அப்புறம் ஒருவர் கீழே விழுகிறார். பாண்ட் மூக்கில் ரத்தம்... இப்படி எதுவுமே தெளிவாக இல்லாத ஒரு சண்டை. ஸ்வாரஸ்யமே இல்லை. விறுவிறுப்பான காட்சிகள் என்றால் ஃபாஸ்ட் எடிட்டிங் செய்து.. பிய்த்துப் பிய்த்து போட வேண்டுமா என்ன ? சே ! பயங்கரமான வெறுப்பு.. என்ன படம் எடுக்கிறார்கள்.

இதே ரேஞ்சில் போனால், வடிவேலுகூட ஜேம்ஸ் பாண்ட் ஆகிவிடலாம். எல்லாரிடம் அடி வாங்குவதற்கு ஜேம்ஸ் பாண்ட் எதற்கு.. கைப்பிள்ளை போதாதா ?

படத்தின் கதை.. இன்னும் பெரிய ஏமாற்றம். பொலிவியாவில் ஆட்சியைக் கவிழ வைத்து, ஒரு பாலைவனத்தை வாங்கி அங்கே நீர் நிலைத் தேக்கம் செய்து, பிசினஸ் செய்ய நினைக்கும் வில்லன். சே ! நம்ம குருவி பட வில்லன் கூட நல்லவிதமான வில்லத்தனம் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் என்றால், சீன சப்-மெரைன்களை வெடிக்க வேண்டும்... ஒரு நாட்டில் கிளர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.. அதற்குத் தான் ஜேம்ஸ் பாண்ட் வந்து அட்டூழியங்களை அடக்கிஒடுக்க வேண்டும்.

மன்னித்துவிடுங்கள்... என்னால் இந்த ஏமாற்றத்தை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. கேரக்டர் அஸாஸினேஷன் என்றால் இதுதான். ஒரு கதாபாத்திரப் படுகொலை.

இதே ரீதியில் சென்றால், பாண்டு படங்களை இழுத்து மூடவேண்டியதுதான்.

4 comments:

Anonymous said...

"எல்லாரிடம் அடி வாங்குவதற்கு ஜேம்ஸ் பாண்ட் எதற்கு.. கைப்பிள்ளை போதாதா ?"

Idhukku oru repeatu! Enakkennavo pona James Bond padathilerndhe interest koranjidichu.

Kaipillai is a better entertainer!

Shreekanth said...

Adutha padathula avaru Namba ooru pakkam vandhu .... Hmmmm Jenaa Bonaaa...vidra vidra nnu sollittu povaaru...Meesai illamaye :)

M Arunachalam said...

They should change the Bond actor - Daniel Craig - first. His face is un-Bond-like.

And then, as you have rightly pointed out, they should go back to the original Bond characteristics.

Otherwise, James Bond movies are bound to lose their loyal audience.

KRTY said...

Kundalakesi, :P

Sreekanth, he he.. !!

Arunachalam, badly miss Mr. Brosnan. !